மனிதர்களை உயிராகப் பார்ப்பது நம் பாரம்பரிய மருத்துவமே! -நக்கீரன் ஆசிரியர் உணர்ச்சிகரமான பேச்சு!

ss

துரையில், இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் சார்பில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாற்று மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் மாற்று மருத்துவம் குறித்து கருத்தரங்கம், வாழ்த்து அரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பங்கேற் பாளர்களாக நமது நக்கீரன் ஆசிரியர் மற்றும் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் தலைவர் வெங்கடாசலம், மருத்துவர்கள் தனபாலன், பத்மநாதன், வெங்கடாசலம், அருண் சின்னையா, ஜெயக்குமார், சுசீலா உள்ளிட்ட பல பாரம்பரிய மருத்துவர்கள், மாற்று மருத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

இம்மாநாட்டில், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, யோகா, அக்குபஞ்சர், பாரம்பரிய நாட்டு வைத்தியம், மூலிகை மருத்துவம், மலர் மருத்துவம், வர்ம சிகிச்சை உள்ளிட்ட அனைத்துவகை மாற்று மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

tt

இந்த மாநாட்டில் இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் தலைவர் வெங்கடாச்சலம் பேசும்போது, "உலக சுகாதார மையம் 135 மருத்துவ சிகிச்சைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஆனால் ஆயூஷ் என்ற பெயரில் ஐந்து மருத்துவத்துக்கு மட்டும்தான் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. இதில், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, யோகா மட்டுமே உள்ளன. 1973-ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில், நம் நாட்டு மாற்று மருத்துவம் குறித்து சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, அனைத்து நாடுகளிலும் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டார்கள். ஆனால் இந்திய அரசோ இதுநாள் வரை மாற்று மருத்துவத்திற்கு எந்தவித நிதி

துரையில், இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் சார்பில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாற்று மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் மாற்று மருத்துவம் குறித்து கருத்தரங்கம், வாழ்த்து அரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பங்கேற் பாளர்களாக நமது நக்கீரன் ஆசிரியர் மற்றும் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் தலைவர் வெங்கடாசலம், மருத்துவர்கள் தனபாலன், பத்மநாதன், வெங்கடாசலம், அருண் சின்னையா, ஜெயக்குமார், சுசீலா உள்ளிட்ட பல பாரம்பரிய மருத்துவர்கள், மாற்று மருத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.

இம்மாநாட்டில், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, யோகா, அக்குபஞ்சர், பாரம்பரிய நாட்டு வைத்தியம், மூலிகை மருத்துவம், மலர் மருத்துவம், வர்ம சிகிச்சை உள்ளிட்ட அனைத்துவகை மாற்று மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

tt

இந்த மாநாட்டில் இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் தலைவர் வெங்கடாச்சலம் பேசும்போது, "உலக சுகாதார மையம் 135 மருத்துவ சிகிச்சைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஆனால் ஆயூஷ் என்ற பெயரில் ஐந்து மருத்துவத்துக்கு மட்டும்தான் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. இதில், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, யோகா மட்டுமே உள்ளன. 1973-ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில், நம் நாட்டு மாற்று மருத்துவம் குறித்து சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, அனைத்து நாடுகளிலும் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டார்கள். ஆனால் இந்திய அரசோ இதுநாள் வரை மாற்று மருத்துவத்திற்கு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை. உலகளவில் ஆங்கில மருத்துவ மாஃபியா நெட்வொர்க் பல லட்சம் கோடி மருந்துகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்டுவதால் இவர்கள் மாற்று மருத்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

ஆங்கில மருத்துவத்தால் நமது நாட்டின் மரபுசார் மருத்துவர்கள் பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளதுடன், அவை தவறானவையென்றும், அறிவியல் அடிப்படையற்றவை என்றும் சித்தரிக்கப்பட்டன. ஆனால் மரபு மருத்துவர்கள், விளிம்பு நிலை மக்களுக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் சிறந்த சேவையாற்றுகின்றனர். கடந்த அரை நூற்றாண்டாக பாரம்பரிய அனுபவ மருத்துவம் உலகின் பல நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்து மக்களின் வரவேற்புடன் இயங்கி வருகிறது. மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளும் மக்களிடம் பரவியுள்ளன. மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப தேவையான மருத்துவ சிகிச்சைகளை தேர்வு செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் அனைத்தும் இயற்கை சார்ந்தவை. ரசாயன மருந்துகள் அற்றவை. பக்க விளைவுகள் அற்றவை. இவற்றை தடையில்லாத் தொழிலாக லட்சக்கணக்கானவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஒன்றிய, மாநில அரசுகள் பாரம்பரிய அனுபவ மருத்துவர்களையும், மாற்று முறை மருத்துவர்களையும் அங்கீகரித்து தகுந்த தகுதி வழங்க வேண்டும். மாற்றுமுறை மருத்துவர்களின் கண்ணியமான, பாதுகாப்பான வாழ்வுரிமையை அரசுகள் உறுதி செய்து, அவர்களை ஆக்கப்பூர்வமான சமூக சக்தியாக மாற்ற வேண்டும்'' என்று பேசினார்.

tt

அடுத்து பேசிய டாக்டர் தனபாலன், "கொரோனா காலத்தில் ஆயுஷ் மருத்துவர்களும் மாற்று மருத்துவர்களும் அரசுக்கு பக்கபலமாக செயல்பட்டு சேவையாற்றி னார்கள். சேவைக்கான சான்றித ழோ, சில மாதங்களுக்கான ஊதியமோ கூட இன்னும் அவர் களுக்கு வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பாரம்பரிய வைத்தியங்களின் துணிச்சலான சேவைகளை மறக்கவோ, மறைக்கவோ முடியாது. அவர் களை அரசு அங்கீகரித்து ஊக்குவிப்பது அவசியம்'' என்றார்.

டாக்டர் அருண் சின்னய்யா பேசும்போது... "ஙண்ய்ண்ள்ற்ழ்ஹ் ர்ச் ஆஹ்ன்ள்ட் துறையின்கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் புறக் கணிக்கப்படுகின்றன. மாறாக ஆயுர்வேத மருத் துவத்தில் பட்டய படிப்புகள் (க்ண்ல்ப்ர்ம்ஹ இன் ல்ஹய்ஸ்ரீட்ஹ ந்ஹழ்ம்ஹ) ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹ் ஆப் ஆஹ்ன்ள்ட் துறையினரால் இந்தியா முழுமையும் நடத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் உள்ள வர்மா புறக்கணிக்கப்படுகிறது. இக்குறை யினை போக்க நமது தமிழக அரசால் உரு வாக்கப்படவுள்ள சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவ இணை துறைகளை இனங்கண்டறிந்து குறிப்பாக... வர்மா, சித்த உணவியல், உளவியல் போன்ற துறைகளில் பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதன் மூலம் பாரம்பரிய மருத்துவர்களும் பட்டயம் பயின்று தகுதியுடன் சித்த மருத்துவ சேவையாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

tt

விழாவில் சிறப்புரையாற்றிய நக்கீரன் ஆசிரியர், "மருத்துவம் என்பது பெருவணிகம் ஆகிவிட் டது. கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்கள், பரம்பரை மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. லட்சக்கணக் கான மனித உயிர்களைக் காப் பாற்றிய பெருமை அவர்களுக்கு உண்டு. கொரோனா காலத்தில் ஆங்கில மருத்துவர்களும், ஆங்கில மருத்துவமனைகளும் கொரோனாவைக் கொண்டாடித் தீர்த்தனர். இதை சாக்காக வைத்து மருத்துவமனையின் கடன் அடைத்து இரண்டு, மூன்று மருத்துவமனைகளைக் கட்டியதுதான் ஆச்சரியம். பாடகர் எஸ்.பி.பி. போன்ற பெரிய மனிதர்கள் இறந்ததுதான் மிச்சம். அந்த சமயத்தில் சித்தா, நாட்டு வைத்தியம், நம் பாரம்பரிய வைத்தியங்கள்தான் நம் மக்களுக்கு தைரியமாக சிறப்பாக செயல்பட்டன. கபசுர குடிநீர் வெகுவாக வேலை செய்தது. பல உயிர்களைக் காப்பாற்றிய ஆங்கில மருத்துவர் சைமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோது அவரை புதைக்கக்கூட இடம் கொடுக்காமல் அலைக் கழித்தனர். அந்த அளவிற்கு கொரோனா பயம் மக்களிடம் காணப்பட்டது.

முதல் கொரோனாவில் சைமனை ஒரு சுடுகாட்டில் புதைக்கக்கூடாது என்று மக்கள் போராடினர். போலீஸ் பாதுகாப்போடுதான் புதைத்தனர். அவர் மனைவி, "நாங்கள் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யணும்' என கோர்ட்டுக்குச் செல்ல... பிணத்தை தோண்டி எடுத்தால் கொரோனா பரவிவிடும் என்று மறுக்க... அடுத்த கொரோனாவில் ஒரே குழியில் 10 உடல்களைப் போட்டு அடக்கம் செய்தனர். இந்தக் கொடுமையை என்னன்னு சொல்றது?

அதேபோன்றுதான் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கல்லீரல் நோய் முற்றி சென்னை யிலுள்ள பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது நான் அவரை பார்க்கச் சென்றேன். அவர் என்னிடம் "அண்ணே மருத்துவச் செலவு, ஆபரேஷனுக்கு 70 லட்சம் ஆகும் என்கிறார்கள். என்னிடம் நகை, 8 லட்சம் உள்ளது. அலுவலகம் விற்றால் 35 லட்சம் வரை புரட்ட முடியும்ணே' என்றார். அதற்கு நான், "நீங்க சம்பாதிச்சதெல்லாம் கொடுத்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று முக்கியமில்லை. ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வாருங்கள். ஆங்கில மருத்துவத்தில் கல்லீரலுக்கு சிகிச்சை அளிப்பதை விட மாற்று மருத்துவத்தை நாடுங் கள். சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று வைத்தி யத்தைப் பாருங்கள். இங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகுங்கள்' என்றேன்.

அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், "ஐ.சி.யூ.விலிருந்து உடனே டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. பேஷண்ட் வீக்காக இருக்கிறார். இந்த நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது கடினம்' என்றனர். எனக்கு அவர் போன் செய்தார். "அண்ணே, சாலிகிராமத்தில் எனக்கு இடம் இருக்கிறது. அதை விற்றுதான் வைத்தியம் பார்க்க வேண்டும். அதற்கு கையெழுத்து போட பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நான் போகவேண்டும். எனவே என்னை டிஸ்சார்ஜ் செய்யச் சொல் லுங்கள்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்படியே நான் கூற, அடுத்த நிமிடமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனே நான் சொன்ன ஆயுர்வேத மருத்துவரை சென்று பார்த்து அதற்கான வைத்தியம் எடுத்துக் கொண்டார். முழுவதுமாகக் குணமாகி, பிறகு இரவு, பகல் பாராமல் பாடல்கள் எழுதி, இருதய அட்டாக்கில் உயிர்விட்டார். சிறிது நாட்கள் கழித்து அதே கார்ப்பரேட் மருத்துவமனையி லிருந்து எனக்கு ஒரு போன். "சார், எங்கள் மருத்துவமனையிலிருந்து ஒரு புராடக்ட்டை எடுத்துச் சென்றுவிட்டீர்கள்' என்றனர். நான், "அப்படி எதுவும் எடுத்துச் செல்லவில்லையே' என்றேன். அதற்கு, எதிர்முனையில் பேசிய நபர், "நான் ஒரு ப்ராடக்ட் என்றது நா.முத்துக் குமாரைத்தான். நீங்கள் சொல்லித்தான் அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். அவரை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டீர்கள்' என்று சொன்னதும், எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

மனித உயிரை மனிதனாகப் பார்க்காமல் தங்களுக்கு வருமானம் வரக்கூடிய பொருளாகப் பார்ப்பது எவ்வளவு வேதனை அளிக்கிறது. நம் பாரம்பரிய வைத்தியம் மட்டும்தான் நம்மைப் பாதுகாக்கும். காலத்தை வென்று நிற்கும் நமது பாரம்பரிய மருத்துவங்களை முழுமை யாகப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். பாரம்பரிய அனுபவ மருத்துவர்களையும், மாற்றுமுறை மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முடிக்கவும் கைதட்டல் அடங்க வெகுநேரமாகியது.

nkn230425
இதையும் படியுங்கள்
Subscribe