டலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே கேட்கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்வே மார்க்கத்தில் கடலூர்- சிதம்பரம் இடையிலுள்ள செம்மங்குப்பம் ரயில்வே கேட், ரயில் வரும்போது மூடாததால் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களுடன் தண்டவாளத்தைக் கடக்க, வேகமாக வந்த ரயில் மோதி மாணவி உட்பட மூன்று பேர் பலியாயினர். வேன் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூலை 8ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி வேன் தங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இந்த ரயில்வே கேட் வழியாக வந்திருக்கிறது. பொதுவாக, கேட் மூடாமல் இருந்தால் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடந்து வந்துவிடும். அப்படி ரயில்வே கேட் திறந்திருந்ததால் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடந்திருக்கிறது. அப்போது விழுப்புரத்தி லிருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரயில், வேன்மீது மோதி இழுத்துச்சென்று 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தூக்கியெறிந்துள்ளது. 

அப்பகுதியில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவர் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் செல்ல, விபத்தில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்துகிடக்க அதில் சிக்கினார். வேனில் பயணம்செய்த மாணவர்கள் விஸ்வேஷ், நிமிலேஷ், சாருமதி, செழியன் ஆகிய நான்கு பேரில் சாருமதி, செழியன், நிமிலேஷ் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணாதுரை, மாணவர் விஸ்வேஷ், டிரைவர் சங்கர் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார், தென்னக மேலாளர் ஆர்.என். சிங் குழு விசா ரணை நடத்தியது.

Advertisment

பொதுவாக ரயில்வே கேட்டுகள் இன்டெர்லாக் முறையில் செயல்படுகின்றன. இதன்மூலம் ரயில் வரும் தகவலை முன்கூட்டியே சிக்னல் மூலம் தெரிந்து கொண்டு கேட் கீப்பர்கள் கேட்டை மூடிவிடுவார்கள். ரயில் கடந்து சென்றபிறகு கேட் டைத் திறப்பது வழக்கம். இந்த கேட் இன்டர்லாக் முறையில் அமைக்கப்பட வில்லை. அதனால் அருகி லுள்ள ரயில்வே ஸ்டே ஷன் மாஸ்டர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரயில் வருவதை உறுதிசெய்து கொண்டு கேட்டை மூடித் திறப்பது கேட் கீப்பரின் வழக்கம். இந்த விபத்தின்போது கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் தூங்கிக்கொண்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்துள்ளது. (இதற்கு முன்னும் 5 முறை இதேபோல் தூங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது) இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து ரயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்,

 அந்த வேனில் 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். இதில் ஆறாம் வகுப்பு படிக்கும் நிமிலேஷ் படுகாயமடைய, அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே வயல்வெளியில் வேலைசெய்துகொண்டி ருந்தவர்கள், பக்கத்திலிருந்த கிராம மக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். கேட்கீப்பர் பங்கஜ் சர்மா ரயில் வருவதற்கு முன்பே கேட்டை மூடவில்லை என்ற காரணத்தால் இந்த விபத்து நடந்ததாகக் கருதி அவ்வழியாக சென்றவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். 

bus-train1

Advertisment

விபத்தில் சிக்கிய தொண்டமாநத்தம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த விஜயா சந்திரகுமார் மகன் விஸ்வேஷ், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர். படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். சம்பவமறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், காவல்துறை எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து அடிபட்ட வர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுபோக ரயில்வே துறையும் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 2.50 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளது. விபத்தில் இறந்துபோன சாருமதி, செழியன் இருவரும் அக்காள், தம்பி என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட அமைச்சர்கள் சி.வி. கணேசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விரைந்துசென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில், விபத்து நடந்துள்ள செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் அண்டர் பாஸ் எனப்படும் சுரங்கப் பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியைத் தருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரி வித்துவிட்டதாகவும், கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஓராண்டு காலமாக அனுமதி தரவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளது.

"காலையில் பள்ளிக்கு உற்சாகமாக வேனில் சென்ற மாண வர்கள், மாலையில் மார்ச்சுவரியில் சடலமாக இருப்பதைப் பார்த்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கதறியழுதது நெஞ்சை பதைபதைக்கச் செய்தது'' என சம்பவ இடத்திலிருந்த போலீசார் கூறினர். 

பள்ளி -கல்லூரிகள் போதிய அனுபவம் இல்லாத, ஓய்வுபெற்ற, வயதான நபர்களையே பள்ளி கல்லூரி வாகனங்களுக்கான டிரைவர்களாக பணிக்கு அமர்த்துகின்றனர். அவர்களுக்கு சமயங்களில் கண் பார்வைக் குறைபாடு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இதுவும் பலசமயங்களில் விபத்துகளுக்கு காரணமாகின்றன. எனவே பள்ளி, கல்லூரிகளின் வாகனங்கள், ஓட்டுநர்களின் பயன்பாட்டில் சில நெறிமுறைகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.