பெற்றோர்களின் போராட்டம்,…பொதுப்பள்ளி களுக்கான "மாநில மேடை' அமைப்பின் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து,…தமிழகம் முழுக்க தனியார் பள்ளி களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டாலும்... புதிய, புதிய வடிவங்களில் நூதன முறையில் கொள்ளை யடித்துக்கொண்டுதான் இருக்கின்றன தனியார் பள்ளிகள். இதுகுறித்து, புகார் கொடுத்த பெற் றோருக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஆடியோ-வீடியோ ஆதாரத் துடன் அம்பலமாகியிருக்கிறது. நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழ்நாடு முழுக்க எப்படி யெல்லாம் தனியார் பள்ளி கள் கொள்ளையடிக்கின்றன என்பது தெரிய ஆரம்பித்தது.
கல்வி அதிகாரிகளி டம் புகார் கொடுத்ததால் மிரட்டலுக்குள்ளான முகமது யூனூஸ் நம்மிடம், ""என் அண்ணன் பிள்ளைகள் 2 பேர், தங்கச்சி பிள் ளைகள் 3 பேர்... ஆக மொத்தம் 5 பேர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரத்திலுள்ள எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 2019 ஏப்ரல் 26-ஆம் தேதி பள்ளியிலிருந்து வந்த அறிக்கையின்படி நிர்ணயித்த கட்டணத்தைவிட சுமார் 10,000 ரூபாய்க்குமேல்
பெற்றோர்களின் போராட்டம்,…பொதுப்பள்ளி களுக்கான "மாநில மேடை' அமைப்பின் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து,…தமிழகம் முழுக்க தனியார் பள்ளி களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டாலும்... புதிய, புதிய வடிவங்களில் நூதன முறையில் கொள்ளை யடித்துக்கொண்டுதான் இருக்கின்றன தனியார் பள்ளிகள். இதுகுறித்து, புகார் கொடுத்த பெற் றோருக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஆடியோ-வீடியோ ஆதாரத் துடன் அம்பலமாகியிருக்கிறது. நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழ்நாடு முழுக்க எப்படி யெல்லாம் தனியார் பள்ளி கள் கொள்ளையடிக்கின்றன என்பது தெரிய ஆரம்பித்தது.
கல்வி அதிகாரிகளி டம் புகார் கொடுத்ததால் மிரட்டலுக்குள்ளான முகமது யூனூஸ் நம்மிடம், ""என் அண்ணன் பிள்ளைகள் 2 பேர், தங்கச்சி பிள் ளைகள் 3 பேர்... ஆக மொத்தம் 5 பேர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரத்திலுள்ள எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 2019 ஏப்ரல் 26-ஆம் தேதி பள்ளியிலிருந்து வந்த அறிக்கையின்படி நிர்ணயித்த கட்டணத்தைவிட சுமார் 10,000 ரூபாய்க்குமேல் கூடுதலாக கேட்டதால் அதிர்ச்சியடைந்தோம். உடனே, ஏப்ரல் 30-ஆம் தேதி மதியம் 1:07 மணிக்கு சி.இ.ஓ. ஆபீசுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினோம். டி.இ.ஓ. ஆபீசிலுள்ள சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜின் போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னதால் அவரிடம் விவரங்களைச் சொன் னோம். அதோடு, "இப் போதைக்கு இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் எங்களது விவரத்தை சொல்லிடாதீங்க. எங்களை மிரட்டி டி.சி. வாங்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. அத னால, மனு கொடுத்த பிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுங்க' என்று அவரிடம் மிகவும் தாழ்மையான வேண்டு கோளை வைத்தோம். ஆனால், அடுத்த ஒருமணி நேரத்தில் நாங்கள் புகார் தெரிவித்த பள்ளியின் அறங்காவலர் எஸ்.எம்.பி. சாகுல் அமீதுவிடமிருந்து மிரட்டல் போன் வந்தது'' என்று அதற்கான ஆடி யோவை அனுப்பினார்.
அந்த ஆடியோவில், “""பீஸ் அதிகமா இருந்தா வேற ஸ்கூலில் சேர்த்துக் கோங்க.… கிரிமினல் வேலைய காண்பிச்சா நாங்களும் காட்டுவோம். பிள்ளைகள கூட்டிக்கிட்டுப் போங்க. நான், சேர்க்க மாட் டேன்னு முடிவு பண்ணிட்டா எங்க போனாலும் ஒண்ணும் பண்ணமுடியாது''’என்று மிரட்டலாகப் பேசுகிறார் பள்ளியின் நிர்வாகி சாகுல் அமீது. இதனால், மாவட்ட ஆட்சியர், நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய கமிட்டி என கல்வித்துறை சார்ந்த அனைவருக்கும் புகார் அனுப்பிய முகமது யூனூஸ் நம்மிடம், “""தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ‘"கால் யுவர் கலெக் டர்'’என்ற தனிப்பிரிவுக்கான 86808 00900 எண்ணுக்குப் புகார் கொடுத்ததால், கலெக்டரின் உத்தரவின்படி 2019, மே 23-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு தூத்துக்குடி டி.இ.ஓ. மற்றும் கல்வித்துறை சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜனும் எம்.எம். பள்ளிக்கு வந்து அட்மினிஸ்ட்ரேஷன் விஜயனிடம் விசாரணை செய்தார்கள். "அரசால் நிர்ண யிக்கப்பட்ட பள்ளிக் கட்டண விவரங்களை சட்டப்படி பள்ளி யில் ஒட்டி வைக்காதது ஏன்? மாணவர்களிடம் புத்தகங்களுக்கு இவ்வளவு தொகைதான் வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்த தொகையைவிட மிக மிக பலமடங்கு பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட நீங்கள் "நோட்டு, புத்தகம் அண்ட் அதர்ஸ்' என்கிற பெயரில் எதற்கெல்லாம் பணம் வாங்கு கிறீர்கள் என்று தனித்தனியாக பட்டியல் கொடுங்கள்' என்று கேட்டதற்கு முறையான பதிலை கொடுக்கவில்லை.
ஆனால், மறுநாள் மதியம் 2:00 மணிக்கு நான் வேலை செய்யும் கடைக்கு வந்த ரத்தினக் குமார், செங்கோட்டையன் மற் றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இன்னொருவர் என மூவரும் புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார் கள். அதனால், எனக்கும் எனது குடும்பத்தின ரின் உயிருக்கும் பாதுகாப்பு கேட்டு திருநெல் வேலி பாளையங்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர், நெல்லை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரி களிடமும் புகார் கொடுத்தேன். ஆனால், இதுவரை எனக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளிநிர்வாகி சாகுல் அமீது மீதும், அவர் களது பெயரைச் சொல்லிக்கொண்டு வந்த அடியாட்கள் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்''’என்கிறார் வேதனையோடு.
டி.இ.ஓ. சப்- இன்ஸ்பெக்டர் தர்ம ராஜிடம் நாம் கேட்டபோது, ""உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத் தில்தான் பள்ளி நிர்வாகியிடம் அவரது பெயரைச் சொன்னேன்''’என்று சமாளித்தார்.
குற்றச்சாட்டுக்குள்ளான தனியார் பள்ளி அறங்காவலர் எஸ்.எம்.பி. சாகுல் அமீதுவிடம் நாம் பேசியபோது, ""மிரட்டும் நோக்கத்தில் பேசவில்லை. மேலும், அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைதான் வசூலிக்கிறோம். யோகா, ஸ்விம் மிங் போன்ற கோச்சிங்குகளுக்குத்தான் எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிக்கிறோம்''’என்றார். கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டும் நட வடிக்கை எடுக்காத சி.இ.ஓ. முருகேஷ் அதி ரடியாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்.
புகார்தாரர் முகமது யூனூஸ் நம்மிடம், ""பள்ளியை மூடுவது எங்களது நோக்கமல்ல. மாணவர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக, கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுத்தாலே போதும். ஆனால், "திருப்பிக் கொடுக்க முடியாது.… பள்ளியை மூடிவிட்டு நீதான் காரணம் என்று பெற்றோர்களை உனக்கு எதிராக திருப்பிவிடுவோம்' என்று மிரட்டி வருகிறது பள்ளி நிர்வாகம். அரசாங் கம்தான் உரிய நடவடிக்கை எடுத்து அனைத் துப் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாக்க வேண்டும்''’என்கிறார் கோரிக்கையாக.
இது, ஒரு பள்ளியின் பிரச்சனையல்ல. தமிழகத்திலுள்ள மற்ற தனியார் பள்ளிகளிலும் இந்நிலை தொடராமல் நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.
-மனோசௌந்தர்