"ஹலோ தலைவரே, வர்ற 2-ஆம் தேதி, சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் கலைஞர் படத்திறப்பு விழாவும் கோலாகலமா நடக்குது?''”

"ஆமாம்பா, கலைஞரின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 7-ந் தேதிக்கு முன்னதாகவே இந்த நிகழ்வு நடக்குதா?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடத்த விரும்பிய முதல்வர் ஸ்டாலின், அதோடு கலைஞரின் நினைவு நாளான ஆகஸ்ட் 7-ந் தேதியை ஒட்டி, சட்டமன்றத்தில் கலைஞரின் படத்திறப்பு விழாவையும் நடத்த ஆசைப்பட்டார். அதுக்காகத்தான் அண்மையில் அவர் டெல்லிக்குப் போய், குடியரசுத் தலைவரை சந்திச்சார். அதே நாளில் மதுரையில் கலைஞர் நூலகத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியையும், சுதந்திர தினத்தின் 75-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நினைவுத் தூண் திறப்பு விழாவையும் நடத்தப் போகிறோம்ன்னு அவரிடம் ஸ்டாலின் சொல்லியிருக்கார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இசைவு தெரிவிச்ச அவர், கலைஞர் பற்றியும் பெருமிதம் பொங்க தன் கருத்துக்களை ஸ்டாலினிடம் பகிர்ந்திருக்கார். பிறகு, தன் நிகழ்ச்சி நிரல்களை சரிபார்த்துட்டு தேதி சொல்றதா அப்போது குடியரசுத் தலைவர் சொல்லியிருந்தார்.''”

president

Advertisment

"ஜனாதிபதிக்கு ஆகஸ்ட் 7-ல் வசதிப்படலையா?''”

"ஆமாங்க தலைவரே, ஸ்டாலின் சென்னைக்குத் திரும்பி வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி தமிழக அரசைத் தொடர்புகொண்ட குடியரசுத் தலைவர் மாளிகை, ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒன்றில், சட்ட மன்ற நூற்றாண்டு விழாவையும் கலைஞர் படத் திறப்பு விழாவையும் வச்சிக்கலாம்ன்னு சொல்லி யிருக்கு. குடியரசுத் தலைவர் கொடுத்த நாளிலேயே விழாவை நடத்திடலாம்னு சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். அதனால் தடபுடலா ஏற்பாடுகள் நடக்குது. இதைத் தொடர்ந்து 2-ந் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், இந்த நிகழ்ச்சிகளை முடிச்சிட்டு, ஊட்டியில் ரெண்டு நாள் தங்கியிருந்து ஓய்வெடுக்கவும் விரும்பு கிறாராம். இதற்காக, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகை, சுத்தம் செய்யப்பட்டுவருது.''”

"பட்ஜெட் தயாரிப்பும் கோட்டையில் வேகமெடுத்திருக்கேப்பா?''’

Advertisment

"ஆமாங்க தலைவரே, சட்ட மன்ற நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவும் முடிவு செய் திருக்கிறார் ஸ்டாலின். இதில், எதிர்க் கட்சிகளின் வாயை அடைக்கும் விதமா சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகப் போகுதுன்னு நிதித் துறை அதிகாரிகள் சொல்றாங்க. அதேபோல் சட்டமன்ற மேலவையை மீண்டும் உருவாக்குவதற்கான தீர்மானத்தையும், இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டிருக்காராம். இது குறித்து கடந்த மே மாதமே நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந்திருக்கு. இப்ப ஒன்றிய அரசோடு தமிழக அரசு பல விசயங்களிலும் முரண்பட்டு இருப்பதால், இதற்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு தருவாராங்கிற சந்தேகமும் நிலவுது.''

"ரெய்டுக்கு ஆளான முன்னாள் போக்குவரத்து மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் விவகாரத்தைத் தோண்டத் தோண்ட வில்லங்க விவகாரமா வெளிப்படுதே.''”

"ஆமாங்க தலைவரே, ரெய்டில் ஏகப்பட்ட சொத்து ஆவணங்களும் கணக்கில் வராத கரன்சி யும் பிடிபட்ட நிலையில், கடந்த 5 வருடத்தில் 55% அளவுக்கு விஜயபாஸ்கரோட சொத்து மதிப்பு உயர்ந்திருப்பதா லஞ்ச ஒழிப்புத்துறை சொல்லுது. அரசு போக்குவரத்து வாகனங்களில் ஒளிரும் பட்டையான ஸ்டிக்கர்களை கட்டாயம் ஒட்டணும்னு, கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்த ஸ்டிக்கர்களை மாஜியான விஜயபாஸ்கர் சொல்லும் கம்பெனிகளில் மட்டுமே ஆர்டர் கொடுத்து வாங்கி ஒட்டணும்னும் சொல்லப்பட்டிருக்கு. அந்த வகையில் மட்டும் இந்தக் கம்பெனிகள் மூலம் வருசத்துக்கு 80 கோடி ரூபாய்வரை அவருக்கு ’கட்டிங்’ வந்திருக்கு. இதன் பின் னணியில் இருக்கும் பாண்டன் ரவிங்கிறவர் குறித்தும் தோண்டித் துருவப்பட்டு வருது. அதே ஒளிரும் பட்டை விவகாரம், இப்பவும் தொடருதாம். அமைச்சர் ராஜ.கண்ணப்பனுக்கு நெருக்கமாக நிறு வனம் ஒன்னும், இப்ப ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பிச்சிடுச்சாம்.''”

"அடுத்து இன்னொரு மாஜிக்கும் ஆப்பு ரெடியாகுது போலிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, மாஜி எம்.ஆர்.விஜயபாஸ் கரைத் தொடர்ந்து, அடுத்ததா மாஜி கால் நடைத்துறை மந்திரி உடுமலை ராதாகிருஷ் ணன் மீது, பார்வை யைத் திருப்பியிருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை. கால் நடைத் துறையில் பணி நியமனம், பதவி உயர்வுகள், இடமாறுதல்கள், டெண்டர் விவகாரங்கள்ன்னு அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் அரங்கேற்றப் பட்டிருக்கு. கால்நடை பல்கலைக் கழகத்தில் டீச்சிங் மற்றும் நான் டீச்சிங் பணியிடங்களில், உடுமலையும், பல்கலைக் கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜும் புகுந்து விளையாடியிருக் காங்க. இது தொடர்பான ஆதாரங்கள் இப்ப ஏகத்துக்கும் கிடைச்சிருக்காம். இதனால் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறாராம் டென்சிங்.''”

"ம்...''”

rr"தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செஞ்சிருக்கு. இதை ஒரே சமயத்தில் நடத்தினால் 3-ல் 1 இடத்தை அ.தி.மு.க. தரப்பால் கைப்பற்ற முடியும் என்பதால். அந்த ஒரு இடத்தை மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.முருகனுக்கு கொடுக்கும்படி பா.ஜ.க. நிர்பந்திக்க இருக்குதாம். அதனால் இது குறித்து அ.தி.மு.க.விடம் அமித்ஷா பேச இருக்கிறா ராம். அண்மைக் காலமாக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க முரண்பட்டுள்ள நிலையில், ராஜ்யசபா சீட்டைப் பா.ஜ.க.வுக்குத் தாரை வார்க்க, அதன் சீனியர்கள் சம்மதிப்பாங்களா என்பது சந்தேகம். இருந்தாலும் பா.ஜ.க. உத்தரவிட்டால் நம்மால் மீற முடியாதேங் கிற குழப்பத்தோடுதான் டெல்லிக்குப் போனார் களாம் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்ஸூம்.''”

"சரிப்பா, உடல்நலக் குறைவால் அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை, சசிகலா போய்ச் சந்திச்சது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோவில் மதுசூதனன் அட்மிட் ஆக, அவர் உடல்நிலை மோசமா இருக்குன்னு செய்தி பரவுச்சு. இதனால், மதுவின் கார் டிரைவரும், அ.தி.மு.க. மா.செ.வுமான ஆர்.எஸ்.ராஜேஷ்கிட்ட அவர் உடல்நிலை குறித்து விசாரிச்ச எடப்பாடி, சேலத்தில் இருந்து அரக்கபரக்க சென்னைக்கு வந்து, நேரா அப்பல்லோவுக்குப் போனார். மதுசூதனின் உடல்நிலை குறித்து அவர், அங்கே விசாரிச்சிக்கிட்டு இருக்கும் போதே, அங்க சசிகலா வர்றதா அவரிடம் சொல்லப்பட, அங்கிருந்து அவசரமாக கிளம்பி விட்டார் எடப்பாடி. அ.தி.மு.க. கொடி போட்ட காரில், அங்கு வந்த சசிகலா, நேரா மதுசூதன னைப் பார்க்கச் சென்றார். அவரைப் பார்த்ததும், மதுசூதனன் கண்ணீருடன் கைகூப்பினாராம்.''”

"ஓ..''”

"அப்பல் லோவுக்கு வரப்போகும் செய்தி, முன்னதாகவே மதுசூதனன் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்ட போதும், எடப்பாடியிடம் இந்தத் தகவல் சொல்லப்படலை. சசிகலாவை எடப்பாடி நேரில் சந்திக்கட்டும். அப்ப அவர் ரியாக்ஷன் எப்படின்னு பார்க்கலாம்ன்னு சிலர் நினைச்சாங்களாம். உண்மையில் சசிகலாவுடன் மது நல்ல நட்பிலேயே இருந்திருக்கார்.

dd

அதோடு, அ.தி.மு.க. வழக்கு தொடர்பா, சசி தரப்பு கேட்ட சீக்ரெட் ஃபைல் ஒன்றையும் மது, அதுக்கு முன் அனுப்பிவச்சாராம். அதைப் பெற்றுக்கொண்ட சசிகலா, அப்பல்லோ வரப்போவதைத் தெரிவித்ததோடு, அப்பல்லோ நிர்வாகத்திடம், எவ்வளவு செலவானாலும் பரவால்ல. மதுசூதனனுக்கு நல்ல சிகிச்சை கொடுங்கன்னு கேட்டுக்கிட்டாராம்.''”

sasi

“போன முறை நம்ம நக்கீரனில் வந்த செய்தியோட தொடர்ச்சிதானே இந்த செய்தி. அதேபோல போன முறை நாம பேசிய ஒரு செய்தியோட தொடர்ச்சியை நான் சொல்றேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றி போன முறை நாம பேசியிருந்தோம். ராஜ்பவனால் நியமிக்கப்பட்டவங்களைப் பற்றி உறுதிசெய்ய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு குழு அமைச்சிருப்பதா சொல்லியிருந்தோம். அது சம்பந்தமா பல்கலைக்கழக நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் கவர்னர்தான் அந்தக் குழுவை நியமிச்சிருக்காருன்னு சொல்லப் பட்டிருக்கு.''”

ss

"நானும் ஒரு தகவலைச் சொல்றேன். பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப் பட்ட சிவசங்கர் பாபா இப்ப தன்னோட உடல்நிலை காரணமா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு சிகிச்சையில் இருக்காரு. அவரை எப்படியும் வெளியே கொண்டு வந்திடணும்னு தமிழக பா.ஜ.கவில் இருக்கிற மூத்த நிர்வாகி உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் வரிந்து கட்டி வேலை செய்றாங்க. அதுமட்டுமில்லாம, சிவசங்கர்பாபாவின் பள்ளிக்கூடம் உள்பட அவரோட சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாகவும் குரூப் பாலிடிக்ஸ் ஆரம்பிச்சிடிச்சி.''”