Advertisment

கழிவறையில் ரகசிய கேமரா..! -பெண் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி.

dd

ரசு ஊழியர்களின் நிர்வாணத்தைப் படம் பிடித்து ரசித்து வந்த சைக்கோவால், அதிர்ந்து போயிருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம்.

Advertisment

எங்கும் புகைப்படம்... எதிலும் புகைப்படம்... என்று இன்றைய இளைஞர்கள் பலரும் புகைப்படப் பித்தேறிப் போய்... கேமராவும் கையுமாகவே அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ரிஸ்க் எடுப்பதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான மலைப் பகுதிகளில் நின்றபடியும், ஆழமான ஆறு, கடல், ஏரிகளில் குளித்தபடியும், ஓடும் ரயிலின் கதவுக்கு வெளியே தொங்கிக் கொண்டும் படம் எடுக்க நினைத்து, தங்கள் உயிரை இழக்கும் கொடூரத்தையும் நாம் அடிக்கடி பார்த்துப் பதைத்து வருகிறோம்.

cc

இப்படிப்பட்ட ஆபத்துக்கள் ஒருபுறம் என்றால், எல்லை மீறும் இளம் காதலர்களும், சில கணவன் மனைவியரும், தங்கள் அந்தரங்கத் தருணத்தைப் படம் எடுத்து ரசிக்க... அவை

ரசு ஊழியர்களின் நிர்வாணத்தைப் படம் பிடித்து ரசித்து வந்த சைக்கோவால், அதிர்ந்து போயிருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம்.

Advertisment

எங்கும் புகைப்படம்... எதிலும் புகைப்படம்... என்று இன்றைய இளைஞர்கள் பலரும் புகைப்படப் பித்தேறிப் போய்... கேமராவும் கையுமாகவே அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ரிஸ்க் எடுப்பதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான மலைப் பகுதிகளில் நின்றபடியும், ஆழமான ஆறு, கடல், ஏரிகளில் குளித்தபடியும், ஓடும் ரயிலின் கதவுக்கு வெளியே தொங்கிக் கொண்டும் படம் எடுக்க நினைத்து, தங்கள் உயிரை இழக்கும் கொடூரத்தையும் நாம் அடிக்கடி பார்த்துப் பதைத்து வருகிறோம்.

cc

இப்படிப்பட்ட ஆபத்துக்கள் ஒருபுறம் என்றால், எல்லை மீறும் இளம் காதலர்களும், சில கணவன் மனைவியரும், தங்கள் அந்தரங்கத் தருணத்தைப் படம் எடுத்து ரசிக்க... அவை எப்படியோ அம்பலமாகி அவ மானத்தில் ஆழ்த்தி அவர்களைத் தற்கொலை வரை அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தக் கூத்துக்கிடையே போன் மூலம் ரகசியமாக பலான படங்களை எடுத்துவைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் வசூலிக்கும் கொடுமைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

இதுபோல் ஆண்ட்ராய்டு ஃபோன்களால் இப்போது சைபர் குற்றங்கள் எல்லை மீறிப் போயிருப்பதையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேயிருக்கும் அந்தச் "சீச்சீ...' சம்பவம் உணர்த்துகிறது. அப்படி அங்கே என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம் பள்ளியை அடுத்த மத்தூரைச் சேர்ந்த ராமநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சாலையில் சென்றபோது ஒரு ஆன்ட்ராய்ட் ஃபோன் கிடப்பதைக் கண்டு, அதை எடுத்தார். அதை யார் விட்டுச் சென்றிருப்பார்கள் என்று போனை ஆராய்ந்திருக்கிறார். அப்போது அந்த கேலரி யைப் பார்த்தவர் அதிர்ந்து போயிருக்கிறார். காரணம், அதில் பெண்களின் கழிவறைக் காட்சிகள் லைவ்வாக இருந்திருக்கின்றன.

அவர் அந்த ஃபோனை, காவல் நிலை யத்திற்குச் சென்று ஒப்படைக்க முனைந்த போது, அந்த போனுக்குரிய கிராதகனிடம் இருந்து போன் வந்திருக்கிறது.

"சார், அது என் போன்தான். என் பெயர் சுதாகர். ஊர் சாம்பல்பட்டி. நான் பேச்சம் பள்ளியை அடுத்த மத்தூர் பி.டி.ஓ. அலு வலகத்தில், சத்துணவுப் பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிக பணியில் வேலை செய்துவருகிறேன்''’என்று அந்த கிராதகன் தெரிவிக்க...

ராமநாதன், நேராக மத்தூர் பி.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று, பி.டி.ஓ. அருள்மொழியிடமே போனில் இருந்தவை பற்றிச் சொல்லிவிட்டு, அந்த போனை அவரிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். இதன்பின் என்ன நடந்தது?.

dd

இந்த வில்லங்க போனால், பி.டி.ஓ. உட்பட அத்தனை பேரும் பதறிப் போனார்கள். உடனடியாக அங்கே கழிவறையின் மின் விளக்கு ஹோல்டரில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைக் கண்டுபிடித்து அகற்றினர். பின்னர் இதில் தொடர்புடைய சுதாகரை பணி நீக்கம் மட்டும் செய்துள்ளனர். வேறு பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆனால், அங்குள்ள பெண் ஊழியர்கள், மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக மத்தூர் பி.டி.ஓ. அருள்மொழியை நாம் தொடர்பு கொண்டபோது “"இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளோம்''’என்று பதட்டமாகச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.

பர்கூர் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதாவிடம் பேசியபோது... "புகார் கொடுத்திருக்காங்க. குற்றவாளியைப் பிடிச்சாத்தான் முழு விபரம் தெரியும்''’ என்று அவரும் தொடர் பைத் துண்டித்தார்.

அடுத்து மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜா வைத் தொடர்பு கொள்ள முயன் றோம். அவர் ஃபோனையே எடுக்கவில்லை.

பெண்கள் உரிமைகளுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் லலிதா நம்மிடம், "இயற்கை உபாதைக்கான இடத்தில்கூட இதுபோல நடந்தால் என்ன செய்வது? இதுபோன்ற ரகசிய கேமராக்களைக் கண்டறிய நமது கையில் உள்ள ஆன்ட்ராய்டு செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில், ஹிட்டன் கேமரா டிடெக்டர் (ஐஒஉஉஊச ஈஆஙஊதஆ உஊபஊஈபஞத) போன்ற பல ஆப்களைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நாம் செல்லுமிடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை நாமே கண்டறியலாம். அதனால் பெண்கள் இதுபோன்ற ஆப்களை கட்டாயம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்'' ’என்கிறார் அழுத்தமாய்.

பெண்களே... ஆபாசப் பசிகொண்ட ஆன்ட்ராய்டு பேய்கள் எங்கும் இருக்கலாம். எச்சரிக்கை!

nkn150622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe