இரண்டாம் ராஜபக்சே! Vs இரண்டாம் பிரேமதாசா! -இலங்கை அதிபர் தேர்தல் களம்!

dd

லங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜீத் பிரேமதாசாவை களமிறக்கியிருக் கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் இலங்கையின் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவிக் காலம் டிசம்பரில் முடிவடைகிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் ஒரு மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதால் நவம்பர் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

ss

"இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட இலங்கையின் அரசியல் சட்டத்தின்படி அனுமதியில்லை' என்பதால் தன்னால் மீண்டும் போட்டியிட முடியாத சூழலில், தனது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை களத்தில் இறக்கியிருக்கிறார் மகிந்த ராஜபக்சே. இதற்காக, கோத்தபயவின் அமெரிக்க குடியுரிமையை நீக்கியது அமெரிக்க அரசு. (இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன்).

கோத்தபயவிற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி அனுமதிக்காது

லங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜீத் பிரேமதாசாவை களமிறக்கியிருக் கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் இலங்கையின் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவிக் காலம் டிசம்பரில் முடிவடைகிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் ஒரு மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதால் நவம்பர் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

ss

"இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட இலங்கையின் அரசியல் சட்டத்தின்படி அனுமதியில்லை' என்பதால் தன்னால் மீண்டும் போட்டியிட முடியாத சூழலில், தனது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை களத்தில் இறக்கியிருக்கிறார் மகிந்த ராஜபக்சே. இதற்காக, கோத்தபயவின் அமெரிக்க குடியுரிமையை நீக்கியது அமெரிக்க அரசு. (இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன்).

கோத்தபயவிற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி அனுமதிக்காது என்பதை உணர்ந்திருந்த மகிந்த ராஜபக்சே, அக்கட்சியை உடைத்து, "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' என்கிற கட்சியை துவக்கி, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபயவை தற்போது அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சேவுடன் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன.

இந்த நிலையில், கோத்தபயவை எதிர்த்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, யாரை வேட்பாளராக நிறுத்தும் என்கிற பரபரப்பு இலங்கை அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு ஆலோசனைகள் நடந்த நிலை யில்... முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜீத் பிரேமதாசவிற்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே. இதன் பின்னணிகள் குறித்து விசாரித்தபோது, ""கோத்தபயவை எதிர்த்து வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கடந்த 15 நாட்களாக ஐக்கிய தேசிய கட்சியில் நடந்த ஆலோசனையில், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை நிறுத்த விரும்பினார் ரணில். இதற்காக, அழுத்தமாக வாதாடினார். ஆனால், கரு ஜெயசூரியாவிற்கு எதிரான குரல்கள், கட்சியின் மூத்த தலைவர்களிடையே வலிமையாக எதிரொலித்தன. அவர்களின் ஆதரவு கட்சியின் பிரதி தலைவரான சஜீத் பிரேமதாசாவிற்கே இருந்தது.

ssஇதனால் கட்சியின் தலைமையகத்தில் தினமும் காரசார மாக விவாதங்கள் நடந்தன. சிங்கள அரசியல் குடும்பத்தில் கைதேர்ந்தவரான கோத்தபயவை எதிர்க்க, சிங்கள பேரினத் தின் ஆதரவை முழுமையாக பெறும் வாய்ப்பு சஜீத்திற்கே அதிகம் இருப்பதாக கட்சியின் பெரும்பான்மையினர் வாதாடினார்கள். அப்போது, "சஜீத்தை அறிவிக்கணும்னா சில நிபந்தனைகளை அவர் ஏற்க வேண்டுமென' வலியுறுத்தினார் ரணில். ஆனா, சஜீத் அதனை ஏற்க மறுக்க, அவருக்கு ஆதரவாக பலரும் நின்றனர். இதனால் மோதல்களும் வெடித்தன.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கட்சியின் செயற்குழுவில் பெரும்பான்மையினர் ஆதரவு சஜீத்திற்கு இருந்ததால் அதனை எதிர்க்கும் வலிமையின்றி ஜனாதிபதி வேட்பாளராக சஜீத்தின் பெயரை முன்மொழிந்ததுடன் கட்சியின் கட்டளைக்குப் பணிந்தார் ரணில் விக்கிரமசிங்கே'' என்கின்றன கொழும்புவிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் ஈழ யுத்தத்தின் கொடுங்கோலருமான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபயவை எதிர்த்து ஆளும்கட்சி சார்பில் சஜீத் பிரேமதாசாவை ரணில் நிறுத்தியிருப்பது போட்டியை கடுமையாக்கியிருக்கிறது. இதனால், "இண்டாவது ராஜபக்சேவை (கோத்தபய) இலங்கையின் இரண்டாவது பிரேமதாசா (சஜீத்) எதிர்க்கிறார்' என வர்ணிக்கின்றன இலங்கை அரசியல் கட்சிகள்.

தான் ஜனாதிபதியாக இருந்து நடத்திய உள்நாட்டு யுத்தத்தில், விடுதலைப்புலிகளை வென்ற இலங்கை ராணுவத் தின் வலிமைமிக்க வியூகத்தை வகுத்தவராக கோத்தபயவை சிங்களவர்கள் மத்தியில் முன்னிறுத்துகிறார் மகிந்த ராஜபக்சே. இதனை உடைத்தெறியும் முகமாக, சிங்கள சமூகத்திடம் ராஜபக்சே சகோதரர்கள் நடத்தும் போலித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி சிங்கள பேரினத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் அடி மட்ட கட்டமைப்பை அணி திரட்ட சஜீத் பிரேமதாசாவை வலிமையாக்கு கிறது ஐக்கிய தேசிய கட்சி.

தற்போதைய ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவின் அரசியல் சமீபகால மாக சரிந்துள்ள நிலையில், அவரது தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் செல்வாக்கும் உடைந்துப் போயிருக்கிறது. இதனால் வலிமையான வேட்பாளரை கண்டறி வதில் ஏக நெருக்கடியை சந்தித்திருக் கிறார் மைத்ரிபால சிறிசேன. பெரும் பான்மை சிங்களவர்களின் ஆதரவைப் பெறுவதில் கோத்தபயவிற்கும், சஜீத்திற் கும் சமமான வாய்ப்புகள் அதிகரித் துள்ள நிலையில், சிங்கள பேரினவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவும் (ஜே.வி.பி.) சார்பில் கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயகே களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வாக்குகள் சிதறக்கூடிய வாய்ப்பிருப்பதாகவே கள நிலவரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, சிறுசிறு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடு வதும் சுயேட்சைகள் பலரும் களமிறங்கி யிருப்பதும் இலங்கை தேர்தல் களத்தை சூடாக்கிக்கொண்டிருக்கின்றன.

""இந்தமுறை எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுவதாலும் ஈழத்தமிழர்களின் வாக்குகள் யாருக்கு என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிப்ப தாலும் பெரும்பான்மை சமூக வாக்குகள் சிதறும் என அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஜனாதிபதி யார் என்பதில் இறுதிவரை இழுபறியே நீடிக்கும்'' என்கின்றனர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.

-இரா.இளையசெல்வன்

nkn041019
இதையும் படியுங்கள்
Subscribe