(5) ஒரே தேசம் எனும் கோஷம்!
உ.பி. மாநில தேர்தல் களத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளாக எதையும் கூறமுடிய வில்லை. மாறாக, கடந்த தேர்தலின் போது விதைத்து அறுவடை செய்த அதே பகைமை விதைகளைத்தான் இப்போதும் தூவுகிறார். அவர் மட்டுமல்ல, பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட இதே பாணியைத் தான் பின்பற்றுகின்றனர்.
உ.பி. தேர்தல் 80 சதவீதத்திற்கும், 20 சதவீதத்திற்கும் இடையில் நடக்கும் மோதல் என்றார் யோகி ஆதித்யநாத். இந்துக்கள் 80 சதவீதம் என்றும், முஸ்லீம்கள் 20 சதவீதம் என்றும் மக்களை மதரீதியாக பிரித்தாள முயல்கிறார். இன்னும் ஒருபடி மேலே சென்று, "நான் மீண்டும் முதல்வரானால், முஸ்லீம் பெண்கள் எல்லாம் பொட்டு வைத்துக்கொள்வார்கள்'' என்றும் விஷமமாகவும், விபரீதமாகவும் பேசியுள்ளார். இது ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்து ஒலித்து வரும் குரலைத்தான் அவர் எதிரொலிக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி பிரதானமாக இரண்டு கோணங்களில் ஆய்வு செய்யலாம். அதனுடைய கருத்தியல் மற்றும் செயல்முறை. இந்த இரண்டு அம்சங்களுக்கு உள்ளே சென்று ஆழமாக அலசினால், பல ஆபத்தான பரிமாணங்கள் நமக்குப் புரியும்.
1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். உருவானது. ஆனால், அதற்கு முன்பும் பின்பும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவான இந்து மகாசபா உள்ளிட்ட பல மதவாத அமைப்புகளை அது சுவீகரித்துக்கொண்டது. இப்போதும் வெவ்வேறு பெயர்களில் எண்ணிலடங்கா சங்பரிவார அமைப்புகள் இயங்கி வந்தாலும், அவற்றின் கோட்பாட்டுக்கும் செயல்முறைக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்.
சங்பரிவார அமைப்புகளுக்கு மட்டுமல் லா

சங்பரிவார அமைப்புகளுக்கு மட்டுமல் லாமல், மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆளக்கூடிய பா.ஜ.க.வுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி வழிகாட்டுவதும் ஆர்.எஸ்.எஸ்.தான். சாவர்க்கர், மூஞ்சே, ஹெக்டேவர், கோல்வால்கர் போன்றவர்கள் தனித்தனியாக இந்துத்துவா -இந்துராஷ்டிரா கோட்பாட்டை விளக்கியும், வலியுறுத்தியும் பல நூல்கள் எழுதியிருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கென்று ஒரு இதழ் வெளியிடப்பட்டது 1947-ல்தான். "ஆர்கனைசர்' என்ற அந்த வார இதழின் முதற்பிரதி 3.7.1947 தேதியிடப்பட்டிருந்தாலும், அது கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது 14.8.1947 அன்றைக்குத்தான். கடைகளுக்கு விற்பனைக்கு வந்த தேதி முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம், அன்று நள்ளிரவுதான் இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. முதல் இதழில் எழுதப்பட்ட முதல் தலையங்கம் ஆர்.எஸ்.எஸ்.ஸினுடைய கொள்கைப் பிரகடனமாக அமைந்துள்ளது.
"புகழ்மிக்க இந்து தேசம்'’என்ற தலைப்பிலான அந்தத் தலையங்கத்தில், “"ஒரே தேசம் -ஒரே புகழ்பெற்ற, மகத்துவமான இந்து தேசம் எனும் வேத ஞானிகளின் எழுச்சிக் குரலால் விண்ணுலகை நிரப்புவோம்''’என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது லட்சியம் இந்து ராஷ்டிரம் என இந்திய விடுதலை நாளில் பிரகடனப்படுத்தியது.
1949-ஆம் ஆண்டு செப்டம்பரில் லக்னோவில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ். எஸ்.ஸின் தலைவர் கோல்வால்கர், “இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பாரதத்தினருக்கு எதிரானது (Unbharath) என கடுமையாக கொந்தளித்திருக் கிறார்.
26.11.1949 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வரைவுக்குழு முன்வைத்த அரசமைப்பு அறிக்கையை நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. அடுத்தடுத்து வெளியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆர்கனைசர் ஆங்கில இதழில் அரசியல் சட்டத்தை கடுமையாகத் தாக்கி பல கட்டுரைகள் வெளியானது. 30.11.1949 தேதியிட்ட ஆர்கனைசர் அதனுடைய தலையங்கத்தில் “மனு நீதியை அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி அரசியல் சட்டம் எதுவும் கூற வில்லை. உலகமே மனுநீதியை பாராட்டுகிறது, ஆனால் அரசியல் சட்டத்தை உரு வாக்கிய பண்டிதர் களுக்கு மனு நீதி ஒரு பொருட் டாகவே பட வில்லை” என பொருமியிருக்கிறது.
மேலும், இந்திய குடியரசு பிரகடனப்படுத்தப் பட்டதற்கு முதல் நாள், 25.01.1950 தேதியிட்ட ஆர்கனைசர் இதழில், “மனு நம் இதயத்தை ஆளுகிறது” எனவும், மனுநீதியை நமது தேசத்தின் சட்டமாக ஆக்கிட வேண்டுமெனவும் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கட்டுரை எழுதினார்.
ஆர்கனைசர் இதழில் வெளியான மேற்கண்ட தலையங்கம் மற்றும் கட்டுரைகள் ‘இந்தியா- இந்துதேசம்’ எனக் கூறி ஆர்.எஸ்.எஸ். முன்னோடி கள் சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்கள் முன்வைத்த கருத்தியலின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அந்நியர் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை யான இந்திய குடியரசு மத அடிப்படையிலான அரசாக இருக்க வேண்டுமென்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மனுநீதியின் அடிப்படை யில் அமைந்திட வேண்டுமெனவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசியும், எழுதியும் வந்தனர்.
அரசு மதத்திற்கு அப்பாற் பட்டது, மதத்திடமிருந்து அரசு விலகியிருக்க வேண்டுமென அர சியல் நிர்ணய சபையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது கோல்வால்கர் அரசு மதச்சார்புள்ளதாக இருக்க வேண்டு மெனவும் இந்திய அரசு இந்து மத அடிப்படையிலான அரசாக இருக்க வேண்டு மெனவும் வலியுறுத்தினார்.
மதம் என்ற மந்திரக் கயிற்றால் நாட்டின் ஒற்றுமையை கட்டிக்காக்க முடியும் என கோல்வால்கர் கருதினார். சுதந்திரமடைந்த நமது நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக ஆகியது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டும் சேர்ந்தது தான் பாகிஸ்தான். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசு என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. மேற்கு பாகிஸ்தானில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் பேசும் மொழி உருது. கிழக்கு பாகிஸ்தான் (கிழக்கு வங்காளம்) மக்களின் தாய்மொழி வங்காளம். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் உருது ஆட்சி மொழி என அன்றைய பாகிஸ்தான் அரசு அறிவித்தது. வங்கத்தை தாய்மொழியாக கொண்ட கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதை எதிர்த்தனர். பாகிஸ்தான் அரசு உருதுதான் ஆட்சி மொழி என விடாப்பிடி யாக இருந்தது.
கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி விடுதலை போராக மாறியது. இப்போரில் கிழக்கு பாகிஸ் தானைச் சார்ந்த 30 லட்சம் பேர் கொல்லப்பட்ட னர். பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று வங்க தேசம் என தனி நாடானது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரண்டு பகுதி மக்களும் முஸ்லீம்கள் என ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் ஒற்றுமையை உருவாக்க முடியவில்லை. மதத்தின் அடிப்படையில் ஒரு தேசம் என்று கோல்வால்கர் சொல்லும் வாதம் அறிவியல் பூர்வமானதல்ல.
அந்நியர் ஆட்சிக்கு எதிராக பல மதங்களை சார்ந்த, பல இனங்களைச் சார்ந்த, பல மொழி பேசக்கூடிய அனைத்து பகுதி மக்களும் இணைந்து போராடியதால்தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. சட்டத்தின் முன்பு நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சட்டப் பிரிவு 14 கூறுகிறது. சாதி, மதத்தின் பெயரால் பாகுபாடு கூடாது என்று பிரிவு 15 கூறுகிறது. அதைப் போலவே மத நம்பிக்கையாளர் அனைவரும் அவரவர் நம்பிக்கையை அறிவிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் பிரிவு 25 உரிமை வழங்கியுள்ளது. பிரிவு 26ன் படி வெவ்வேறு மதப்பிரிவினருக்கு மத நிறுவனங்கள் நடத்துவதற்கும், அதற்கு சொத்து சேர்ப்பதற்கும், அதை பராமரிப்பதற்கும் உரிமை வழங்கியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மைகொண்டது என்பதை மேற்கண்ட பிரிவுகள் பறைசாற்றுகின்றன.
ஆனால், கோல்வால்கர் தனது நூலில் மதச்சார்பின்மை என்ற அம்சத்தை மறுத் திருக்கிறார். “மதம் தனிப்பட்டவரின் பிரச்சனை என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு பொதுவாழ்விலும், அரசியல் வாழ்விலும் இட மில்லை என்றும் பொதுவான போக்கு இருக்கிறது. இந்தப் போக்கு மதம் குறித்த தவறான தப்பெண்ணத்தின் அடிப்படையில் அமைந்த தாகும்” என வலியுறுத்தி னார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருவது, நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தேச ஒற்றுமையை பாதிக்கக் கூடியது. பல மதங்களைச் சார்ந்த, பல மொழி பேசக் கூடிய, பல இனங்களைக் கொண்ட மக்கள் வாழும் நமது நாட்டில் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி குடியரசுதான் பொருத்தமானது, தேவையானது என அரசியல் சட்ட நிர்ணய சபை முடிவுக்கு வந்தது. இதன் மூலமே தேச ஒற்றுமையை பேணிப் பாதுகாக்க முடியும்.
"செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனை ஒன்றுடையாள்'’என பாரதி பாடினார். பாரதியை புகழும் பா.ஜ.க.வினர் ஏன் பாரதியின் கருத்தை ஏற்க மறுக்கின்றனர்?
"வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே இந்திய தேச ஒற்றுமைக்கான பாதுகாத்திடும் தாரக மந்திரம்.
(தொடரும்)