Advertisment

மகாத்மா மண்ணில் மதவெறி! -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்) (23)

sss

(23) ஆர்.எஸ்.எஸ்.ஸும் -அதானி கூட்டணியும்!

ர்.எஸ்.எஸ். தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு இரண்டு முகங்கள். ஒன்று, வகுப்புவாத முகம். இன்னொன்று, கார்ப்பரேட் முகம்.

Advertisment

மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, தேச ஒற்றுமை, மதச்சார்பற்ற குடியரசு கட்டமைப்பு ஆகிய விழுமியங்களை பாதுகாக்க ஒன்றிய பா.ஜ.க. அரசின் இரண்டு முகங்களையும் எதிர்கொண்டு அரசியல், பொருளாதாரம், கருத்தியல், பண்பாடு, சமூகம் என பன்முகத் தளங்களில் மதச்சார்பின்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

aadhani

உலகப் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் கவுதம் அதானி 5வது இடத்தை பிடித்துள்ளார் என்று செய்தி வெளியாகி யுள்ளது (26.04.2022) . ஏற்கனவே ஐந்தாவது இடத்தில் இருந்த பெரும்பணக்காரர் வாரன் பஃபெட், இப்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொடிய வறுமையில் வாடுவோர் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் இந்தியாவிலிருந்து ஒருவர் உலகின் பெரும்பணக்காரர் ஆகிறார் என்றால் எத்தனை பெரிய முரண்பாடு இது. மிக மிகக் குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்ற கேள்வியும் இதனோடு இணைந்தே எழுகிறது.

கேரளாவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றி அதனுடைய பயங்கரவாத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெளியேறிய சுதிஷ் மின்னி என்பவர் ‘நரக மாளிகை’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ஓரிடத்தில் கவுதம் அதானியைப் பற்றி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். உழைப்பது யாருக்காக?

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சியில் சுதீஸ் மின்னியும் பங்கேற் றுள்ளார். அதனை கீழ்க்கண்டவாறு நூலில் குறிப்பிட் டுள்ளார். “துவக்க நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த வர்த்தக பிரமுகர்கள் அந்த சபையில்

(23) ஆர்.எஸ்.எஸ்.ஸும் -அதானி கூட்டணியும்!

ர்.எஸ்.எஸ். தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு இரண்டு முகங்கள். ஒன்று, வகுப்புவாத முகம். இன்னொன்று, கார்ப்பரேட் முகம்.

Advertisment

மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, தேச ஒற்றுமை, மதச்சார்பற்ற குடியரசு கட்டமைப்பு ஆகிய விழுமியங்களை பாதுகாக்க ஒன்றிய பா.ஜ.க. அரசின் இரண்டு முகங்களையும் எதிர்கொண்டு அரசியல், பொருளாதாரம், கருத்தியல், பண்பாடு, சமூகம் என பன்முகத் தளங்களில் மதச்சார்பின்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

aadhani

உலகப் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் கவுதம் அதானி 5வது இடத்தை பிடித்துள்ளார் என்று செய்தி வெளியாகி யுள்ளது (26.04.2022) . ஏற்கனவே ஐந்தாவது இடத்தில் இருந்த பெரும்பணக்காரர் வாரன் பஃபெட், இப்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொடிய வறுமையில் வாடுவோர் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் இந்தியாவிலிருந்து ஒருவர் உலகின் பெரும்பணக்காரர் ஆகிறார் என்றால் எத்தனை பெரிய முரண்பாடு இது. மிக மிகக் குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியமானது என்ற கேள்வியும் இதனோடு இணைந்தே எழுகிறது.

கேரளாவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றி அதனுடைய பயங்கரவாத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெளியேறிய சுதிஷ் மின்னி என்பவர் ‘நரக மாளிகை’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ஓரிடத்தில் கவுதம் அதானியைப் பற்றி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். உழைப்பது யாருக்காக?

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சியில் சுதீஸ் மின்னியும் பங்கேற் றுள்ளார். அதனை கீழ்க்கண்டவாறு நூலில் குறிப்பிட் டுள்ளார். “துவக்க நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த வர்த்தக பிரமுகர்கள் அந்த சபையில் வீற்றிருந்தனர். தற்போ தைய முக்கிய தொழில் அதிபர் ஒருவரும் அன்று சபை யில் இருந்தார். அவர் நிகழ்ச்சியில் யோகா செய்து காண்பித்தார். அவர்தான் அதானி என்று குறிப்பிட் டார்கள்’. இதற்குமேல் வேறு விளக்கம் தேவையில்லை.

மக்களின் பசியைப் போக்குவதை விடவும், வறுமையை ஒழிப்பதை விடவும், கார்ப்பரேட் நிறுவனங்களுடைய வளர்ச்சிக்கு வாரி வழங்குவது தான் மோடி அரசின் கொள்கை.

dd

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், மோடி தலைமையிலான மாநில அரசின் கண்ணசைவோடு சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையும் கலவரமும் நிகழ்த்தப்பட் டது. 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் அழித்தொழிக்கப்பட்டார்கள். குஜராத் கோப்புகள் என்ற நூலை படித்தால் இத்தகைய கொடூரங் களைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது இந்த வன்முறையை டாட்டா மற்றும் பஜாஜ் கார்ப்ப ரேட் கம்பெனிகளின் தலைவர்கள் கண்டித்தார்கள்.

ஜி.டி.பி. வளர்ச்சியில் மராட்டிய மாநிலத் திற்கு அடுத்ததாக குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதால் வன்முறையும், மதக் கலவரமும் தொழில் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற நோக்கத்தோடு அவர்களின் கண்டனம் அமைந்திருந்தது. ஆனால் அப்போது கவுதம் அதானி இந்திய தொழில் கூட்டமைப்பி லிருந்து (சி.ஐ.ஐ.) வெளியேறி ஒரு தனி அமைப்பை உருவாக்கினார். இப்போது புரியும், அதானியின் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவின் சூத்திரதாரிகள் யார் என்பது.

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, அனைத்து கார்ப்பரேட் கம்பெனிகளுமே மோடி அரசாங்கத்திற்கு ஆதர வைக் கொடுத்து வருகிறார்கள். இதற்கு கைமாறாக மோடி அரசு கண்ணீரும், செந்நீரும் சிந்தி தொழிலாளர்கள் வென்றெடுத்த உரிமைகளையெல் லாம் காலில் போட்டு மிதிக்கக்கூடிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிறை வேற்றிய சட்டங்களும், நடவடிக்கைகளும், இந்தியா வின் கூட்டாட்சியை அழித்து ஒற்றை ஆட்சியாக மாற்றிடவும், சுய சார்பு பொருளாதார கொள்கை யை கைவிட்டு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கையை கடைப்பிடிப்பதுமான திசையில் வேகமாக செலுத்துகின்றன. மோடி அரசின் மேற்சொன்ன நடவடிக்கைகளை முறியடிக்காமல் இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாத்திட முடியாது.

எனவே, இதற்கு எதிராக அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும். அதே சமயத்தில் ஜனநாயக, மதச்சார்பின்மை செயல்பாட்டாளர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசி னுடைய நடவடிக்கை களை கருத்தியல் தளத் திலும் எதிர்கொள்ள வேண்டும்.

சித்தாந்த போராட்டம்

dd

மதச்சார்பின்மைக் கான போராட்டம், மனித மனங்களை வென்றெடுப் பதற்கான போராட்டம்” என்று பேராசிரியர் கே.என்.பணிக்கர் கூறியுள் ளார். இரண்டு வகையில் இந்தப் போராட்டத் தினை நடத்திட வேண் டும். முதல்வகை - சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு பிரச்சாரம், பயங்கரவாதம், குறிப்பாக மத சிறுபான்மையினர் மீதான பாசிச தாக்கு தல்களை தொடுக்கும் வகுப்புவாத சக்திகளை மதவேறுபாடுகள் இல்லாமல் மக்களைத் திரட்டி எதிர்கொள்வது.

இரண்டாவது வகை -மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்.

இரண்டும் இணைந்து முன்னெடுக்கப்படுவது மிக அவசியம். ஒரு உதாரணத்தை பரிசீலிப்போம். உலகமே திரும்பிப் பார்க்கின்ற அடிப்படையில் ஓராண்டுக்கும் மேல் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிமிகு போராட்டத்தில் விவசாயிகள் மோடி அரசை பணிய வைத்தார்கள். மூன்று வேளாண் சட்டங்கள் ரத்தானது.

கொரோனாவை எதிர் கொள்வதில் குளறுபடிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை கள், வறுமை அதிகரிப்பு, கல்வி சுகாதாரத்தில் பின்தங்கிய நிலைமை, இத்தோடு விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட் டம் என ஏராளமான காரணிகள் இருந்த போதிலும், – சமீபத்தில் உ.பி., மாநிலத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இதற்கு என்ன காரணம்?

பாரம்பரியத்தை தொடருவோம்

தனது வாழ்க்கைத் தரமும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை உணர்ந்தாலும், மத அடிப்படையில் வாக்களிக்கக்கூடிய விதத்தில் வகுப்புவாத உணர்வுக்கு மக்கள் ஆட்பட்டதுதான். எனவே, இந்த உணர்வுக்கு எதிரான ஆக்கப்பூர்வ மான கருத்தியல் பிரச்சாரத்தை மதச்சார்பின்மைக் கான செயற்பாட்டாளர்கள் நடத்திடவேண்டும்.

உணவு, உடை, இருப்பிடம், மொழி மற்றும் மாறுபட்ட மத நம்பிக்கை உடையவர்கள் ஆண்டாண்டு காலமாக இணைந்து வாழ்ந்த ஒரு அற்புதமான நாடாக இந்தியா தொடர வேண்டிய அவசி யத்தை மக்களிடையே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதிகரிக் கும் மூடநம்பிக்கை, பகுத்தறிவற்ற தன்மை ஆகிய சிந்தனைகளுக்கு எதிராக அறிவியல் அடிப்படையிலான சிந்தனைப் போக்கினை வளர்த்தெடுக்கும் விதத்தில் சமூக பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இத்தகைய பண்பை உயர்த்திப்பிடித்த வைகுண்டசாமி, நாராயணகுரு ஆகியோரின் வாழ்க்கை கேரளத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளி லும் பாடமாக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவற்ற தன்மையை பகுத்தறிவைக் கொண்டும், உண்மை யற்ற தன்மையை உண்மையைக் கொண்டும் எதிர்கொள்ள வேண்டும்.

கலை, இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஓவியம், இசை போன்ற வடிவங்களில் மேற் கண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் படைப்புகளும் பாஸ்கரதாஸ், விஸ்வநாத தாஸ் போன்றவர்கள் அரங்கேற்றிய நாடகங்களும், இன்னபிற இலக்கிய படைப்புகளும் சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்நியர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கு பண்பாட்டுத் தளத்தில் மகத்தான பங்காற்றின. இப்போது மதச்சார் பின்மைக்காக மக்களை வென்றெடுக்கும் போராட்டத்திலும் மேற்கண்ட வடிவங்கள் முக்கிய பங்காற்றிட முடியும்.

நேருவின் தொலைநோக்கு

1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேரு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

"எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந் தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்”.v இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படை யில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது.''”

நாடு முழுவதும் பதட்டம் பரவி இருந்த சூழலில் (காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட துயரமிக்க சம்பவத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு) பண்டித நேரு ஆற்றிய உரை இது. இதனால்தான் பண்டித நேருவை இன்றைய பிரதமரும், சங் பரிவார அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதில்லை.

அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் சக வாழ்வு, சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களும் சமம் என்ற கருத்தியலை மத நம்பிக்கை உள்ள வர்கள் மத்தியில் விதைத்து மத நல்லிணக்கத்தை, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது, மதச்சார் பின்மைக்கான செயற்பாட்டாளர்களின் இன்றைய முக்கிய கடமைகளாகும்.

மத நம்பிக்கையுள்ளவர்களை ஈடுபடுத்தாமல் இந்த போராட்டத்தில் வெற்றி அடைய முடியாது.

(தொடரும்)

nkn300422
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe