Advertisment

லண்டனில் அலறிய சிறுமி! சென்னையில் சிக்கிய கிழவன்! -அதிரவைக்கும் பாலியல் தொல்லை!

ll

முளைவிட்டு வரும் பயிருக்கு வெந்நீர் ஊற்றுவதும், சிறுவர்-சிறுமியரிடம் பாலியல்ரீதியாக அத்துமீறுவதும் ஒன்றுதான். ஆனால் இந்தக் கொடுமை உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது. வளர்ந்த நாடுகளில் சட்டமும் தண்டனையும் கடுமையாக உள்ளதால், ஒப்புநோக்க இத்தகைய குற்றங்கள் குறைவு. வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் இத்தகைய குற்றங்கள் அதிகம். பெரும்பாலோர், இதுகுறித்து புகார் கொடுக்கக்கூட முன்வரமாட்டார்கள்.

Advertisment

lo

இந்தியாவைப் பொறுத்தவரை பண்பாட்டுப் பெருமைமிக்க மண் என்பதால், இத்தகைய கொடூரங்களுக்கு இடமேயில்லை என்பதுதான் பெரும்பாலோர் நம்பிக்கை. ஆனால், புற்றுக்குள் நெளியும் பாம்பாக இங்கே பல கருநாகங்கள் உண்டு. வயது வித்தியாசம் இல்லாமல் அந்தப் பாம்புகள் படம் எடுத்து ஆடுகின்றன.

Advertisment

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐராகான், சமூக வலைத்தள க

முளைவிட்டு வரும் பயிருக்கு வெந்நீர் ஊற்றுவதும், சிறுவர்-சிறுமியரிடம் பாலியல்ரீதியாக அத்துமீறுவதும் ஒன்றுதான். ஆனால் இந்தக் கொடுமை உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது. வளர்ந்த நாடுகளில் சட்டமும் தண்டனையும் கடுமையாக உள்ளதால், ஒப்புநோக்க இத்தகைய குற்றங்கள் குறைவு. வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் இத்தகைய குற்றங்கள் அதிகம். பெரும்பாலோர், இதுகுறித்து புகார் கொடுக்கக்கூட முன்வரமாட்டார்கள்.

Advertisment

lo

இந்தியாவைப் பொறுத்தவரை பண்பாட்டுப் பெருமைமிக்க மண் என்பதால், இத்தகைய கொடூரங்களுக்கு இடமேயில்லை என்பதுதான் பெரும்பாலோர் நம்பிக்கை. ஆனால், புற்றுக்குள் நெளியும் பாம்பாக இங்கே பல கருநாகங்கள் உண்டு. வயது வித்தியாசம் இல்லாமல் அந்தப் பாம்புகள் படம் எடுத்து ஆடுகின்றன.

Advertisment

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐராகான், சமூக வலைத்தள காணொளி ஒன்றில், ""நான் சிறுவயதிலேயே பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். என்னிடம் தவறாக நடந்துகொண்ட நபர் நன்கு அறிமுகமானவர். அவர் நடந்துகொண்டவிதம் அப்போது எனக்குப் புரிய வில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு விவரம் தெரிந்தபோதுதான் பாலியல் சீண்டலுக்கு ஆளா னேன் என்பதே தெரிய வந்தது''’என்று தெரிவித்திருந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.

ஐராகானின் தெளிவு, தனக்கு ஏற்பட்ட கசப்பு அனுபவத்தை எளிதில் கடந்துவர வைத்துவிட்டது. சிலர் விஷயத்திலோ அது தலைகீழாகப் போய்விடுகிறது. அதற்கு சென்னையில் நடந்த விவகாரமொன்றையே உதாரணமாகச் சொல்லலாம்.

கடந்த 2014-ல் லண்டனிலிருந்து சுற்றுப்பயணமாக சென்னைக்கு வந்திருந்தது ஒரு குடும்பம். நம் வசதிக்காக தாய்க்கு மேகா, தந்தைக்கு ஆகாஷ், மகளுக்கு பபிதா என பெயர் வைத்துக் கொள்வோம். சுற்றுப்பயணம் முடிந்ததும் மீண்டும் லண்டன் திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஒட்டுமொத்தக் குடும்பமும் பார்த்துக்கொண்டு இருந்தது. அவர்களின் தூரத்துச் சொந்தமான டெக்ஸ்டைல் உரிமையாளரான 68 வயதான மோகன்கிசான் தலாணி, சிறுமி பபிதாவுக்கு கணினியில் வீடியோ கேம் விளையாடச் சொல்லிக்கொடுப்பதாக கூறி அறைக்குள் அழைத்துச் சென்றார். கதவை மூடிக்கொண்டு அந்தச் சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.

அவரது செயலைத் தட்டவோ, எதிர்த்துப் பேசவோ துணிவில்லாத பபிதா, ஒருவித திக்பிரமை நிலையில் இருந்துள்ளார். உறவினர்கள் அழைக்கும் சத்தம் கேட்டதும் தலாணி, சிறுமியை விட்டு விலகிச் சென்றுள்ளார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு லண்டன் திரும்பிய பபிதா, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு ஆண்களைக் கண்டாலே வெறுப்பது, தன் தலைமுடியை தானே சிதைத்துக் கொள்வது, தனிமையில் இருப்பது என ஆளே தலைகீழாக மாறிப்போனார்.

தந்தையைக்கூட அருகில் சேர்க்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இதே நிலையில் இருந் திருக்கிறார். சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாகக் கண்டுகொண்டு பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

பபிதாவை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் பெற்றோர். மருத்துவரால் உடனடியாக பபிதாவின் பிரச்சனையை அறிய முடியவில்லை. பபிதா சரிவரப் பேசவே இல்லை. அந்த மனநல மருத்துவர் சிறுமியின் பாதிப்பைக் கண்டறிய ஒரு வருடமாக சிறுமியிடம் நெருக்கமாகப் பழகி நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வந்துள்ளார். அதன்பின்னரே அந்தச் சிறுமி சென்னையில் தனக்கு நடந்த கொடுமைகளை மருத்துவரிடம் கூறியுள்ளார்.

ll

அதிர்ந்துபோன பெற்றோர் உடனே லண்டன் காவல் நிலையத்தில் புகாரளிக்க... "எங்களால் எதுவும் செய்ய முடியாது' என்று அவர்கள் கைவிரித்து விட்டனர். கடந்த மாதம் 25-ஆம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்த சிறுமியின் குடும்பத்தினர் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். புகாரை ஏற்ற காவல்துறை 68 வயதான மோகன்கிசன் தலாணியை கைதுசெய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்கள் கார்த்திக், சங்கரிடம் நாம் விசாரித்தபோது, ""வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த சிறுமியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய வழக்கை இந்தியா முதல்முறையாகச் சந்திக்கிறது. கைது செய்யப்பட்ட தலாணி "நான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை' என்று முதலில் மறுத்தார், பிறகு ஒப்புக்கொண்டுள்ளார். வழக்குப் பிரிவு எண் 6 போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.’’

தனது மகளுக்காக லண்டனிலிருந்து சென்னை வந்து புகார் கொடுக்கும் பெற்றோரின் துணிச்சல் எல்லா பெற் றோருக்கும் இருந்தால்... குழந்தைகளிடம் அத்துமீறும் கயவர்கள் மெல்ல மெல்ல இல்லாது ஒழிவார்கள்.

-சேகுவேரா

nkn091220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe