சென்னை சேத்துப்பட்டு பகுதி டைலர்ஸ் ரோட்டில் சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிதான் சுற்றுவட்டாரத்திலேயே மிகக் குறைவான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி என்ற பெயரும் உண்டு. திடீரென பள்ளியை மூடப்போகிறோம் என பள்ளி நிர்வாகம் சொல்ல, அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் பெற் றோர்.
இதுகுறித்து பெற்றோர் களில் ஒருவரான ராமதூதன் கூறியதாவது, "என் இரண்டு குழந்தைகளுமே இந்தப் பள்ளியில்தான் படிக்கிறார் கள். சமீபத்தில் பெற்றோர்களை அழைத்து மீட்டிங் வைத்தது பள்ளி நிர்வாகம். "50 சதவீத மாணவர்கள், கட்டணம் கட்டவில்லை... அதனால் எங்களால் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நாங்கள் பள்ளியை மூடுகிறோம்'
சென்னை சேத்துப்பட்டு பகுதி டைலர்ஸ் ரோட்டில் சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிதான் சுற்றுவட்டாரத்திலேயே மிகக் குறைவான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி என்ற பெயரும் உண்டு. திடீரென பள்ளியை மூடப்போகிறோம் என பள்ளி நிர்வாகம் சொல்ல, அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் பெற் றோர்.
இதுகுறித்து பெற்றோர் களில் ஒருவரான ராமதூதன் கூறியதாவது, "என் இரண்டு குழந்தைகளுமே இந்தப் பள்ளியில்தான் படிக்கிறார் கள். சமீபத்தில் பெற்றோர்களை அழைத்து மீட்டிங் வைத்தது பள்ளி நிர்வாகம். "50 சதவீத மாணவர்கள், கட்டணம் கட்டவில்லை... அதனால் எங்களால் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நாங்கள் பள்ளியை மூடுகிறோம்' என்றார்கள். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே பள்ளி மாணவர்கள் பணம் கட்டவில்லை என்பது உரிய காரணம் இல்லை.
1969 முதல் இந்தப் பள்ளி காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில் செயல்பட்டு வருகிறது. குத்தகைக் காலம் முடிந்து மறு குத்தகைக் காலம் துவங்கிய போது வாடகைத் தொகையை உயர்த்தியுள்ளது கோவில் நிர்வாகம். பள்ளியால் அதிக கட்டணம் கட்ட முடியவில்லை என்பதால், கோவில் நிர்வாகம் பள்ளிக்கு சீல் வைத்தது. உடனே பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 1500 பேருக்கு மேல் படிக்கும் பள்ளியை மூடினால் மாண வர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வைக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம். அரசு உடனே தலையிட்டு பள்ளி தொடர்ந்து செயல்பட முயற்சி செய்யவேண்டும்''“ என்று கூறினார்.
இதுகுறித்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரிடம் விசாரித்தபோது, "கடந்த 30-ஆம் தேதி ஆசிரியர்களை அழைத்து மீட்டிங் வைத்தபோது "பள்ளியை இழுத்து மூடப் போகிறோம்' என்று கூறினார்கள். என்ன பிரச்சினை என்று ஆசிரியர்களான எங்களுக்கு எதுவுமே சொல்வதில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலாவைத் தொடர்பு கொண்டாலும் அவரும் அழைப்பை ஏற்க மறுக்கிறார். உண் மையான பிரச்சினை பள்ளியால், கோவில் நிர்வாகத்திற்கு அதிக வாடகை கொடுக்க முடியவில்லை என்பது தான். ஏகாம்பரநாதர் கோவில் இந்து அற நிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்து அறநிலையத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளியின் கட்டணத்தைக் குறைத்தால் பள்ளி தொடர்ந்து செயல்படும்'' என்றார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலாவை தொடர்புகொண்டோம், ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
பள்ளியின் முக்கிய நிர்வாகி ஒருவரோ, “"ஆரம்பத்தில் வெறும் 3000 ரூபாயை மட்டுமே அறநிலையத் துறைக்கு வாடகையாக கொடுத்துவந்தோம். மிகக்குறைவாக கொடுக்கிறோமே என்று பள்ளி நிர்வாகமே 3000 ரூபாயை 30,000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது. பின்பு கோவில் நிர்வாகம் திடீரென கட்டணத்தை உயர்த்தியது. எங்களால் அவர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தைக் கட்ட முடியவில்லை. பள்ளியைக் காலிசெய்யச் சொன்னதால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தோம். கடந்த பத்தாண்டுகளாக வழக்கு நடந்துவந்தது. வழக்கு முடிந்தபிறகு நீதிமன்றம் வாடகை கொடுக்கச் சொன்னால் தொகை பெரியஅளவில் இருக்கும் என்று மாதம் 2 லட்சம் கொடுத்து வந்தோம் ஆனால் கோவில் நிர்வாகமோ மாதம் 8 லட்சம் கேட்டார்கள். தற்போது மொத்தமாக ரூ 12.4 கோடி வாடகை கேட்கிறார்கள். எங்கள் கணக்குப்படி நாங்கள் இதுவரை 5 கோடி கொடுத்துவிட்டோம். ஆனால் அவர்கள் மொத்தமாக நாங்கள் கொடுத்த 5 கோடியையும் சேர்த்து ரூ.17.4 கோடி கேட்கிறார்கள்.
இதுதொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அறநிலையத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தோம். ஆனால் எந்தப் பயனுமில்லை. புதிய ஆட்சியிலாவது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். கட்டணத்தைக் குறைத்தாலும் சரி... பள்ளியை அரசே எடுத்து நடத்தினாலும் சரி... மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்''” என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையும் அறநிலையத்துறையும் மனது வைத்தால் நல்லது நடக்கும்.