தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்று ஒருபுறம் கற்பித்துக்கொண்டே, மறுபுறம் தேர்தல் பணியாற்றும் ஊழியர் களை அடிமைக்கூட்டமாக கசக்கிப் பிழியும் வேலைகளை தேர்தல் ஆணைய மும், ஆளுங்கட்சியும் தொடர்ந்து செய்துவருவதாக மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
""வாயிருந்தும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாத ஊமை ஜனங்களாகி விட்டோம் சார். சொல்லவே வெட்கமாக இருக்கிறது. சிறுநீர் கழிக்கக்கூட போதிய கழிப்பறைகளோ, தண்ணீர் வசதியோ இல்லாத பள்ளிகளில்தான் தேர்தல் பணியாற்றியிருக்கிறோம்'' என்கிறார்கள் பெண் ஊழியர்கள்.
சேலம் சிந்தி இந்து நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் சுசீலா (52), இதுவரை ஏழு தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த தேர்தலில் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து நம்மிடம் பேசினார்.
''உள்ளாட்சித் தேர்தலின்போது எனக்கு சேலம் மாவட்டம் வளையக் காரனூர் அரச

''உள்ளாட்சித் தேர்தலின்போது எனக்கு சேலம் மாவட்டம் வளையக் காரனூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும் நடத்தப்படும் தேர்தல் ஆயத்தக் கூட்டங்களில், "தேர்தல் அதிகாரி கள் வாக்குச்சாவடிகளில் கட்சி முகவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடக்கூடாது' என்று எச்சரிக்கிறார்கள். "உணவு, தேநீர் உள்ளிட்ட வசதிகளை அரசே செய்து கொடுக் கும்' என்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு எங்களுக்கு உணவுப் பொட்டலங் கள் வழங்கப்படுவதில்லை. ஒருநேரம் உணவு கிடைத்தால், மதியம், இரவுப் பணிகளின் போது அம்போவென விட்டுவிடுகிறார்கள்.
எங்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளியில் தண்ணீர்த் தொட்டிதான் பெரிதாக இருந்ததே தவிர, குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வரவில்லை. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய பல பெண்கள் வாக்குப்பதிவு நாளன்று குளிக்கவே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாளே வந்து மின்விளக்கு வசதியும் செய்யப்படாததால், கும்மிருட்டில் தூக்கமின்றித் தவித்தோம். காலைக்கடனை கழிப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது.
ஜன. 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்றும் எனக்கு பணி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகளை முடித்து விட்டு, வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால், அந்த நேரத்தில் பேருந்து வசதி இல்லை, பேருந்துக் காக கொட்டும் பனியில் வெட்டவெளியில் அமர்ந்திருந்தேன்.
தரமற்ற காகிதங்களில் வாக்குச்சீட்டு களை அச்சிட்டதால், ஒரு சின்னத்திற்கு சீல் வைத்த பிறகு வாக்குச்சீட்டை மடிக்கும்போது, அடுத்த சின்னத்திலும் சீல் பதிந்துவிடுகிறது. அப்படி வேறு சின்னத்தில் பதிந்த மையை பிளேடு மூலம் சுரண்டும் வேலைகளையும் செய்தோம். இமாலய தேர்தல்களை நடத்துவதாக பெருமையாகச் சொல்லும் தேர்தல் ஆணையம், ஒரு வாக்குச் சீட்டைக் கூட தரமான காகிதத்தில் அச்சிடமுடியாத நிலையில் இருக்கிறதா?,'' என்று கேள்வி யெழுப்புகிறார் ஆசிரியர் சுசீலா.
சிந்தி இந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, கடந்த மக்களவைத் தேர்த லின்போது முதல்வரின் சொந்தத் தொகுதி யான எடப்பாடியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சொன்னார்.
""மக்களவைத் தேர்தலின்போது நான் உள்பட பல ஆசிரியர்களை, அரசு ஊழியர் களை ரிசர்வ் ஊழியர்களாக எடப்பாடியி லுள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். வாக்குப்பதிவுக்கு முதல் நாள் இரவு திடீரென்று, தேர்தல் பணியாற் றும் ஆசிரியர்களில் சங்க நிர்வாகிகள் யார் யார் என்று கணக்கெடுத்து, அவர்களை பணியிலிருந்து விலக்கினார்கள். அதனால், அவர்களுக்கு பணி ஒதுக்கிய வாக்குச்சாவடி களில் ரிசர்விலிருந்த எங்களை, இரவு 9 மணியளவில் திடுதிப்பென்று வாக்குச்சாவடி களுக்குச் செல்லும்படி மிரட்டினர். சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளைக் கழிக்க அந்தப் பள்ளியில் போதிய வசதி இல்லை. கழிப்பறை இருந்தது. ஆனால் தண்ணீர் வசதி இல்லை. அதனால் தாகம் எடுத்தாலும் தண்ணீர் குடிக்காமல் வேலை செய்தோம்'' என்கிறார்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் (55), ""தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்று சொன்னால், ஆசிரியர்கள், அரசு ஊழி யர்கள் சந்தோஷமாகத்தானே தேர்தல் பணிக்குச் செல்லவேண்டும்? ஆனால் களத்தில் அவ்வாறு நிகழவில்லையே ஏன்? பல பேர், ஆளை விட்டால் போதும் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறிய 2017 ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் "17 பி' மெமோ கொடுப்பேன் என்று மிரட்டினார்'' என்கிறார்.
அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தால் எப்படிப்பட்ட கலனும் வெடித்துவிடும். அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களும்கூட அப்படியானவர்கள்தான் என்பதை ஆளும் அதிகார வர்க்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-இளையராஜா