நெல்லைத் தொகுதியைப் பொறுத்து அ.தி.மு.க. தரப்பில் அமைப்புச் செயலாளர் சுதா. பரமசிவன், அவைத் தலைவர் சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், ஜெரால்டு, எக்ஸ் எம்.பி. விஜிலா சத்யானந்த், மா.செ. தச்சை கணேசராஜா என பெரும்புள்ளிகள் கச்சை கட்டிக்கொண்டிருந்தாலும் பொருளாதார வலுவில்லாதபோதிலும் கட்சியில் ஆழமான பிடிப்பு, கொடுத்த பொறுப்பைப் பழுதின்றிச் செயலாற்றுவது, மக்களுக்கான நலன் பேணல், போராட்ட குணம் போன்ற தகுதிகளையே முதலீடாக்கிக் தலைமையிடம் சீட் கேட்டுவருகிறார் நெல்
நெல்லைத் தொகுதியைப் பொறுத்து அ.தி.மு.க. தரப்பில் அமைப்புச் செயலாளர் சுதா. பரமசிவன், அவைத் தலைவர் சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், ஜெரால்டு, எக்ஸ் எம்.பி. விஜிலா சத்யானந்த், மா.செ. தச்சை கணேசராஜா என பெரும்புள்ளிகள் கச்சை கட்டிக்கொண்டிருந்தாலும் பொருளாதார வலுவில்லாதபோதிலும் கட்சியில் ஆழமான பிடிப்பு, கொடுத்த பொறுப்பைப் பழுதின்றிச் செயலாற்றுவது, மக்களுக்கான நலன் பேணல், போராட்ட குணம் போன்ற தகுதிகளையே முதலீடாக்கிக் தலைமையிடம் சீட் கேட்டுவருகிறார் நெல்லையின் எக்ஸ் மேயரான புவனேஸ்வரி.
நெல்லை தொகுதியில் வாக்கு வங்கியில் முன்னணியிலி ருக்கிற பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ.எம்.பில். என கல்வித் தகுதியைக் கொண்டாலும் சமூகம், மதம், இனம் கடந்து தொகுதியில் அறியப்பட்டவர் புவனேஸ்வரி. தனியார் நிறுவனத்தில் பணியிலிருக்கும் இவரது கணவர் ராஜேஸ்வரன் அ.தி.மு.க.வின் வட்டச் செயலர். குடும்பமே கட்சிப் பணியில் என்றாலும், ஆரம்ப கட்டத்தில் புவனேஸ்வரியின் செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜெ. அவருக்குக் கொடுத்த பொறுப்பு மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர். கலைஞர் ஆட்சியிலிருந்தபோது, ஜெ.விற்கான இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதைக் கண்டித்து சென்னைக் கோட்டை கொத்தளத்திற்குச் சென்ற புவனேஸ்வரி, அங்குள்ள கொடிமேடையருகே ஒற்றையாளாகவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். விஜிலா சத்யானந்த் நியமன எம்.பி.யானபோது நடந்த நெல்லை மேயருக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் சீட் பெற கடும் போட்டி நிலவியது. அதிக தடவை ஜெயிலுக்குப் போனது, கட்சிப் பணிகளில் ஆர்வம் என்ற தகுதியினடிப்படையில் புவனேஸ்வரிக்கு மேயர் சீட் கொடுத்த ஜெ., நீ அதிர்ஷ்டப் பெண்மணி என்று வாழ்த்தியிருக்கிறார்.
மேயரான பிறகு தாய்மார்களின் சிரமத்தையறிந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தனி அறையை அமைக்க, ஜெ.வின் கவனத்துக்கு கொண்டுவந்து, தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் வகையில் தனி அறையை அமைத்திருக்கிறார்.
""பல வயதானவர்கள் ஓய்வூதியம் வாங்கித்தரச் சொல்லி என்னிடம் வருகிறார்கள். அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று அதற்கான பணிகளை முடித்துக் கொடுக்கிறேன். மாநகராட்சியின் ஏரியாவின் எந்தப் பகுதியில் குறை என்றாலும் அதனை அதிகாரிகளின் கவனத்திற்கு நடவடிக்கைக்காகக் கொண்டு செல்கிறேன். கட்சி, ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் என் கடன், கட்சி மற்றும் மக்கள் பணி என்று தானிருக் கிறது''’என்கிறார் நெல்லை தொகுதியின் வேட்பாளர் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் புவனேஸ்வரி.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்