முதல்வருக்கு நிதி வழங்கிய பள்ளி மாணவிகள்!

ss

மிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனைக்கு, ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கும் நிகழ்ச்சி, 24ஆம் தேதி திங்களன்று நடைபெற்றது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மானாமந்தி ஊராட்சி பகுதியில் முதல்வர் மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திடீரென மேடையில் ஏறிய இள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில்

மிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனைக்கு, ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கும் நிகழ்ச்சி, 24ஆம் தேதி திங்களன்று நடைபெற்றது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மானாமந்தி ஊராட்சி பகுதியில் முதல்வர் மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திடீரென மேடையில் ஏறிய இள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் 12 ஆயிரத்துக்கான வரைவோலையை வழங்கினார். "எதற்கு இந்த பணத்தை வழங்குகின்றீர்கள்?' என்று அந்த மாணவியிடம் கேட்டதற்கு, "ஒன்றிய அரசு முன்மொழிக் கொள்கையை திணிக்கப்பார்க்கிறார் கள், இதை தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள், இதனால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் தாமதப் படுத்திக்கொண்டே உள்ளனர். இதற்காக நான் மேற்படிப்புக்காக சிறுசேமிப்பாக சேர்த்து வைத் திருந்த 12,000 ரூபாயை முதல்வர் நிதிக்கு வழங்கு கிறேன்'' என்று மேடையில் கூறியதும், மேடையி லிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.

ss

தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 21, 22 ஆகிய தேதி களில் ஆய்வுப் பயணம் மேற் கொண்டார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு பள்ளிக்கல்வி நிதியான ரூ.2 ஆயிரம் கோடி தருவோம் என்ற ஒன்றிய கல்வியமைச்சரின் பேச்சுக்கு முதல்வர், "குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்' என்று திட்ட வட்டமாக தெரிவித்தார்.

இதனை வீட்டுத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர், தனது சேமிப்பிலிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கல்வி நிதிக்கான தனது பங்களிப்பை அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களான பால சுப்பிரமணியன், சாந்தி ஆகியோரது பேத்தியும், மருத்துவர்கள் கலைக்கோவன், கிருஷ்ண பிரியா ஆகியோரது மகளுமான நன்முகையின் செயல் குறித்து சிறுமியின் தாத்தா பாலசுப்பிரமணியன் கூறுகையில், "கடலூரில் முதல்வர் பேசியதை வீட்டில் சிறுமி டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். உடனே என்னிடம், "தாத்தா அந்த காசு நாம கொடுக்கலாமா?' என்று கேட்டாள். உடனே உண்டியலை எடுத்து வந்து கொடுத்தாள். அதில் 9 ஆயிரத்து 150 இருந்தது. மீதி பணத்தை நான் போட்டு 10 ஆயிரமாக வங்கி காசோலையாக எடுத்துக் கொடுத்து அனுப்பியுள்ளேன். இவளுக்கு இதுபோன்ற எண்ணம் தோன்றியது எங்களுக்கே வியப்பாக இருந்தது'' என்றார்.

-அரவிந்த், காளிதாஸ்

nkn010325
இதையும் படியுங்கள்
Subscribe