(22) வகுப்புவாதம் எவ்வாறு செயல்படுகிறது?
மத நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மையையும் சிதைத்து நாட்டில் வகுப்பு மோதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படு கின்றன. மதவெறுப்பைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்கும் வகுப்புவாத அரசியல்தான் இதற்கான காரணி. மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, மத அடிப்படையிலான மோதல்களை தடுக்க வேண்டும் என்றால் வகுப்புவாதம் பற்றிய புரிதல் நமக்கு அவசியம்.
ஏதாவதொரு மதத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் பலர், இதர பிற மதத்தை பின்பற்றும் மக்களுடன் சகோதர உணர்வுட னும், நேயத்துடனும் பழகி, ஒன்றாக வாழ்கிறார் கள். இந்த பிணைப்பினையும், நல்லிணக்கத் தையும்தான் வகுப்புவாதிகள் சிதைத்து அழிக்கிறார்கள். வகுப்புவாதம் பரவுவதற்கு அடிப்படையான காரணம் மதம் தான் என்று பார்க்க முடியாது. ஆனால், மத நம்பிக்கை உள்ள மக்களைத்தான் வகுப்புவாதிகள் குறிவைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வகுப்புவாதத் திட்டத்தை பல்வேறு கட்டங் களாக திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. முதலில், அவர்கள் இயல்பான மத நம்பிக்கை கொண்ட மக்களை, மதச் சடங்குகளில் பிடிப்பு மிக்கவர்களாக மாற்றுகிறார்கள்.
உதாரணமாக, அனைத்து இந்துக்களும் மத நூல்களை வாசிப்பதில்லை. ஆனால், மக்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று பகவத் கீதை சொற்பொழிவு, கீதை வாசிப்பு ஆகிய செயல் பாடுகளை முன்னெடுப்பார்கள். பிறகு, விளக்கு பூஜை, விநாயகர் மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி ஊர்வலங்கள், தியான வகுப்புகள் போன்ற செயல்பாடுகளை நடத்துவதன் மூலம், தங்கள் அரசியல் செயல்பாடுகளுக்குள் ஈர்ப்பார்கள். இதற்கு இந்து நம்பிக்கையையும், இந்து கோயில்களையும், பொது இடங்களையும் பயன்படுத்துவார்கள். தங்கள் நோக்கங்களைச் சொல்லாமல் மக்களை ஈர்த்து, அடுத்த கட்டத்திற்கு உணர்வுகளை மாற்றுகிறார்கள். பேராச
(22) வகுப்புவாதம் எவ்வாறு செயல்படுகிறது?
மத நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மையையும் சிதைத்து நாட்டில் வகுப்பு மோதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படு கின்றன. மதவெறுப்பைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்கும் வகுப்புவாத அரசியல்தான் இதற்கான காரணி. மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, மத அடிப்படையிலான மோதல்களை தடுக்க வேண்டும் என்றால் வகுப்புவாதம் பற்றிய புரிதல் நமக்கு அவசியம்.
ஏதாவதொரு மதத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் பலர், இதர பிற மதத்தை பின்பற்றும் மக்களுடன் சகோதர உணர்வுட னும், நேயத்துடனும் பழகி, ஒன்றாக வாழ்கிறார் கள். இந்த பிணைப்பினையும், நல்லிணக்கத் தையும்தான் வகுப்புவாதிகள் சிதைத்து அழிக்கிறார்கள். வகுப்புவாதம் பரவுவதற்கு அடிப்படையான காரணம் மதம் தான் என்று பார்க்க முடியாது. ஆனால், மத நம்பிக்கை உள்ள மக்களைத்தான் வகுப்புவாதிகள் குறிவைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வகுப்புவாதத் திட்டத்தை பல்வேறு கட்டங் களாக திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. முதலில், அவர்கள் இயல்பான மத நம்பிக்கை கொண்ட மக்களை, மதச் சடங்குகளில் பிடிப்பு மிக்கவர்களாக மாற்றுகிறார்கள்.
உதாரணமாக, அனைத்து இந்துக்களும் மத நூல்களை வாசிப்பதில்லை. ஆனால், மக்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று பகவத் கீதை சொற்பொழிவு, கீதை வாசிப்பு ஆகிய செயல் பாடுகளை முன்னெடுப்பார்கள். பிறகு, விளக்கு பூஜை, விநாயகர் மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி ஊர்வலங்கள், தியான வகுப்புகள் போன்ற செயல்பாடுகளை நடத்துவதன் மூலம், தங்கள் அரசியல் செயல்பாடுகளுக்குள் ஈர்ப்பார்கள். இதற்கு இந்து நம்பிக்கையையும், இந்து கோயில்களையும், பொது இடங்களையும் பயன்படுத்துவார்கள். தங்கள் நோக்கங்களைச் சொல்லாமல் மக்களை ஈர்த்து, அடுத்த கட்டத்திற்கு உணர்வுகளை மாற்றுகிறார்கள். பேராசிரியர் கே.என்.பணிக்கர், "மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு" என்ற பிரசுரத்தில், மத நம்பிக்கை உள்ள ஒருவர் எப்படி வகுப்புவாதியாக மாறுகிறார் என விளக்கியுள்ளார்.
அந்த உதாரணத்தில் அவர் கேரளத்தைச் சேர்ந்த பெண்ணை உதாரணமாக காட்டுகிறார். "அந்த பெண்ணுக்கு ராமர் மீது பக்தி உண்டு. அவர் தினமும் கோயிலுக்கு செல்வதில்லை. இருந் தாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை காலையில் தினமும் படிக்கும் பழக்கம் கொண்டவர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கத்தை பா.ஜ.க. மேற்கொண்டபோது, அவர்களுடைய ஆதரவாளராக ஆகிறார். அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைப்பதை எதிர்ப்போர் மீது அவருக்கு பகை உணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இவ்விதமாக அவரின் பக்தி உணர்வு, வகுப்புவாதிகளின் நடவடிக்கைகளால் மாற்றப்பட்டது.
இந்து மதத்தின் மீது நம்பிக்கையுள்ள சாதாரண மக்களிடம் வகுப்புவாத உணர்வினை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்ட விதத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. அந்த பிரச்சனைகளை பயன்படுத்தி முஸ்லிம்கள், கிறுத்துவர்கள் மீது வெறுப்பு தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக் கிறது. காலப்போக்கில் சாதாரண தெய்வ நம்பிக்கை கொண்ட மக்கள், வகுப்புவாத அரசியலுக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்வு பரவலாகும் போது, சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்களை விமர்சனத்தோடு பார்க்க மறுப்பது மட்டுமல்ல, ஆதரிக்கும் மனநிலைக்கும் வந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் தீவிரமான வகுப்புவாத உணர்வினைப் பெற்று தாக்குதலில் பங்கேற்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.
திட்டமிட்டு வகுப்புவாத உணர்வை வளர்த்தெடுப்பவர்கள், அதன் மூலமாக மக்களைத் திரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கமும் கொண்டுள்ளார்கள். எனவே வகுப்பு வாதம் என்ற உணர்வு நிலைக்கு பெரும்பான்மை மக்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியடையும் போது, மத அடிப்படையிலான பிரச்சாரத்தின் மூலமே அதிகாரத்தை தக்கவைப்பது சாத்தியமாகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்புகளான நூற்றுக்கும் மேற்பட்ட சங்க பரிவார அமைப்புகளும் இந்த வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சாதிக் கட்டமைப் பில் மேலடுக்கில் உள்ள சாதிகளை அணிதிரட்டி தன்னுடைய திட்டத்தை முன்னெடுக்க முயற்சி செய்தது. இப்போது அது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களையும் ஈர்த்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கிறது. அதற்காக பல மோசடித்திட்டங்களை முன்னெடுக்கிறது.
சனாதன, வர்ண கட்டமைப்பைக் கொண்டது இந்து மதம். அதனை நேரடியாகச் சொல்லி பட்டியலின மக்களை ஆர்.எஸ்.எஸ். தனது வலைக்குள் இழுக்க முடியாது. எனவே சாதி பெருமிதங்களைக் கட்டமைத்து, அதன்மூலம் தனது வளைக்குள் ஈர்க்கிறது. இந்து வகுப்புவாத உணர்வினை ஏற்படுத்தியவுடன், தன்னுடைய அரசியலுக்கு சேவையாட்களாக மாற்றியமைக் கிறது. சனாதன, வர்ண வேறுபாடுகளின் அடிப்படையிலான இந்து ராஷ்ட்டிரா திட்டத்தில் அவர்களை இயக்குகிறது.
தமிழகத்தில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடையே 'பட்டியல் சாதியில் இருந்து வெளியேற்றம்' என்ற முழக்கத்தை அந்த சாதியைச் சேர்ந்த சில தலைவர்கள் முன்னெடுப் பதும், அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாக இருப் பதையும் பார்க்கிறோம். பட்டியலினப் பிரிவில் உள்ள மக்களின் உண்மையான பிரச்சனைகளையும், வளர்ச்சியையும் கணக்கில் கொள்ளாமல், அவர்களை பட்டியல் சமூகத்தில் இருந்து நீக்குவதன் மூலம் தனது பிடிக்குள் சேர்த்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது. சூழ்ச்சியான முறையில் இந்து மனநிலையை கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். தந்திர சூழ்ச்சியே இது. ’பிரதமர் மோடி,’"நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரன். உங்கள் கஷ்டத்தை நான் புரிந்துகொள்கிறேன்''’என கூட்டங்களில் அந்த சமூகத்து மக்களிடம் பேசுவதையும் காண்கிறோம்.
இன்னொரு புறம், மதுரை பகுதிகளிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு சாதியை, பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க ஆவன செய்கிறோம் என அந்த சமூகத்தின் ஒரு பிரிவினரிடம் பா.ஜ.க. வாக்குறுதி தந்துள்ளது. அவர்களுடைய கூட்டத்திற்கு வடநாட்டில் இருந்து பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் வருகை தந்து, நீங்கள் பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்று உரையாற்றி இருக்கிறார்.
இவ்வாறு, முதலில் சாதி உணர்வை வலுப்படுத்தி, பின் அதன் மூலமாக இந்து வகுப்புவாத உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது.
பெரும்பான்மை மக்களிடம், சிறுபான்மை யினர் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற பீதியுணர்வை, இந்து மதத்தில் நம்பிக்கை உள்ள மக்கள் மத்தியில் கிளப்பி, முதலில் மதத்தை ஒரு பேசுபொருளாக மாற்றுகிறார்கள். பிறகு அதனை மத வெறுப்பாக கட்டமைக்கிறார்கள். சமீபத்தில் மைக்கேல்பட்டியில் பள்ளிச்சிறுமி தற்கொலை செய்த சம்பவத்திற்கு, மதச்சாயம் பூசி, மக்கள் சிந்தனையில் இல்லாத மதக்கோணத்தைப் புகுத்தி, மதம், மதமாற்றம் போன்ற விஷயங்களைப் பேசு பொருள் ஆக்கினார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
சில நாட்களுக்கு முன்னர் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டமிட்டு நடத்தி இசுலாமியர்களைத் தாக்கி வந்தார்கள். அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமி யர்களின் வீடுகள், சொத்துக்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து டெல்லியில் பா.ஜ.க. அதி காரத்தில் உள்ள ஜஹாங் கிர்புரி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீடு களையும், கடைகளையும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கிக்கொண்டிருந்தபோது நீதிமன்ற உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் காட்டியபோதும் இடிப்பதை நிறுத்தவில்லை. மீண்டும் உச்சநீதிமன்றம் இரண்டாவது முறையாக ஆணை பிறப்பித்து தலையிட்ட பிறகே, மாநகராட்சி நிர்வாகம் புல்டோசர் மூலம் வீடுகளை, கடைகளை தரைமட்டமாக்கியதை நிறுத்தியது.
இந்துமத நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாமியர் களையும், அவர்களது உடைமைகளையும் தாக்கியதோடு அரசு நிர்வாகத்தையும் பயன்படுத்தி புல்டோசர் மூலம் அவர்களது வீடுகளைத் தாக்குவது அப்பட்டமான மதவெறி வகுப்புவாத நடவடிக்கை மட்டுமல்ல, மனித உரிமை மீறலும் கூட.
ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற சிறுபான்மை அடிப்படைவாத அமைப்புகளும் வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கிறார்கள். அதுவும் சங்க பரிவார நடவடிக்கைகளுக்கு உதவி செய்கிறது. சிறுபான்மையினர் மத்தியில் வகுப்புவாத அரசியல் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துவதையும் சங்க பரிவாரம் தனது திட்டங்களில் ஒன்றாக முன்னெடுக் கிறது. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்காத இடங்களில், சிறுபான்மை மக்கள் வகுப்புவாதிகளின் வளைக்குள் சிக்கிக்கொள் கிறார்கள்.
இவ்வாறு பல வடிவங்களில் மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் குலைத்து வகுப்புவாத நடவடிக்கையின் மூலம் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்கு வதற்கே. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகளும், அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க.வும் இந்தியாவை தங்கள் திட்டப்படி மாற்றி யமைக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதச் சார்பின்மை செயல்பாட் டாளர்கள் எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி அடுத்து வரும் கட்டுரை களில் பரிசீலிப்போம்.
(தொடரும்)