Advertisment

மருத்துவர்களோடு மோதும் சயன்டிபிக் ஆபீசர்! ஸ்டான்லி ஸ்டன்ட்!

stanley

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் உடற் கூராய்வுத் துறையில் நடக்கும் உள்ளடி பாலிடிக்ஸ் பெருத்த விவகாரமாக உருவாகியுள்ளது. இதுகுறித்து, உடற்கூராய்வுத் துறை மருத்துவர்கள் தரப்பில் விசாரிக்கையில், அங்கு தடயவியல் மருத்துவத் துறையில் சயன்டிபிக் ஆபீசராகப் பணியாற்றும் லோக நாதன், தங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், மருத்துவமனையின் விதிமுறைகளுக்கு மாறாக, இங் குள்ள முக்கிய ஆவணங்களைப் புகைப்படமெடுத்தும், வீடியோ எடுத்தும் தேவையற்ற சர்ச்சை களைக் கிளப்ப

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் உடற் கூராய்வுத் துறையில் நடக்கும் உள்ளடி பாலிடிக்ஸ் பெருத்த விவகாரமாக உருவாகியுள்ளது. இதுகுறித்து, உடற்கூராய்வுத் துறை மருத்துவர்கள் தரப்பில் விசாரிக்கையில், அங்கு தடயவியல் மருத்துவத் துறையில் சயன்டிபிக் ஆபீசராகப் பணியாற்றும் லோக நாதன், தங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், மருத்துவமனையின் விதிமுறைகளுக்கு மாறாக, இங் குள்ள முக்கிய ஆவணங்களைப் புகைப்படமெடுத்தும், வீடியோ எடுத்தும் தேவையற்ற சர்ச்சை களைக் கிளப்புவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

Advertisment

stanley

"2008ஆம் ஆண்டில் கீழ்ப் பாக்கம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் லோகநாதன் பணியாற்றியபோது, அங்கு பிரேதப்பரிசோதனைக்கான அலவன்ஸ் தொகையைத் தனக் குத் தரவில்லையென்று புகாரளித் திருக்கிறார். அதையடுத்து நடை பெற்ற விசாரணையில், லோக நாதன் பிரேதப்பரிசோதனையின் போது கலந்துகொள்வதில்லை யெனக்கூறி, அவரை அங்கிருந்து மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு பணிமாற்றம் செய்துள்ளார்கள்.

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்ற லோகநாதன் மீது, அங்கு பணியாற்றிய டாக்டர் வள்ளிநாயகம், டாக்டர் முரு கேசன் ஆகியோரும், உடற்கூராய் வின்போது சரிவர பணியாற்றுவ தில்லையென்று கல்லூரி முதல்வரிடம் குற்றச்சாட்டு வைக்க, அதில் நடைபெற்ற விசாரணையில், லோகநாதனுக்கு போஸ்ட்மார்ட்டம் அலவன்ஸ் தரமுடியாதென்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்னொரு விவகாரத்தில், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் துறையில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து நடந்த விசாரணை யிலும் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லையென்று தெரிய வந்ததோடு, ஸ்டான்லி மருத் துவக் கல்லூரிக்கு மாற்றப் பட்டுள்ளார். இங்கும் லோக நாதன் முறைகேடாக இங்குள்ள பதிவேடுகளைப் புகைப்பட மெடுப்பது, அவதூறு பரப்புவ தெனத் தொடர்ந்திருக்கிறார். இதைக் கண்காணிக்க சி.டி.டி.வி. கேமரா பொருத்தியதும் உடற்கூராய்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளார்.

மேலும், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் வருகைப்பதிவேட்டில் கையெ ழுத்து போடுவதை ரகசியமாக வீடியோ எடுத்து விவகார மாகியிருக்கிறது. லோகநாதனுக்கு, மருத்துவர்கள் மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி இருப்பதாக, ஸ்டான்லி முதல்வர் பாலாஜி யிடம் பலமுறை புகாரளித்தும் கண்டுங்காணாமல் இருந்திருக் கிறார். அவரும்கூட சமீபத்தில் தான், பேராசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி லோக நாதனை அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்'' என்றனர்.

சயன்டிபிக் ஆபீசர் லோகநாதனிடம் அவர்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாதுங்க'' என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார்.

Advertisment

nkn220423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe