Advertisment

மிரள வைக்கும் இரண் டாவது அலை! பாது காத்துக் கொள்வது எப்படி?

cc

டந்த ஆண்டு கொரோனா பரவியபோது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனா என்பதே மக்களுக்குப் புதிய பெயராக இருந்ததால் அதுகுறித்த அச்சம் பெரிதாக இருந்தது. ஒருகட்டத்தில் மத்திய அரசு, ""கொரோ னாவுடன் வாழப்பழகுங்கள்"" என்று அறிவித்ததும், தளர்வுடன்கூடிய ஊரடங்கு, முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவது என வாழப்பழகிய நிலையில், கொரோனா பரவலும் கட்டுக்குள் வந்தது போலத் தெரிந்தது. எனவே மக்களும் பரவலாக முகக்கவசத்தை மட்டுமணிந்து, பல மாதங்களாகத் தடைபட்டிருந்த கோவில் திருவிழா, குடும்ப விழாக்கள் என அனைத் திலும் பிஸியானார்கள்.

Advertisment

cccc

அரசாங்கமும் தனது பங்கிற்கு தேர்தல் திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்களை வீதிகளில் திரட்டியது. இதன்காரணமாக, அதுவரை கட்டுக்குள்ளிருந்த கொரோனா, இரண்டாவது அலையாக உருமாற, மீண்டும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது நம் கைவசம் கூடுதல் பாதுகாப்பாகத் தடுப்பூசிகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் இருக்கும் மாறுபட்ட கருத்துகள், கொரோனா அறிகுறியிலிருக்கும் மாற்றங்கள் என அனைத்தும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதுகுறித்து தெளிவு பெறுவதற்காக, பில்ரோத் மருத்துவமனையின் இதய தீவிரச் சிகிச்சை மற்றும் மயக்கவியல் நிபுணர் கே.நெடு மாறனிடம் நமது சந்தேகங்களை முன்வைத்தோம்.

""தமிழ்நாட்டில் தேர்தல் முடியும்வரை

""தமிழ்நாட்டில் தேர்தல் முடியும்வரை கொரோனா குறித்த எவ்வித சிந்தனையும் இல்லாமல் பிரச்சாரத்தில் கூட்டங்களைக் கூட்டியவர்கள், தேர்தல் முடிந்த மறுநாளே, முகக்கவசம் மாட்டச்சொல்வதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்வதையும் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தடுப்பூசி பயன்பாட்டிலும் அச்சம் காரணமாகத் தொடக்கத்தில் பொதுமக்களிடம் ஆதரவே இல்லை. எனவே இந்திய அரசாங்கம், இந்தியாவில் பயன்படுத்தியதோடு, தடுப்பூசிகளை வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்தது. அடுத்து, கொரோனா இரண்டாவது அலை குறித்த பயம் வந்ததுமே பரவலாகத் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்ட, தடுப்பூசிக்குப் பற்றாக்குறை என்ற நிலை ஏற்பட்டுள் ளது. இரண்டாம் அலையைப் பொறுத்தவரை நாம் அச்சப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம், இதில் கொரோனா பாதிப்பு கொத்துக்கொத்தாக வரக்கூடும். முன்புபோல ஒருவர், இருவரென மெல்லப் பரவாமல், பெரிய எண்ணிக்கையில் பரவக்கூடியது. அதேபோல, கொரோனா முதல் அலையில் வயதானவர்களுக்கு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. தற்போது, நடுத்தர வயதானவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும்.

Advertisment

cc

தடுப்பூசி போட்டால் ரத்தம் உறையக் கூடிய பிரச்சினை (blood clot)வருகிறது என்று 'தடுப்பூசி அரசியல்' நடக்கிறது. இதை நம்பிக் குழம்ப வேண்டாம். ரத்தம் உறைவுப் பிரச்சனையானது, கொரோனா ஊசி போடாதவர்கள், சிகரெட் பழக்க முள்ளவர்கள், கருத்தடை மாத்திரை பயன்படுத்து வோர் போன்றோருக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருக்கும். அவர்களோடு ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மிகமிகச் சொற்பமான அளவு வாய்ப்பே உள்ளது. இதையே பூதாகரமாக்கி, மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி, தடுப்பூசித் தயாரிப்புக்கு எதிராக நடக்கும் அரசியலைப் பொதுமக்கள் நம்பத்தேவையில்லை. தடுப்பூசி குறித்த அறிவியல்பூர்வ விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன்மூலமே இந்த குழப்பத்தைத் தீர்க்கலாம்.

தற்போது வீரியத்தோடிருக்கும் கொரோனா வைரஸ் பரவல், காலப்போக்கில் தனது வீரியத்தன்மையை இழந்து வலுவிழக்கும். அதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனா பாதிப்பி லிருந்து தற்காத்துக் கொள்ளலாம். கொரோனா வுக்காக இருமுறை போடப்படும் தடுப்பூசி களுக்கு இடைப்பட்ட கால அளவு, முன்னர் 4 வாரங்கள் என்றிருந்தது. ஆனால் இங்கி லாந்து பல்கலைக்கழகமானது, இந்த இடை வெளியை 12 வாரங்களாக அதிகரிக்கலாமென்று தெரிவித்தது. எனினும், இரண்டாவது அலை பரவும் வேகத்தைக் கணக்கில் கொண்ட இந்திய அரசு, 4 வாரம் என்பதை 6 வாரமாக மட்டும் அதிகரித்துள்ளது. தடுப்பூசிக்கான பற்றாக்குறையால்தான் இந்த இடைவெளியை அதிகரித்துள்ளார்கள் என்று பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை"" என்றார்.

கொரோனா இரண்டாவது அலைக் கான அறிகுறிகள் எப்படியிருக்கின்றன என்பது குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் சிறப்புச் சிகிச்சை நிபுணர் பி.செந்தூர் நம்பியிடம் கேட்டோம். ""கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளது. இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. முன்பு வந்த தொற்று, இரண்டா வது வாரத்தில்தான் வீரியத்தைக் காட்டத் தொடங்கும். ஆனால் தற்போது முதல் வாரத்தின் இறுதியிலேயே வீரியமாகத் தாக்குகிறது. முன்புவந்த கொரோனாவால் வயதானவர்கள் மட்டுமே பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். தற்போது, 25-40 வயதுடைய நடுத்தர வயதினரும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவுக்கான அறிகுறியிலும் மாற்றம் தெரிகிறது. முன்பு காய்ச்சல், இருமல் போன்றவை கொரோனாவின் அறிகுறியாக இருந்தன. தற்போது, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனை கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு சோர்வு, மயக்கம், தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளே கொரோனா பாதிப்பைக் காட்டிக்கொடுக்கின்றன.

கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை எப்போதும்போல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் முகத்தை கையால் தொடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தற்போது நம்மிடமிருக்கும் முக்கியமான பாதுகாப்பு, தடுப்பூசியாகும். கொரோனா பரவலில் உலகிலேயே மூன்றாவது இடத்திலும், தினசரி தொற்றுப்பாதிப்பில் முதலிடத்திலும் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் தடுப்பூசி போடுவது குறித்து சந்தேகத்தோடு விவாதிப்பதே தவறு. தடுப்பூசி போடும்போது ஏதேனும் சிறு பக்க விளைவு இருக்கத்தான் செய்யும். அதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை. முதல் டோஸ் போட்டு, போதிய இடைவெளிவிட்டு இரண் டாவது டோஸும் போட்டு முடித்து, 3 வார காலம் கழித்தே இந்த தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி வேலைசெய்யத் தொடங்கும். தடுப்பூசி போடுவதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 70% - 80% வரை தடுக்க முடியும். கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை 100% தடுக்கலாம். கடுமையான நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. தடுப்பூசி போட்டபின்னும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்வது அவசியம்"" என்றார்.

தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை பெருகிவரும் சூழலில், தடுப்பூசிகள் பற்றாக்குறை யைப் போக்குவதற்காக ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' மருந்தை 10 கோடி டோஸ் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி, இன்னும் சிறிது காலத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். தற்போது, கொரோனா பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்படும் பகுதிகளில் வீடு வீடாகச்சென்று கொரோனா பரிசோதனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கை ஒருபுறம் இருந் தாலும், கொரோனா பாதிப்பைக் கட்டுப் படுத்துவதில் பொதுமக்களின் விழிப்புணர்வும் அவசியமானதாகும்.

-தெ.சு.கவுதமன்

nkn170421
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe