மாணவப் பருவத்திலேயே திராவிடக் கொள்கைகளை ஏற்று பல்வேறு போராட்டங் களில் பங்கேற்றவர் ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன். 35 வருடங்களுக்கு மேலாக திராவிடக் கொள்கைகளை மேடைகளில் பேசியும், தொடர்ந்து எழுதியும் வருகிறார். தற்போது பெரியாருக்கு எதிரான கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில்... நக்கீரனுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியா ருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சீமான். தொடர்ந்து தனது கருத்தில் உறுதியாக இருக்கிறாரே...
தி.மு.க.வை எதிர்த்து பிரதான கட்சிகள் யாரும் போட்டியிடாத காரணத்தினால் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என எப்போதும் போல பெரியாரை எதிர்த்து பெரி யார் மண்ணில் வாய்ச் சவடால் பேசினார். ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்லியிருக் கிறார்கள். டெபாசிட்டை இழந்திருக்கிறார். பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையிலும் கூட டெபாசிட் வாங்க முடியவில்லை என்று சொன்னால் தமிழ்நாட்டின் அரசியல் குப்பைக்கூடையில் வீசி எறியப்பட்டிருக்கிறார்.
தி.மு.க. மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. யாருடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளாரே சீமான்?
பா.ஜ.க.வின் இன்னொரு தொங்கு சதையாக, ஆர்.எஸ்.எஸ்.ஸால் உருவாக்கப்பட்டி ருக்கிற அமைப்பு சீமானுடைய நாம் தமிழர் கட்சி. இதனை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரியாரை அவர் விமர்சனம் செய்கிறபோது "சீமான் எங்களுக்கு பி டீம் அல்ல, தீம் பார்ட்னர்' என்று தமிழிசை சௌந்திரராஜன் சொன்னார்.
வெளிப்படையாக சீமானுக்கு ஓட்டு கேட்டார்களா?
வெளிப்படையாக ஓட்டு கேட்கவேண்டிய அவசியம் இல்லை. சீமான் சொல்வதை ஆதரிக்கி

வெளிப்படையாக ஓட்டு கேட்கவேண்டிய அவசியம் இல்லை. சீமான் சொல்வதை ஆதரிக்கிறேன் என்று சொன்னாலே போதும். அங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க. மா.தலை வர், எச்.ராஜா உள் ளிட்ட அக்கட்சி யினர் சீமானுக்கு வேலை செய்திருக் கிறார்கள். உன் நண்பர் யார் என்று சொல் உன்னை சொல் கிறோம் என்று சொல்வதைப் போல, சீமானுடைய நண்பர்கள் யார் என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். முதன்மையான கட்சிகள் போட்டியிடாத நேரத்திலும்கூட டெபாசிட் வாங்கவில்லை என்றால் சீமானை எந்த இடத்தில் மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இடைத்தேர்தல் உதாரணம்.
2008ல் பிரபாகரனை சந்தித்த பிறகுதான் திராவிட இயக்கத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர், இத்தனை வருடத்திற்கு பிறகு இப்போது ஏன் விமர்சனத்தை வைக்கிறார். நான்கு வருடங் களுக்கு முன்புகூட பெரியார் நினைவுநாளை அவரது கட்சி அலுவலகத் தில் அனுசரித்தவர் தான். தமிழ்நாட்டு அரசியலில் எந்த காலத்திலும் விடு தலைப்புலிகள் அமைப் போ, தலைவர் பிரபா கரனோ தலையிட்டதே கிடையாது. கருத்து சொன்னதே கிடையாது. ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிட இயக்கங்களின் போராட்டங்கள் எங்க ளுக்கு உத்வேகம் அளித்தது என்றுதான் பிரபாகரனுக்கு ஆலோசனை சொல்லக் கூடிய இடத்தில் இருந்த பாலசிங்கம் தனது நூலில் எழுதியிருக்கிறார். கலைஞர் காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, தமிழ்நாட்டு அரசியல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பிரபாகரன் சொன்னதே கிடையாது, அறிவித்ததே கிடையாது. ஆனால் இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்வைக்கிறேன் என்று சொல்லி பெரியாரையும் பிரபாகரனையும் நேர் எதிராக நிறுத்துவது என்பதே ஒரு கடைந் தெடுத்த அயோக்கியத்தனம். தற்குறித்தனம். அங்குள்ள போராட்டத்தையே என் தோளுக்கு மடைமாற்றிவிட்டதாக, முன்னெடுத்து செல்லுங்கள் என்று பிரபாகரன் சொன்னதாக சொன்னார். எந்த நாட்டினுடைய விடுதலைப் போராட்ட தலைவர்களும், தங்கள் மண்ணுக் கான விடுதலையை அவர்கள்தான் போராடி வென்றிருக்கிறார்களே தவிர, இன்னொரு இடத்தில் ஒப்படைத்துச் சென்றதாக வரலாறு இல்லை. எதுவுமே தெரியாமல் பேசிக்கொண்டி ருக்கிறார் சீமான். தமிழ்த் தேசியத்துக்கான முதல் விதையை போட்டதே தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்தான்... பெரியார்தான்.
திராவிடம் என்ற சொல்லே கிடையாது என்கிறாரே சீமான்?
இவர் மானுட ஆய்வாளரோ, மொழியியல் வல்லுநரோ கிடையாது. திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், திராவிடம் எப்படி வந்தது என்பதற்கு... "திராவிடத் தாய்' என்கிற புத்தகத்தையே எழுதியிருக்கிறார். இது தொடர்பாக விவாதம் செய்ய எந்த இடத்திலும் நான் தயார்.
சீமானை நான் சந்திக்க வில்லை என்று பிரபாகரனே வந்து சொன்னாலும் சீமானை தலைவராக ஏற்றுக்கொள்வோம் என்கிறார்களே நாம் தமிழர் கட்சியினர்...
பிரபாகரன்தான் தங்க ளுக்கு தலைவர் என சீமான் பொய்யான பிரச்சாரம் செய்கிறார் என்று நாங்கள் தொடர்ந்து சொன்னது இன்று உண்மையாகிவிட் டது. இவர்களுக்கு தலைவர் பிரபாகரன் கிடையாது, இவர்களுக்கு வழிகாட்டுவது பிரபாகரனின் தமிழ்தேசியம் கிடையாது. இவர்களுக்கு வழிகாட்டுவது, கலங்கரை விளக்கமாக இருப்பது நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமைதான். அந்த அமைப்புதான் வழி நடத்துகிறது என்பதுதான் உண்மை. அதில் கிஞ்சிற்றும் சந்தேகம் கிடையாது.
குருமூர்த்தி, பா.ஜ.க.வுடன் தொடர்புபடுத்தி பேசுவது, விமர்சனங்களை வைப்பது பைத்தியக் காரத்தனம் என பதிலடி கொடுக்கிறார்களே...
நாம் தமிழர் இயக்கம் என்கிற பதிவு செய்யப்பட்ட பெயரை பெற்றுக் கொடுத்தது குருமூர்த்தி என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. சம்பந்தப்பட்டவர்களே இதனை தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் யாரும் இதனை சொல்லவில்லை. பைத்தியக்காரத் தனமாக பேசுவது, செயல்படுவது, மேடைகளில் ஆதாரமற்ற அவதூறுகள் எனச் செய்வ தெல்லாம் சீமான். இவர் யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்துவிட்டது.
ஆதாரம் இல்லாமல் நாங்கள் பேசவில்லை. பெரியார் பேசியதை பேசுகிறோம். அதற்கான ஆவணங்களை, பெரியாரை யார் கொண்டாடு கிறார்களோ அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களை வெளியிடச் சொல்லுங்கள் என்பதுதானே அவர்களின் வாதம்?
திருக்குறளிலேயே இடைச்செருகலை உள்ளே புகுத்தி வர்ணாசிரம தர்மத்தோடு ஒத்துப்போகிற மாதிரி எழுது கிறார்கள். இடைச்செருகலை தடுக்கணும் என்பதற்காக, பெரியாருடைய உரைகளை, சிந்தனைகளை பொது வெளியில் வெளியிடுவதற்கு திராவிடர் கழகம் விரும்ப வில்லை. அது இருக்கட்டும். பெரியார் சொன்னதாக இவர் பேசினாரே, அந்த ஆதாரத்தை எங்கிருந்து எடுத்தார். குடியரசு இதழ் டிஜிட்டல் ஆக்கப்பட்டி ருக்கிறது. விடுதலை ஏடும் டிஜிட்டல் செய்யப்பட்டுள் ளது. மறைக்கவில்லை, யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் இவர் இட்டுக்கட்டிய அவதூறை, பெரியார் மீது வன்மம் கக்குவதற் காக பிரச்சாரம் செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியாக மாறியிருக்கிறார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். கருத்தியல் போர் நடத்தி வெற்றி பெற்றது திராவிட இயக்கம். ஆரிய, திராவிட போர் என்று சொல்லிதான் இந்த மண்ணில் பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலும் அதற்குப் பிறகு திராவிட இயக்கமாக வந்த காலத்திலும், இந்த நாட்டில் கருத்தியல் போரை தொடங்கி வைத்தது திராவிட இயக்கம்.
ஆரியர், திராவிடர் என்று சொல்லியே பிழைப்பு நடத்துகிறார்கள் என்று சொல்கிறாரே?
இவர் பிழைப்புக்காக அதனை மடை மாற்றிவிடுகிறார். உலக சரித்திரம் எழுதிய நேருவைவிட இவர் பெரிய அறிவாளியா? கால்டு வெல்லை இன்று ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாடுகளில் இருந்து வந்த மேற்கத்திய அறிஞர் மதத்தை பரப்புவதற்காக வந்தவர், இங்கு ஆரியர் திராவிடர் என்ற வேற்றுமையை விதைத்தார் என்று சொல்லு கிறார். ஆர்.என். ரவியாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். ரவியாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் பயணிக் கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்கிறாரே ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்?
இந்த விசயத்தில் ஒன்றிய அமைச்சர் சொல்வது கண்டிக் கத்தக்கது. இங்கு எதற்கு மும்மொழிக் கொள்கை? இதனை பயன்படுத்தி இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது மாநில கல்விக்கொள்கையை நசுக்குகிற செயல். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு. மும்மொழிக் கொள்கையால் எந்த லாபமும் இல்லை. குஜராத்தைச் சேர்ந்த ஆகாஷ் படேல் என்கிற எழுத்தாளர் பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் எழுதும்போது, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக் கிறார்கள். ஆங்கிலத்தில் புலமை பெற்றி ருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தபோது, 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இருமொழிக் கொள்கைதான் என முடிவெடுத்துவிட்டார்கள். குஜராத்தில் இந்தி, குஜராத்தி என எடுத்துவிட்டு பின்தங்கி இருக்கிறோம் என்று பதிவு செய்திருக்கிறார். எனவே மும்மொழிக்கொள்கைக்கு ஒரு நாளும் தமிழ்நாட்டில் இடம் கிடைக்காது. இதை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும்.
சந்திப்பு: -வே.ராஜவேல்