வேலூர் மாவட்டத்திலுள்ள 5 தொகுதி களில் குடியாத்தமும் ஒன்று. தொகுதி சீரமைப்பில் 2011 தேர்தல் முதல் இது தனித்தொகுதியாக இருந்துவருகிறது.
இந்திய சுதந்திரத்தின்போது டெல்லி செங் கோட்டையில் நேரு ஏற்றிய தேசியக்கொடி, குடியாத்தத்தில் பட்டுத்துணியால் நெய்து தரப்பட்ட புகழுக்குரிய நகரம். 1954-ல் காமராஜர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தபோது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அப்போது குடியாத்தத்தில் நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். காமராஜர் வெற்றி பெறவேண்டுமென்று பெரியார் பிரச்சாரம் செய்தார். தி.மு.க.வை தொடங்கியிருந்த பேரறிஞர் அண்ணாவும் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தார், காமராஜர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதுவரை நடந்துள்ள 16 பொதுத்தேர்தல் மற்றும் இரண்டு இடைத் தேர்தல்களில், ஏழுமுறை பொதுவுடமைக் கட்சியும், ஐந்து முறை காங்கிரஸ், நான்கு முறை தி.மு.க., இரண்டு முறை அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன.
இத்தொகுதியில் 25 ஆயிரம் பீடித் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், தறி நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளனர். தற்போது இத்தொழில்கள் இயந்திரமயமாகி விட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும் பங்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள னர். தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப் பினராக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருக னின் தீவிர ஆதரவாளரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த குடியாத்தம் ஒ.செ. கல்லூர்.ரவியின் தம்பி விஜயன் மனைவி அமலு இருக்கிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அமலுவை விஜயன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடியாத்தம் தனித்தொகுதியாக இருப்பதால் அமலு களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். தேர்தலின்போது, குடியாத்தம் தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., புதிய பஸ்நிலையம், ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும், குடியாத்தம் புறவழிச்சாலை, பேரணாம்பட்டில் அரசு மகளிர் கல்லூரி உருவாக்கித் தருவேன் என வாக்குறுதிகள் தந்திருந்தார்.
அதோடு, கெங்கையம்மன் கோவில் பகுதியில் தரைப்பாலம் அமைத்து தருவேன், உப்பிரப்பள்ளியில் மேம்பாலம் அமைப்பேன் என 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் போட்டியிட்டபோது சொன்ன வாக்குறுதி களை இப்போது இவரும் சொன்னார். சொன்ன வாக்குறுதிகளில், 60 ஆண்டு கோரிக்கையான தரைப்பாலம், மேம்பாலம் கட்டியுள்ளார். மாவட்ட தலைமை மருத்துவமனையாக குடி யாத்தம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி யுள்ளார். 30 ஆண்டுகால கோரிக்கையான புறவழிச் சாலை, சிறிய அளவிலான கைத்தறி பூங்கா, பேரணாம்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைத்துள்ளார். பேரணாம்பட்டு ஊராட்சி, நகராட்சி, காவிரி கூட்டுக்குடிநீர் 2 திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. கவுண்டன்யா மகாநதியில் 1450 வீடுகள் இடிக்கப்பட்டதில் பாதி பேருக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
"நான் பட்டியலினம் என்பதால் நம் கட்சியிலுள்ள சில நிர்வாகிகள் என்னை ஒதுக்குகிறார்கள்' என பொதுமேடையிலேயே கண்ணீர்விட்டு அழ... சர்ச்சையானது. டெண்டர் விவகாரம் உட்பட அனைத்தையும் மச்சினர் ரவியே டீல் செய்வதால் அவரை எதிர்க்க முடியாமல் சில நிர்வாகிகள் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு காட்டுகின்றனர். அமலு மீண்டும் சீட் வாங்கிவிட வேண்டுமென்று முயற்சிக்கிறார். இவருக்கு மா.செ. நந்தகுமார் ஆதரவாளர்களான குடியாத்தம் சேர்மனும் ந.செ.வுமான சௌந்தர், பேரணாம்பட்டு ந.செ. ஜுபேர் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அ.தி.மு.க.வி லிருந்து அ.ம.மு.க.விற்கு வந்ததால் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு, 2021-ல் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்து தி.மு.க.வில் அடைக்கலமான ஜெயந்தி பத்மநாபன் சீட் கேட்பாளராக உள்ளார். 2011, 2016 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், தீண்டாமை வழக்குகளை நடத்தும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் பிரபாத்குமார் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. செல்லகுமார், முன்னாள் தலைவர் கே.சி.அழகிரி போன்றவர்கள் மூலமாக வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் சீட் பெற முயற்சி செய்கிறார். இடதுசாரிகளின் வலிமை யான தொகுதிகளில் விருப்பப் பட்டியலில் இத்தொகுதி உள்ளதால் இத்தொகுதியை அவர் களும் கேட்க விரும்புகின்றனர். அ.தி.மு.க.வில் 2021-ல் நின்று தோல்வியடைந்த பேரணாம் பட்டு பரிதா மீண்டும் சீட் வாங்கிப் போட்டி யிட முயற்சிக்கிறார். 2018-ல் இடைத்தேர்தலில் நின்று தோல்வியடைந்த கஸ்பா மூர்த்தி இந்தமுறை எனக்குத் தாங்க, பெண்களுக்கு தருவதாக இருந்தால் எனது மனைவி கற்பகத் துக்கு சீட் தாங்க என முயற்சித்துவருகிறார்.
பேரணாம்பட்டு நகராட்சி முன்னாள் சேர்மன் வாசுகி பாண்டியன், அ.தி.மு.க. ந.செ. ஜே.கே.என்.பழனியின் மருமகன்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள், மருத்துவர்கள். இரண்டு மருமகன்களில் யாராவது ஒருவரை களமிறக்க முயற்சி செய்கிறார். மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷும் முயற்சி செய்கிறார்.
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேரா மல் நடிகர் விஜய் ஒரு கூட்டணி உருவாக்கினால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பும் இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், அக்கூட்டணி அமைந்தால் இத்தொகுதியில் போட்டியிடலாமென்ற முடிவில் உள்ளார். அது சரியாக வராதபட்சத் தில் கட்சியின் மண்டலத் தலைவர் ராசி.தலித் குமாரை நிறுத்தலாமென ஆலோசிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/27/kudiyatham-2025-10-27-17-20-16.jpg)