Advertisment

ரகசிய பூஜையும். ரெய்டும்! ஒரே நாளில் 50 கோடி லஞ்சம்? - பத்திரப்பதிவு பரபரப்பு!

ss

மிழ்நாட்டில். ரியல் எஸ்டேட் தொழில் பெரியளவில் வளர்ந்துள்ளது. ஆளுங்கட்சி புள்ளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலங்களை பதிவு செய்வதில் சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவை செய்து வருகின்றனர். விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆவணிமாத கடைசி முகூர்த்தம் நல்லநாள் என்பதால் செப். 16ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 582 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பத்திரப்பதிவு செய்தனர். இதற்கான சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. இந்த முகூர்த்தநாளையே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் தங்களது முகூர்த்த (ரெய்டு) நாளாகக் குறித்தனர்.

Advertisment

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், வேலூர் மாவட்ட

மிழ்நாட்டில். ரியல் எஸ்டேட் தொழில் பெரியளவில் வளர்ந்துள்ளது. ஆளுங்கட்சி புள்ளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலங்களை பதிவு செய்வதில் சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவை செய்து வருகின்றனர். விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆவணிமாத கடைசி முகூர்த்தம் நல்லநாள் என்பதால் செப். 16ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 582 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பத்திரப்பதிவு செய்தனர். இதற்கான சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. இந்த முகூர்த்தநாளையே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் தங்களது முகூர்த்த (ரெய்டு) நாளாகக் குறித்தனர்.

Advertisment

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், வேலூர் மாவட்டத்தில் குடியாத் தம், விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, கடலூர் மாவட்டத்தில் கடம்புலியூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளுர் என 6 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ரெய்டில் இறங்கினர். இதில் அதிக லஞ்சப் பணம் பிடிபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ரெய்டில் தான் சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்துள்ளன.

cc

கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் திருக்கோவிலூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் மதியம் 2 மணியளவில் புகுந்து கதவை உள்பக்கமாக லாக் செய்தனர். உள்ளி ருந்த அலுவலர்கள் யாரும் அசையாதபடி பார்த் துக்கொண்டனர். பத்திரப் பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவர்களைப் பற்றிய தகவல்களைக் குறித்துக்கொண்டு ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைத்தனர். 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்த அலுவலகத்தின் மீது கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது. அதாவது, ஒரு இடத்தின் மீதான வில்லங்கச் சான்றிதழ் வாங்கச் சென்றாலும், 200 ரூபாய் வேலைக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள். பத்திரப்பதிவு செய்யப்போனால் எவ்வளவு லஞ்சம் வாங்குவார்கள் என நீங்களே நினைத்துப் பாருங்கள் என்கிற புலம்பல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றுகொண்டிருந்தன. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி காலை 6 மணி அளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதி வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு திருஷ்டி கழிக் கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தங்கள் அலுவலகத்துக்கு ரெய்டுக்கு வராமலிருக்க வேண்டு மென்று பூஜை செய்துள்ளனர். 7 நாட்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமெனச் சொல்லி தினமும் காலை நேரத்தில் ஒரு சாமியார் திருஷ்டி கழித் துள்ளார். முதல் நாள் எலுமிச்சை பூஜை, இரண்டாம் நாள் ஊமத்தங்காய் பூஜை, மூன்றாம் நாள் பூசணிக்காய் திருஷ்டி கழிப்பு, நான்காம் நாள் சேவல் பலி, ஐந்தாம் நாள் கிடா வெட்டு எனப் பூஜை நடந்துள்ளது. இதில் சப்-ரிஜிஸ்ட்ரர் வேல்முருகனுக்கு திருஷ்டி கழிக்கும் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வெளிவந்த இரண்டாவது நாள் நடந்த ரெய்டில், 2.64 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். இதே நாளில் தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் நடந்த ரெய்டுகளில், ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3.71 லட்சம், கடம்புலியூரில் ரூ.2.17 லட்சம், திருவள்ளூரில் ரூ.2 லட்சம் என மொத்தமாக 11.93 லட்ச ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரிகள் சிலர், "முதலில் வருவாய்த்துறையினரை குறிவைத்துக் களமிறங்கி னோம். கடந்த 6 மாதத்தில் வி.ஏ.ஓ. முதல் தாசில் தார்கள்வரை தமிழ்நாடு முழுவதும் நூற்றுக் கணக்கானவர்கள் சிக்கினார்கள். இப்போது பத்திரப்பதிவுத் துறையின் மீது கவனம் திருப்பி னோம். 6 பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இவ்வளவு தொகை என்றால், அன்று மட்டும் தமிழ்நாட்டிலுள்ள மொத்தப் பத்திரப்பதிவு அலு வலகங்களிலும் எவ்வளவு லஞ்சம் கை மாறி யிருக்கும். எங்கள் கணக்குப்படி சுமார் 50 கோடி ரூபாய்க்கு ஒரே நாளில் லஞ்சமாகக் கைமாறி யிருக்கலாம். லஞ்சத்தால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அரசாங்கத் துக்கு தான் கெட்ட பெயர். திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. வேல்முருகன் நடத்திய ரெய்டுகளில் அரசு அலுவலர்கள், கூகுள் பே, ஃபோன் பே வழியாக லஞ்சம் வாங்கியுள்ளதைக் கண்டறிந் தார். முன்பெல்லாம் லஞ்சம் வாங்க அலுவலர்கள் பயப்படுவார்கள், நேரடியாக வாங்காமல் மற்றொருவரிடம் தரச்சொல்வார்கள். இப்போது தைரியமாக, உரிமையாக மிரட்டி வாங்குகிறார் கள். மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதே மக்களை அடிமை போல் நடத்துவதோடு, மிரட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். இவர்கள்தான் சங்கத்தின் பெயரை வைத்து அரசையே மிரட்டுகிறார்கள், ரெய்டுகளை நிறுத்தச் சொல்கிறார்கள்'' என்கிறார்கள். அதிகாரிகளை ஒடுக்கினால் லஞ்சத்தை ஒடுக்கலாம்!

nkn210924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe