"அல்லாடும் மலைக் கிராமப் பள்ளிகள்! அலட்சி யத்தில் அமைச்சர்' என்ற தலைப்பில் 2022 ஜனவரி 5ஆம் தேதி இதழில் செய்திக் கட் டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில், தமிழ்நாட் டில் வனத்துறை நிர்வாகத் தின் கீழ் ஜவ்வாது மலையில், திருவண்ணாமலை மாவட் டத்தில் 18 பள்ளிகள் உள் ளன. வனத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள இந்த பள்ளி களின் நிர்வாகம் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, 2010க்கு பிறகு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக மாக உள்ளன. பாடங்கள் சரியாக நடத்துவதில்லை. இதனால் தேர்வில் மாணவிகள் தோல்வியுற்றால்
"அல்லாடும் மலைக் கிராமப் பள்ளிகள்! அலட்சி யத்தில் அமைச்சர்' என்ற தலைப்பில் 2022 ஜனவரி 5ஆம் தேதி இதழில் செய்திக் கட் டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில், தமிழ்நாட் டில் வனத்துறை நிர்வாகத் தின் கீழ் ஜவ்வாது மலையில், திருவண்ணாமலை மாவட் டத்தில் 18 பள்ளிகள் உள் ளன. வனத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள இந்த பள்ளி களின் நிர்வாகம் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, 2010க்கு பிறகு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக மாக உள்ளன. பாடங்கள் சரியாக நடத்துவதில்லை. இதனால் தேர்வில் மாணவிகள் தோல்வியுற்றால் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள், மாணவர்கள் தோல்வியுற்றால் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்' எனப் பழங்குடியின அமைப்புகள் வேதனை தெரிவிப்பதைத் தெரிவித்திருந்தோம்.
எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும், வனத்துறை டி.எப்.ஓ., மண்டல அலுவலர், வனத்துறை செயலாளர், பழங் குடியினர் நலத்துறை வழியாக சுற்றி வளைத்து பள்ளிக் கல்வித் துறைக்கு செல்வதால் எந்த முடிவும் உடனே எடுக்கப்படுவதில்லை. இந்த 18 பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் ஆதங்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில், வனத்துறை பள்ளியின் நிர்வாகத்தை பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. அக்கோரிக்கை, ஓராண்டுக்குப் பின் நிறைவேறியுள்ளது.
2023-2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தபோது, "ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை, சீர்மரபினர் மற்றும் வனத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள், இனி மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்'' என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியின நலத்துறையின்கீழ் 308 பள்ளிகள், விடுதிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் 1136 பள்ளிகள், விடுதிகள், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் 36 பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 295 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நோட்-புத்த கம் உட்பட அனைத்தையும் கல்வித்துறையே தருகின்றன. நிர்வாகம் மட்டும் வேறு துறையின் வசமிருக்கும். தற்போது மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறி விப்பு, பழங்குடியின, பட்டியலின மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு செட்யூல் ட்ரைப் மலையாளி பேரவையின் கிளைச் செயலாளர் உதயகுமார் நம்மிடம், "தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இதுகுறித்த கோரிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தோம். நக்கீரன் எங்கள் மலைக்கே வந்து செய்தி எடுத்து எங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இப்போது வனத்துறை பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப் படும் என அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கி யுள்ளது'' என்றார்.
-கிங்