கோவில்களில் ரகசிய தரிசனம்! அனைவருக்கும் அருள் கிடைக்குமா?

dd

துபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு போட இயலவில்லை என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. இதுபற்றிய விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜூன் 1 முதல் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவின.

kk

கொரோனா பரவலை தடுக்க நான்காவது முறையாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பல தொழில்கள், நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், இரயில், உள்நாட்டு விமான போக்கு வரத்தை தொடங்கியுள்ளன. சலூன், அழகு நிலையங்கள், துணிக்கடைகள் உட்பட பலவும் திறக்கப்பட்டுவிட்டன. ஆட்டோக்களும் ஓடத்துவங்கி விட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர், பேருந்து நிலையம், மால்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை இன்னும் நீடித்தே வருகிறது. இந்நிலையில் வரும் ஜுன் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அது பற்றிய செய்திகளும் பரபரப்பாயின.

இது உண்மையா என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பேசினோம். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 41,116 கோயில்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் தனியார

துபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு போட இயலவில்லை என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. இதுபற்றிய விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜூன் 1 முதல் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவின.

kk

கொரோனா பரவலை தடுக்க நான்காவது முறையாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பல தொழில்கள், நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், இரயில், உள்நாட்டு விமான போக்கு வரத்தை தொடங்கியுள்ளன. சலூன், அழகு நிலையங்கள், துணிக்கடைகள் உட்பட பலவும் திறக்கப்பட்டுவிட்டன. ஆட்டோக்களும் ஓடத்துவங்கி விட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர், பேருந்து நிலையம், மால்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தளங்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை இன்னும் நீடித்தே வருகிறது. இந்நிலையில் வரும் ஜுன் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அது பற்றிய செய்திகளும் பரபரப்பாயின.

இது உண்மையா என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பேசினோம். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 41,116 கோயில்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் தனியார்களின் கட்டுப்பாட்டில் 50 ஆயிரம் கோயில்களுக்கு மேல் உள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட வேண்டும் என சொன்னதுமே அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் முதல் அனைத்து கோயில்களுமே கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனத்துக்காக பொதுமக்களை அனுமதிக்கவில்லையே தவிர ஆகமவிதிப்படியான முக்கால பூஜைகள் நடந்துவருகின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோயில், அறுபடை வீடுகளான திருத்தணி, திருச்செந்தூர், பழனி உட்பட 6 நகரங்களில் உள்ள கோயில்களும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் என தமிழகத்தில் பிரபலமாகவுள்ள 100க்கும் மேற்பட்ட கோயில்களில் தினமும் குறைந்தளவு பணியாளர்கள் வந்து கோயிலை சுத்தப்படுத்துகிறார்கள்.

தற்போது கூட, பெரிய கோயில்களில் உள்ள சர விளக்குகள் உட்பட அனைத்தையும் டெட்டால் போட்டு சுத்தமாக வைக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது. அதன்படி செய்கின்றனர். ஜூன் 1ந்தேதி மதவழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் அரசு உறுதியாக எடுக்க வில்லை. ஆனால் வழிப்பாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, கோயில்களை திறக்கலாம் சமூக இடைவெளியுடன் பக்தர்களை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

dd

கோயிலுக்குள் நுழையும்போதே பக்தர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கவும் கோயில் பணியாளர்களை நிறுத்த வேண்டும், அதேபோல் குங்குமம், திருநீறு போன்றவற்றை அர்ச்சகர்கள் எடுத்து பக்தர்களின் கைகளில் தராமல் இருக்கவும், பாக்கெட் பிரசாதங்களை வழங்க சொல்லலாம் எனவும், அர்ச்சனை பொருட்களை பெறும் போது கோயில் அர்ச்சகர்கள் கைகளில் கையுறை, முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், பக்தர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டே கோயிலுக்கு வரவேண்டும், அர்ச்சகர்களின் தட்டுக்களில் பணம் செலுத்தாமல் உண்டியலில் செலுத்த சொல்லலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

கோயிலை தினமும் காலை, மதியம், இரவு என மூன்று முறை கிருமிநாசினி கொண்டு முழுவதும் சுத்தம் செய்வது, கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ள வர்களும் பாதுகாப்பு அம்சத்தை கடை பிடிக்க வேண்டும் எனவும் சொல்லலாம் என ஆலோசித்தனர். அதேபோல் கோயில்களில் நேர்த்திக்கடன் என பக்தர்கள் சுண்டல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை வழங்குவார்கள், அதனை தடை செய்யலாம். திருவண்ணா மலை, மதுரை, திருச்செந்தூர், சென்னை மைலாப்பூரில், பக்தர்களுக்கான அன்னதான திட்டம் செயல்படுகிறது. சில கோயில்களில் 100 பேருக்கும், பெரிய கோயில்களில் 300 பேருக்கு என தினமும் மதியம் கோயிலில் அனைவரையும் உட்காரவைத்து உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம் என்றும், அதேபோல் கோயிலில் திருமணம் செய்து கொள்ள அனுமதி தருவதை நிறுத்திவைக்கலாம் எனவும் ஆலோசனை சொன்னார்கள்.

சில அதிகாரிகளோ, திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி தரவில்லையென்றால், பொதுமக்கள் கோயில்களில் வைத்து திருமணம் நடத்திக் கொள்ள முன்வருவார்கள், அதற்கு அனுமதியில்லை என்று சொல்வது சரியாக வராது, அதனால் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி 50 பேரோடு வந்து திருமணம் செய்துகொள்ள அனுமதி தரலாம் என்றும் கூறியுள்ளார்கள். இதுப்பற்றி முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சென்றுள்ளது, விரைவில் இதுக்குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது என்றார்கள்.

தென்னிந்தியாவில் பிரபலமான திருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம், விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை நள்ளிரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் பிரபலமானது. பௌர்ணமியன்று திருவண்ணாமலைக்கு 5 லட்சம் பேர் வருகிறார்கள், அமாவாசையில் மேல்மலைய னூருக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இதற்கெல்லாம் அனுமதியுண்டா எனக் கேட்டபோது, அதற்கு இன்னும் 3 மாதங்களுக்கு அனுமதி தரவேண்டாம் என்பதே பல அதிகாரிகளின் கருத்தாக இருந்தது என்கிறார்கள்.

ஜுன் 1ந்தேதி கோவில்கள் திறக்கப்படுமா என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""அது தவறான தகவல், கோயில்கள் திறப்பது, எப்போது திறப்பது, தேதி போன்றவற்றில் இன்னும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. கோயில்கள் திறந்தால் பக்தர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது போன்ற விவரங்களே அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றன, மற்றபடி எதுவுமில்லை. திறக்க முடிவு செய்தால் அதுப்பற்றிய விவரங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்படும்'' என்றார்.

மதவழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை முடிந்து முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். கோயில்களில் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போல, சர்ச், மசூதிகளுக்கும் மக்கள் செல்ல கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம் என்கிற முடிவில் உள்ளனர் என்கின்றனர்.

கோயில்களில் பக்தர்களை அனுமதிக்ககூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட் டில் உள்ள மாநில அளவில் பிரபலமான மற்றும் வட்டார அளவில் பிரபலமான கோயில்களில் பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகளில், ரகசியமாக கோயிலுக்குள் அதிகாரிகள், அர்ச்சகர் கள் துணையுடன் பக்தர்கள் சிலர் உள்ளே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்ய வைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பேகோபுரம் வழியாக பக்தர்கள் அதிகாரிகள் துணையுடன் உள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர் என்கிறார்கள். சித்திரை மாத பிறப்பன்று கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலில் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-து.ராஜா

nkn270520
இதையும் படியுங்கள்
Subscribe