அ.தி.மு.க. உட்கட்சிக்குள் தனக்கு யாரும் போட்டி யாளர்கள் இருக்கக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக, அ.தி.மு.க.வினரில் சீனியரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பவர் சென்டராக வரக்கூடாதென்பதில் குறியாக இருக்கிறார் என கொங்கு மண்டல ர.ர.க்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

அ.தி.மு.க.வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையன் இருக்கிறார். ஆனால் நிர்வாக ரீதியாக எந்த முடிவையும் செங் கோட்டையனால் எடுக்க முடியாது. கோபிசெட்டிபாளை யத்தில் வசிக்கும் சசிபிரபு என்பவர் தான் அ.தி.மு.க.வில் அறிவிக்கப் படாத மாவட்டச் செயலாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்ற சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு காரணமானதால் கட்சியை விட்டு விலக்கப்பட்ட அந்தியூர் ஒ.செ. ஈ.எம்.ஆர்.ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்த்ததோடு, அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங் கப்பட்டதற்கு சசிபிரபு தான் காரணமாம். நம்பியூர் பகுதியிலும், பவானிசாகர் தொகுதியிலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களான பலரின் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டு புதியவர்       களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டு புதிதாக வந்தவர்களுக்கு அந்த பதவிகள் வழங்கப்பட்டதன் பின்னணியிலும் சசிபிரபு இருக்கிறாராம். அ.தி.மு.க. ஐ.டி. விங்கையே முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சசிபிரபு, எடப்பாடி பழனிச் சாமியின் மனைவியின் அக்கா மருமகனாம். கொங்கு மண்டல வழக்கப்படி கூறினால் 'நங்கையா மருமகன்'. இவர்தான் செங்கோட்டையனுக்கு எதிராகக் கடந்த ஓராண்டாக இங்கே செல்வாக்கோடு இருக்கிறாராம்.

செங்கோட்டையனை பொறுத்தவரை ஏற்கெனவே 9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர். 1996-ல் தி.மு.க .வேட்பாளர் ஜி.பி.வெங்கிடுவிடம் மட்டும் ஒருமுறை தோல்வியடைந்தார். இம்முறை பத்தாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கவேண்டுமென்ற விருப்பம் செங்கோட்டையனிடம் இருக்கிறது. ஆனால், இம்முறை செங்கோட்டையனுக்கு       சீட் இல்லை என்பதே எடப்பாடி பழனிச் சாமியின் முடிவு. கோபி தொகுதியின் அ.தி.மு.க. வேட் பாளர், இந்த சசிபிரபுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி. தமிழ்நாடு முழுக்க நீங்கள் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபடுங்கள் என செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி. இது அநியாயமில்லையா? எனப் புலம்புகிறார்கள் ர.ர.க்கள். செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான பவானிசாகர் எம்.எல்.ஏ. பன்னாரியும் எடப்பாடியின் லிஸ்டில் இல்லை யாம்.

Advertisment

செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் சீட் இல்லையென்றால் இத்தொகுதியில் தி.மு.க. சுலபமாக வெற்றி பெறும் என்று மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். தி.மு.க.வில் பத்து வருடங்களுக்கு மேல் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் நல்லசிவம், கட்சித் தலைமை இந்த முறை சீட் வழங்குமென்ற நம்பிக்கையோடு உள்ளார். அடுத்து, அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்து, தி.மு.க.வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளராக இருக்கும்  செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் செல்வம், அதேபோல் தி.மு.க.வில் ஐக்கியமாகி நெசவாளர் அணி செயலாளராக இருக்கும் சிந்து ரவிச்சந்திரன், மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என மணிமாறன், குமணன் ஆகியோரோடு கூட்டணி யான காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி சரவணன் என பலரும் வேட்பாளர்களாக அடிபோட்டு வருகிறார்கள். 

சீட் இல்லையென்றால் செங்கோட்டையன் வேறு கட்சியில் இணைவாரா என அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "வேறு கட்சியில் இணையும் திட்டம் எப்போதுமே அண்ணன் செங்கோட்டையனிடம் இல்லை. எல்லா கட்சித் தலைவர்களோடும் நட்புடன் பழகுபவர் தான் செங்கோட்டையன். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரிடமும் நட்பில் தான் உள்ளார். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அண்ணனுக்கு சீட் இல்லை என்று முடிவு செய்துவிட்டால், அண்ணன் தி.மு.க. தலைமைக்கு ஒரு தகவலை கொடுப்பார்.  அது, "தி.மு.க.விலுள்ள தனது அண்ணன் மகன் செல்வத்தை  தி.மு.க. வேட்பாளராக நிறுத்துங்கள். கோபிசெட்டி பாளையம் தொகுதி மட்டுமல்ல, அந்தியூர் மற்றும் பவானிசாகர் ஆகிய இந்த மூன்று தொகுதி                   களும் தி.மு.க. அணியை வெற்றி பெற வைக்க என்னால் முடியும்' என்பதுதான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சமீப காலமாக தனது கோபி தொகுதியில் மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் செங்கோட் டையன், வேறு ஊர்களில் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எடப்பாடியின் தற்போதைய சுற்றுப் பயணம் ஈரோடு மாவட்டத்திலிருக்கும் போது, "செங்கோட் டையன் வசமுள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய மூன்று சட்ட மன்றத் தொகுதிகளில் நடக்கும் பிரச்சாரப் பயணக் கூட்டத்தில் மக்களை அதிக அளவில் கூட்ட வேண்டும். அதைக்கண்டு செங்கோட் டையனே மிரள வேண்டும்' என தனது உறவினரான முன்னாள் அமைச்சர் பவானி கருப்பணனிடம் கூறியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கெனவே செங்கோட்டையனுக்கு எதிராக உள்ள பவானி கருப்பணன், கூட்டத்தை சேர்க்க தலைக்கு 300 என்பதை 500 ஆக உயர்த்தி பட்டியல் போட்டு வருகிறாராம். இதையடுத்து கோபிசெட்டிபாளையம் மட்டுமில்லாமல், ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் களமும் பரபரப்பாக செல்கிறது.

Advertisment