"என்னைக் கொண்டாட, ஆறுதல் வார்த்தைகள் சொல்ல ஆளில்லை. பெயருக்குத்தான் அவங்க மனைவி. சராசரி வாழ்க்கை யேகூட இல்லை. அவர் மந்திரியாக இருந்து என்ன பிரயோசனம்? ம்ம்...'' என்பது சமூகவெளியில் தனியாக இயங்கும் பெண்களை குறி வைத்து ஆண்கள் பேசும் வழக்கமான எமோஷனல் வார்த்தைகள் இவை. இதில் மந்திரி என்பதும் சேர்ந்து கொள்ள... அதனால் சிக்கி, சின்னபின்னமாகி காவல்துறை ஆணையரின் அலுவலகத்தில் புகாரளித்து நீதி கேட்டுள்ளார் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகை சாந்தினி.

2007-ம் ஆண்டு ராடன் மீடியா தயாரித்த "அரசி' சீரியல் மூலம் தமிழகத்திற்கு அறிமுகமான சாந்தினிக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ, சமுத்திரக்கனி இயக்கிய "நாடோடிகள்' திரைப்படமே. தற்பொழுது திரைப்பட வேலைகளுடன், மலேஷிய துணைத்தூதர கத்தில் தென்னிந்தியாவின் டூரிஸம் அம்பாசிடராக பதவி வகித்துவரும் நடிகை சாந்தினி, தற்பொழுது தனக்கிழைக்கப்பட்ட கொடுமைகளை ஆதாரங்களுடன் காவல்துறையிடம் சமர்ப்பித்து, நீதி கேட்டிருப்பது அ.தி.மு.க.வில் இராம நாதபுரம் முன்னாள் மா.செ. மற்றும் அமைச்சராகவும் பதவி வகித்த மணிகண்டனுக்கு எதிராக என்பதே. இது அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்க... சாந்தினியிடம் பேசினோம்.

manikandan

"அது 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி. "எனக்குத் தெரிந்த அமைச்சர் மலேஷியாவில் தொழில் துறையில் முதலீடு செய்யணும்னு நினைக்கிறார். நீதான் மலேஷியாவைச் சேர்ந்தவராயிற்றே! உதவி செய்'' என என்னிடம் உதவி கேட்டான் சினிமாவில் துணைநடிகராகவும், ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்துவரும் ராயபுரம் பரணி. அவனுடைய பேச்சை நம்பி அமைச்சர்களுக்கென ஒதுக்கப்பட்ட பங்களாவில் அமைச்சர் மணிகண்டனை சந்தித்தேன்.

Advertisment

எட்டு மணிக்கு ஆரம்பித்து இரண்டரைமணி நேரம் நீடித்த சந்திப்பில் பரஸ்பரமாக என்னுடைய அலைபேசி எண்ணை அவருக்கும், அவருடைய எண்ணை நானும் வாங்கி பரிமாறிக் கொண்டோம். அதற்கடுத்த நாட்களில் அவருடைய அலைபேசி எண்ணிலிருந்து "ஹாய்... ஹலோ...' எனக் கூறி குறுஞ்செய்திகளும், வாட்ஸ்-ஆப் பதிவுகளும் வரும். அதற்கு பதிலளித்தால் "சாப்பிட்டீயா...' என்கின்ற கேள்வியும் வரும்.

தொடர்ச்சியான சாட்களில் அவர் என்மேல் அக்கறை எடுத்துக் கொண்டதுபோல் குறுஞ்செய்திகள் அனுப்பி வைப்பது நடைபெற... அவர் மீது மிகுந்த மரியாதை உருவானது. நட்பாக இருந்த உறவில், திடுமென ஒரு நாள், "என் மனைவி ரொம்ப கொடுமைக்காரி... என்னை மதிப்பதேயில்லை.

சாப்பிட்டியான்னு கேட்டதுகூட இல்லை. உண்மையைச் சொல்லணும்னா தாம்பத்யம் என்பதே எங்க இரண்டு பேருக்கும் கிடையாது. அவளோட வாழவே விரும்பலை. பிடிக்காத திருமணத்தை எனக்கு செய்து வச்சுட்டாங்க'' எனக்கூறி என்னிடம் ஆறுதல் தேடிக்கொள்வார். "பாவம்... எவ்வளவு பெரிய மனுஷன் இவருக்கா இந்த நிலைமை..?' என அவர்மீது பரிதாபம் கொண்ட நிலையில்... நெருங்கிப் பழக ஆரம்பித்தோம்.

Advertisment

இந்த காலக்கட்டத்தில்தான் 2018-ம் ஆண்டு சனவரி மாதம் என்னிடம் அவர், "என்னை திருமணம் செய்து கொள்கிறியா..?'' எனக்கேட்டு காதல் புரபோஸ் செய்தார். நானும் அவருடைய பேச்சை நம்பியதால் அதனை மறுக்கவில்லை. மந்திரியின் அரசு பங்களாவிலேயே இருவரும் தனியாக நெருக்கமாக இருந்த சூழலில்... திடுமென பெசண்ட் நகர் பீச் எதிரிலுள்ள அபார்ட் மெண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் வாடகையில் வீடு பிடித்து என்னை தனியாக குடித்தனம் வைத்தார்.

ராமநாதபுரத்திலிருந்து, மதுரையிலிருந்து எப்பொழுது சென்னை வந்தாலும் அவர் தங்குவது என்னுடன்தான். அவருடைய காரான பச65ஆக4777 காரில்தான் பயணம் செய்வேன். அவருடைய டிரைவர் ராம்குமார்தான் என்னுடைய டிரைவராக இருந்தார். ஏன்...? ஒருமுறை சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது துறைரீதியான விவாதம் வரும்போது, அவர் மனைவியாக சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்தேன். டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவரோட மனைவியாக தங்கியிருக்கேன்.

ஆரம்ப காலகட்டங்களில் "இப்போதைக்கு நாம குழந்தை பெத்துக்க வேணாம், அது அரசியல் ரீதியாக என்னுடைய வளர்ச்சியைக் கெடுக்கும்' என காப்பர்-டி பயன்படுத்த வைத்தார். கருத்தடை மாத்திரை உபயோகம் செய்ய வைத்தார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் அந்த மூன்று நாட்களில்கூட என்னை பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக மிருகத்தனமாக உறவு வைத்துக் கொள்வர். எந்த நாளாக இருந்தாலும் அவருக்கு செக்ஸ் வேண்டும். அப்படி ஒரு சைக்கோ.

மந்திரியின் அரசு பங்களாவில் இருந்தபோது 2019-ம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று என்னுடைய வயிற்றில் கரு வளர்ந்ததை பூரிப்புடன் அவரிடம் சொல்ல, கருவைக் கலை என குதிக்க ஆரம்பிச்சார். அடித்து காயப்படுத்தினார்.

உடலெங்கும் காயத்துடன் இருந்த நான், அங்கிருந்த மண்ணெண் ணெய்யை எடுத்து ஊற்றி தற்கொலை செய்துக்க முனைந்தேன். பின்பு அங்கிருந்த செக்யூரிட்டி போலீஸ், வேலைக் காரங்க மூலமாக மீட்டெடுக்கப்பட்டு, அவருடைய நண்பரான டாக்டர் அருண் பணியாற்றும் லைப்மெட் மருத்துவமனையில் தங்க வைக்கப் பட்டு கட்டாயமாக கருக்கலைப்புக்கு ஆளானேன். அது அரைகுறை யாக முடிய என்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு ரொம்ப அவதிக்குள்ளானேன்.

அப்பப்ப சண்டைய ஆரம்பித்து அடிக்க ஆரம்பிப்பார். திடு மென காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார். இதில் சந்தேகம் வேறு. ஊரில் அவர் இல்லாத நாட்களில் போன் செய்து விசாரிப்பார். பெரும் பாலும் வீடியோகாலில் வந்து "வீட்டில் யாராவது இருக்கிறார்களா..?' என பார்ப்பார். இப்ப என்னடான்னா வளர்ந்து வரும் பிரபல நடிகரை வைத்து சந்தேகப்படுகின்றார். என்ன செய்வது..? பிரிந்து விடலாம் என்றால் கொலை மிரட்டல் விடுக்கின்றார். வேறு வழியில்லாமல்தான் புகாரளித்தேன்'' என்கிறார் அவர்.

"என்னை திருமணம் செய்கின்றேன் என மோசடியான நம்பிக்கை வார்த்தை 5 வருடமாக ஒரே வீட்டினில் வாழ்ந்து, மூன்றுமுறை கட்டாயமாகக் கருவை அழித்து தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் என்னுடைய அந்தரங்கப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும், கூலிப்படையை வைத்து கொலை செய்வேன் மிரட்டுவதாகவும்'' கூறுகின்றது மாஜி மந்திரி மணிகண்டன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் மனு.

இந்நிலையில், காவல்துறையின் புகாருக்கு முன் கடந்த 23-05-2021 அன்று சாந்தியினியின் வழக்கறிஞர் சுதனின் சைதாப்பேட்டை அலுவலகத்தில், சுதனுடன் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் வழக்கறிஞர் குணசேகரனுடன் விவகாரம் வெளியில் தெரியக்கூடாது என பேச்சுவார்த் தையை நடத்தியிருக்கின்றார் மாஜி மணிகண்டன்.

இது இப்படியிருக்க, மாஜி மந்திரி மணிகண்டன் மீது தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள புகார் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினால் கிளப்பி விடப்பட்டுள்ளது என்றும், மந்திரி மணிகண்டனுடன் இருக்கும் செல்பி புகைப்படம் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டவர்களுடன் நடிகை நிற்பதுபோல் உள்ள படங்களையும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு வருகின்றனர் மாஜி மணி கண்டனின் ஆதரவாளர்கள்.

மாஜி மந்திரி மணிகண்டனிடம் பேசினோம்... "அந்தம்மா மாதிரி நிறைய பேர் இங்க வந்து பெரிய இடத்து ஆட்களோட பழகி பணம் பறிப்பதையே தொழிலா வச்சிருக்காங்க.

இதில் அந்தம்மா யாருன்னே தெரியாது. அது முழுக்க பொய். இது அவருக்கு தொழில் என்றவர், "கடந்த வாரத்தில் என்னுடைய வக்கீலோடு அந்தம்மாவோட வக்கீலை பார்க்கப் போனேன். முதலில் ரூ.5 கோடி அளவில் பேரம் பேசினாங்க.

அதன்பின் ரூ.3 கோடி, அதன்பின் ரூ. 1கோடி... அதற்கப் புறம் ரூ.50 லட்சம், அப்புறம் ரூ.30 லட்சம் என பேரம் பேசி னாங்க. பத்து பைசா தரமுடி யாதுன்னுட்டேன்'' என்றவரிடமிருந்து, "அந்தம்மாவைத் தெரியாதுன்னு கூறுகிறீர்கள்.? எதற்காக அங்கு செல்ல வேண்டும்.?'' என்ற கேள்வி எழுப்பினோம்... பதிலில்லை.

இதேவேளையில், நடிகை சாந்தினியை அறிமுகப்படுத்திய, தற்பொழுது மிரட்டிவருவதாக கூறப்பட்ட நடிகர் பரணியை தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்கவில்லை அவர்.

படங்கள்: விவேக்