Advertisment

குழந்தையை பறிகொடுத்து கதறும் தாய் -இன்னொரு கொரோனா கொலை!

cc

கொரோனா கொலையினால் கணவனை இழந்து நிற்கும் கடலூர் சந்திராவை போன்று அதே கொரோனா கொலையினால் குழந்தையை பறிகொடுத்துவிட்டு கதறுகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சோனி.

Advertisment

cc

திருவட்டார் அடுத்த கல்லங் குழியை சேர்ந்த சின்ராஜ் மனைவி சோனி (24). சோனிக்கு முதல் குழந்தை சுகப்பிரசவம் என்பதால் இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவம்தான் என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், திடீரென சிசேரியன் என்றும், பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது என்றும் மருத்துவமனை ஆடிய

கொரோனா கொலையினால் கணவனை இழந்து நிற்கும் கடலூர் சந்திராவை போன்று அதே கொரோனா கொலையினால் குழந்தையை பறிகொடுத்துவிட்டு கதறுகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சோனி.

Advertisment

cc

திருவட்டார் அடுத்த கல்லங் குழியை சேர்ந்த சின்ராஜ் மனைவி சோனி (24). சோனிக்கு முதல் குழந்தை சுகப்பிரசவம் என்பதால் இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவம்தான் என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், திடீரென சிசேரியன் என்றும், பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது என்றும் மருத்துவமனை ஆடிய நாடகத்தை நம்மிடம் சொல்லி கதறுகிறார்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் கொரோனா பரிசோதனைனு சொல்லி ஒரு நாள் முழுக்க ராத்திரி பகலாக என்னை பாடாய் படுத்தினாங்க. 25-ம் தேதி கொரோனா எதுவும் இல்லைனு என்கிட்ட சொன்ன டாக்டரும் நர்சும் ஆபரேசன் செய்து குழந்தை யை எடுக்கணும்னு சொன் னாங்க. ஆபரேசன் செய்து அம்மா வார்டுல என்னை அனுமதிச்சாங்க. ரெண்டு நாளா என் மாமியாரையும், வீட்டுக்கார ரையும் பார்க்க அனுமதிக்கல. குழந்தைக்கு என்னாச்சுன்னும் என்கிட்ட சொல்லல. 27-ம் தேதிதான், உனக்கு கொரோனா இருந்ததுனால அது குழந்தைக் கும் பரவியதால் குழந்தை இறந்து போச்சுன்னு சொன் னாங்க.

Advertisment

ஆபரேசன் செய்த அன்னைக்கு கொரோனா இல்லைனு சொல்லிட்டு இன் னைக்கு திடீர்னு கொரோ னானு சொல்றீங்களேன்னு கேட்டு அழுதேன். அதனால, கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாம ஆபரேசன் செஞ்ச பச்ச புண்ணோடு என்னை கொரோனா வார்டுல கொண்டு போட்டாங்க. நான் எவ்வளவு கதறியும் கேட்கல. எனக்கு ஒண்ணு மட்டும் தெரிஞ்சி போச்சு. தவறான ஆபரேச னால குழந்தை இறந்து போயி ருக்குது. அத மறைக்கத்தான் இப்படி கொரோனானு ஒரு நாடகத்தை போட்டிருக்காங்க.

என் வாரிசை அழிச்ச தோடு இல்லாம கொரோனா நோயாளின்னு பச்ச குத்தி என்னையும், என் குடும்பத்தை யும் ஊரை விட்டே ஒதுக்கி வச்சி வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வச்சிட்டாங்க'' என்று கண்ணீர் வடிக்கிறார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் இதுகுறித்து நாம் கேட்ட போது, ""இந்த பெண்ணின் விசயத்தில் உண்மையி லேயே தவறு இருக்குமானால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்''’என்கிறார்.

""மருமகளுக்கு கொரோ னானு பொய் சொன்னத நம்பி நானும் என் மகனும் பேரனும் டெஸ்ட் பண்ணுன போது கொரோனா இல்லைனு சொன் னாங்க. ஆனா கவர்மென்ட் காரங்க எங்க மூணு பேரையும் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போய் கன்னியாகுமாரியில் ஒரு லாட்ஜில அடைச்சி வச்சி கஷ்டபடுத்திட்டாங்க. பேரப்பிள்ளையையும் கொன்னுட்டு எங்களையும் அகதிகளாக்கியவங்க நாசமாத்தான் போவாங்க. நாங்க இத சும்மா விட போறதில்லை'' என்று உறுதியாகச் சொல்கிறார் சோனியின் மாமியார் லலிதாகுமாரி.

-மணிகண்டன்

nkn010820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe