திருவாரூர் அரசியல் களம் என்றால், அதில் கலைஞரைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க முடியாது. தமிழகத்தில் ஐந்துமுறை ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த, சமூக சீர்த்திருத்தத் தலைவராகத் திகழும் கலைஞர் தன் இளம் வயதிலேயே அரசியலில் வளர்ந்த மண்.
அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம், புதிய பேருந்து நிலையம் என ஏராளமான திட்டங்களைத் தாண்டி, அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதே திருவாரூர் மக்களின் மனக் குமுறலாக இருக்கிறது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, நன்னிலம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சிறிய மாவட்டத்தில் திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார் குடி ஆகிய மூன்று தொகுதிகளும் தி.மு.க வசமே இருக்கிறது. 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், கலைஞர் மறைவிற்கு பிறகான இடைத் தேர்தலிலும் திருவாரூரைக் கைப்பற்றி, ’இது எங்க கோட்டை’ என்று மார்தட்டுகிறது தி.மு.க. அதே நேரத்தில், கலைஞரின் ஊர் என்ற அடையாளத்தை மாற்றும் முனைப்புடன் அ.தி.மு.க.வும் வரிந்து கட்டி நின்றுகொண்டிருக்கிறது. தொகுதி வாரியாக இந்த மாவட்டத் தின் சீட் ரேஸ் மற்றும் கள நிலவரம் ஆகியவை எப்படி என்று பார்க்கலாம்.
திருவாரூர்
கலைஞரை கடந்த 2016ல் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த தொகுதி இது. இடைத் தேர்தலில் அதைவிட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. மா.செ. கலைவாணன் வென்றார். . இந்த முறையும் தனக்குதான் சீட்டு என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர், தொகுதியில் நடக்கும் அத்தனை நல்லது கெட்டதிலும் பங்கெடுத்து வருகிறார். அதேசமயம் கட்சியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னை மட்டுமே அவர் போகஸ் செய்துகொள்வது கட்சியினரில் ஒரு தரப்பினரிடம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வேளையில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என தொடர்ந்து முயற்சித்துவருகிறார் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவரான சங்கர், ஏற்கனவே நகர செயலாளராக இருந்த அவரை வெறுப்பு அரசியலால் நீக்கிவிட்டு தனது ஆதரவாளரான வரை பிரகாஷை ந.செ. ஆக்கியதும் கட்சியை இரண்டு கோஷ்டிகளாக்கி வைத்துள்ளது.
ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவாவும், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ரஜினி ஜின்னாவும் சீட்டுக்கான எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதேவேளையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி திருவாரூர் வருவதும், மக்களை சந்திப்பதுமாக இருக்கிறார், எனவே கலைஞரின் தொகுதியான இதில் அவரது பேரனான உதயநிதி நின்றால் கலைஞர்காலப் பெருமை கிடைக்கும் என தி.மு.க தரப்பு எதிர்பார்க்கிறது.
அ.தி.மு.க. தரப்பில் நன்னிலம் தொகுதியில் வென்ற அமைச்சர் காமராஜ் இம்முறை திருவாரூரில் நிற்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அதேபோல் அவரது தீவிர ஆதரவாளரும் ஜெ. பேரவை செயலாளருமான திருவாரூர் எஸ்.கலியபெருமாளும் அவரது மனைவியும் சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அதேபோல் 2016 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தே.மு.தி.க.வி லிருந்து அ.தி.மு.க.விற்கு வந்த எம்.ஆர்.பாலாஜி என பலரும் சீட் ரேசில் இருக்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகரச் செயலாளர் கடலை பாண்டியனும், மாவட்ட பொருளாளர் முருகானந்தமும் முயற்சித்து வருகின்றனர்.
மன்னார்குடி
சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜாவுக்கே இம்முறையும் வாய்ப்பு என பரவலாகப் பேசப்படுகிறது. தொகுதி மக்களிடம் ஒன்றிப்போய் செயல்பட்டு வரும் ராஜாவின் வேகமும் வியூகமும் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில், சீட் கேட்டு வைப்போம் என்பது போல் முன்னாள் நகரச் செயலாளர் ராஜகோபாலன், சிட்டிங் நகர செயலாளர் வீர கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு என பலரும் ரேஸில் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு பழைய தொகுதி என்ற முறையில் ஆர்வம் இருக்கிறது என்றாலும், தி.மு.க.வினர் தொகுதியை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, மன்னார்குடியில் தனது அக்கா மகன் ஆர்.ஜி.குமாரையோ, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் பொன்.வாசுகி ராமனையோ போட்டியிட வைத்து தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டும் என் பது அமைச்சர் காமராஜின் நீண்டநாள் கணக் காக இருக்கிறது. ஆனால் ஆர்.ஜி. குமாருக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்கிற கணக்கில் அமைச் சர் காமராஜின் குடும்பத்திற்குள் ளேயே காய் நகர்த்தப் படுகிறது. மேலும் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் சேரன் குளம் மனோகரன், சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.கே.கலியபெருமாள், காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க தாவியிருக்கும் சிவ.ராஜமாணிக்கம் என பட்டியல் நீள்கிறது.
அ.ம.மு.க சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.காம ராஜுக்குத்தான் சீட் என்று சொல் லப்படுகிறது. அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் ஒன்றிணைந்தால் கூட எஸ்,காமராஜுக்கே சீட் என்கிறார்கள் மன்னார்குடி. அ.தி.மு.க.வினர்.
திருத்துறைப்பூண்டி (தனி)
சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆடலரசன் மீண்டும் சீட்டு தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார். ஆனால், கஜா. நிவர், புரெவி உள்ளிட்ட புயல்கள் அடுத்தடுத்து வந்து பெரும் சேதங்களைத் தொகுதிக்கு ஏற்படுத்திய போது, இவரால் மக்களின் துயர் துடைக்கும் அளவுக்கு முழுமையாக செயல்பட முடியவில்லை என்ற குறை தி.மு.க.வினரிடமே இருக்கிறது. அந்தப் பாதிப்பு களின் போது, தி.மு.க.வினர் முன்னாள் நாகை எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் மூலம் வீட்டிற்கு வீடு நிவாரணப் பொருட்களை கொடுக்கச் செய்தனர். அதனால், இந்த முறை சீட் வாங்கிட்டு வாங்க. உங்களை நாங்க ஜெயிக்க வைக்கிறோம் என ஏ.கே.எஸ்.விஜயனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம். நாடாளுமன்றத் தேர்த லில்தான் தனக்கு சீட் இல்லாமல் கூட்டணிக்குப் போய்விட்டது அதனால், சட்டமன்ற தேர்தலிலாவது தனக்கு சீட்டு வழங்க வேண்டும் என தலைமையிடம் ஏ.கே.எஸ். விஜயனும் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தோழர்கள் ஆர்வமாக உள்ளனர். தொகுதி ஒதுக்கப்பட்டால் தோழர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், லெனின் உள்ளிட்ட பலரும் சீட்டை எதிர்பார்க்கிறார்களாம்.
அ.தி.மு.க.விலோ 2016-ல் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய உமாமகேஸ்வரி மீண்டும் சீட் கேட்கிறார். முன்னாள் நாகை எம்,பி கோபால் தனக்குதான் சீட் என அந்த தொகுதியில் லாபி செய்துவருகிறாராம். மாவட்ட துணைச் செயலாள ரான பால.தண்டாயுதம் சீட் கேட்டு, அமைச்சர் காமராஜ் தரப்பை அணுகியிருக்கிறாராம். மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி.எம். ரமேஷ் பணபலம், குடும்ப பாரம்பரிய பலம் தனக்கு இருப்பதைச் சொல்லி சீட் கேட்கிறார். முத்துப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளரான ரவி உள்ளிட்டோரும் ரேஸில் உள்ளனர்.
நன்னிலம்
ஒருகாலத்தில் நன்னிலம் தொகுதி தி.மு.க.வின் கோட்டை யாக இருந்தது. இதை சிட்டிங் அமைச்சரும், அ.தி.மு.க. மா,செவு மான காமராஜ் தனது விடா முயற்சியால் தன் வசப்படுத்தியிருக் கிறார். மேலும் அவரது தளபதி களான நன்னிலம் ஒன்றிய செயலாளர்கள், சி.பி.ஜி.அன்பழகன், ராம.குணசேகரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சம்பத் உள்ளிட் டோரை வைத்து தொகுதியை வசப் படுத்தி வைத்திருக் கிறார். கட்சியினரிடம் தாராளம் காட்டிவருவதால் அ.தி.மு.க.வினர் அவருக்கு ஜே’ போட்டு வருகிறார்கள். கொரோனாவில் சிக்கி, நலம்பெற்று வரும் அவ ருக்குதான் இந்த முறையும் சீட் என்கிறார்கள். எனினும் குடவாசல் ஒ.செ. பாப்பா சுப்பிரமணியம், நன்னிலம் ஒ.செ.வான சி.பி.ஜி. அன்பழகன், தெற்கு ஒ.செ. இராம குணசேகரன், குடவாசல் நகரச் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் இந்த முறையும் கேட்கிறார்கள்.
தி.மு.க.வைப் பொருத்தவரை ஒன்றிய செயலாளர்கள் ஜோதிராமன், பிரபாகரன், வரத. கோ.ஆனந்த், மனோகரன் உள்ளிட்டோர் சீட் ரேஸில் இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்ட ஆற்காடு வீராசாமியின் முன்னாள் உதவியாளரான இளங்கோவும் இந்த முறை சீட் கேட்கிறார். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் தொகுதியை எதிர்பார்க்கிறது. 2016-ல் போட்டியிட்ட எஸ்.எம்.பி.துரைவேலனையே இம்முறையும் நிறுத்த சத்திமூர்த்திபவன் விரும்புகிறதாம்.
திருவாரூர் மாவட்டம் இப்போதே தேர்தல் காய்ச்சலில் இருக்கிறது.