மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்து தல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, பட்ஜெட் வகுக்கப்பட்டதாக அவர் கூறினார். உண்மையில், இந்த நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுமா என்ற ஆவலோடு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனைச் சந்தித்தோம்...
பொருளாதார மந்தநிலை இருந்தாலும், பட்ஜெட் அறிவிப்பின் மூலம் 10 சதவீதம் வளர்ச்சியை எட்டிவிடுவோம் என்கிறார்களே?
பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் வெளிவந்த பொருளாதார ஆய்வறிக்கையில், உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, இந்தியப் பொருளாதார மந்தநிலைக்கு பகுதிக் காரணம் என்கிறது. இன்னொரு பகுதி என்ன
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்து தல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, பட்ஜெட் வகுக்கப்பட்டதாக அவர் கூறினார். உண்மையில், இந்த நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுமா என்ற ஆவலோடு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனைச் சந்தித்தோம்...
பொருளாதார மந்தநிலை இருந்தாலும், பட்ஜெட் அறிவிப்பின் மூலம் 10 சதவீதம் வளர்ச்சியை எட்டிவிடுவோம் என்கிறார்களே?
பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் வெளிவந்த பொருளாதார ஆய்வறிக்கையில், உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, இந்தியப் பொருளாதார மந்தநிலைக்கு பகுதிக் காரணம் என்கிறது. இன்னொரு பகுதி என்னவென்று ஆய்வறிக்கையில் சொல்லவில்லை. ஆய்வறிக்கை சொல்கிற அந்தப் பகுதியைக் கூட நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரையில் ஒரு இடத்திலும் குறிப் பிடவில்லை.
வரலாறு காணாத வேலையிழப்பை நாடு சந்தித்திருக்கிறது. அதை சரிசெய்யும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கிறதா?
புதிய வேலை வாய்ப்புகள் எங் கெல்லாம் உரு வாக்கப்படும். அதற்கான கொள்கை முடிவுகள் என்னென்ன வகுத்துள்ளார்கள் என்பதுபற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை. புதிதாக திட்டங்களை அறிவித்து இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று சொல்வது அவர்களின் வழக்கம். "அசெம்பிள் இந்தியா'’என்ற திட்டத்தின் மூலம் உலகநாடுகளுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டில் தயாரிக்கப் போகிறோம். அதன்மூலம், இளைஞர்களுக்கு வேலைகிடைக்கும் என்கிறார்கள். இதுபோல சில திட்டங்களை ஊக்குவித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பை உயர்த்துவோம் என்கிறார்கள். இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். "மேக் இன் இந்தியா' திட்டத்திலும் இதையேதான் சொன்னார்கள்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியாருக்கு விற்கும் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்காகவே, தனி அமைச்சகம் வைத்திருக்கிறது மத்திய அரசு. சென்ற ஆண்டு பட்ஜெட்டிலேயே அரசின் பங்குகளை 2 லட்சம் கோடி வரை விலக்கிக்கொள்ள இலக்கு வைத்தது இந்த அரசு. ஆனால், அவர்களால் எதையும் விற்க முடிய வில்லை. ஏர் இந்தியாவில் அதுதான் நடந்தது. ஏறத்தாழ 30 லட்சம் கோடி முதலீடு வைத்திருக்கும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சிறு பகுதியை தனியாருக்கு விற்று, அதனை அரசு எடுத்துக்கொள்ளப் போகிறது. இதன்மூலம், எல்.ஐ.சி.யின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முடியும் என்று காரணம் சொல்கிறது. ஆனால், தனியாரிடம் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும் என்று எப்படி நம்பமுடியும்? தணிக்கையாளர்கள் பலர் செய்யும் தவறுகளால், நிர்வாகமே கெட்டுப்போகும் வாய்ப்பிருக்கிறதே... பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் வெளியான ஆய்வறிக்கை அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையை இந்தியப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகச் சொல்கிறார்களே?
அப்படியானால், அதையே பட்ஜெட்டில் குறிப்பிட்டு, இந்தியாவும் உலகில் ஒரு பகுதியாக இருப்பதால் பேச ஒன்றுமில்லை என்று முடித்துக் கொள்ளலாமே. எதற்காக ரெண்டே முக்கால் மணிநேரம் பேசவேண்டும். இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாதான். சீனாவை முந்திவிட்டோம் என்றெல்லாம் பேசியவர் கள்தானே இவர்கள். உலகப் பொருளாதாரமும், இந்தியப் பொருளாதாரமும் வெவ்வேறு நிகழ்வுகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு விளையும் பொருட்களுக்கான பெரும் பான்மை நுகர்வோர் இந்தியர்கள்தானே.
வறுமை ஒழிப்புக்காக என்னென்ன திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது அரசு?
இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைக்கான நிதியை 27 ஆயிரம் கோடியிலிருந்து, 22 ஆயிரம் கோடியாகவும், மதிய உணவுத் திட்டத்துக்கான நிதியை 11 ஆயிரம் கோடியில் இருந்து, 9 ஆயிரம் கோடியாகவும் குறைத்து விட்டனர். அதேசமயம், காஷ்மீரில் விளையும் ஆப்பிளைக் கொண்டுவருவதற்கு 5 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக உயர்த் தித் தருகிறார்கள் என்றால், இந்த அரசு யாருக்கு முக்கியத்துவம் தருகிறது என்பது விளங்குகிறதே.
ஆதிச்சநல்லூரில் உலகத் தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டியதுதானே?
கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியானபோதே, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் கீழடிக்கும் தொடர்பிருப்பதாக இங்கு பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில், ஆதிச்சநல்லூரைக் கையிலெடுத்து, கீழடிக்கும் அதற்கும் தொடர்பில்லாததைப் போல மாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான், "சரஸ்வதி சிந்து' என்று நிர்மலா சீதாராமன் ஆரம்பித்திருக்கிறார்.
-சந்திப்பு: பெலிக்ஸ்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்