Advertisment

"காப்பாத்துங்கய்யா''  அம்பலமான எடப்பாடி விவசாயி நாடகம்!

formers

பிள்ளையார் பிடிக்க முயன்று குரங்காகிப்போன கதையாக, டெல்டா விவ சாயிகளிடம் குறைகளை கேட்கப்போன எடப்பாடி பழனிச்சாமியின் போலி நாடகத்தை துகிலுரித்துவரு கிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisment

கடந்த 8ஆம் தேதி யன்று, தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சாவூர் அருகிலுள்ள வண்ணாரப் பேட்டை பகுதியில் தண் ணீரில்லாமல் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களை பார்வையிடப்போவதாகக் கூறி அப்பகுதிக்கு எடப் பாடி விசிட்டடித்தார்.

Advertisment

அப

பிள்ளையார் பிடிக்க முயன்று குரங்காகிப்போன கதையாக, டெல்டா விவ சாயிகளிடம் குறைகளை கேட்கப்போன எடப்பாடி பழனிச்சாமியின் போலி நாடகத்தை துகிலுரித்துவரு கிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisment

கடந்த 8ஆம் தேதி யன்று, தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சாவூர் அருகிலுள்ள வண்ணாரப் பேட்டை பகுதியில் தண் ணீரில்லாமல் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களை பார்வையிடப்போவதாகக் கூறி அப்பகுதிக்கு எடப் பாடி விசிட்டடித்தார்.

Advertisment

அப்போது, எடப் பாடி பழனிச்சாமியை பார்த்த விவசாயி ஒருவர், "அய்யா காப்பாத்துங் கய்யா., எங்க பொண் டாட்டி புள்ளைங்க நகை யையெல்லாம் அடமானம் வெச்சிருக்கோம். நீங்கதான் எங்க குலசாமி''’என கையில் சில நெற்பயிர்களை பிடித்த வாறு எடப்பாடியாரை நோக்கி ஓடிவர... அதை படமெடுக்க வந்த மீடி யாக்காரர்களை சைடு வாங்கச் சொல்லிவிட்டு, அந்த விவசாயியிடம் எடப் பாடியார் பேசும் காணொலி சமூக வலைத் தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த காணொலியின் தாக்கம் அடங்குவதற்குள், "அவரு விவசாயியே கிடையாதுங்க, போலியை வெச்சு ஒரு வெட்டவெளி நாடகத்தை பக்காவா போட்டிருக்காருங்க எடப்பாடியார்'’ என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவ, அந்த போலியின் முகத்திரையையும், எடப்பாடியாருக்காக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அரங்கேற்றிய நாடகத்தையும் கிழித்தெறியத் துவங்கினார்கள் நெட்டிசன்கள்.

டெல்டா நெட்டிசன் ஒருவர், “"ஐயா, ஐயான்னு கதறிக் கொண்டே ஓடி வந்தது, தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரான கலியராஜுங்க. இவருக்குள்ளே இவ்வளவு திறமை இருக்கும்னு இத்தனைநாளா தெரியாமப்போச்சே'' என்றார் கிண்டலுடன்.

வேறொரு சீரியஸ் நெட்டிசனோ, "முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரூ.127.49 கோடி மதிப்புள்ள சொத்துகள் குறிப்பிடப்பட்டு, அவரது மகன்களான இனியன் மற்றும் இன்பன் பெயர்களும் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017-ல் ரியல் எஸ்டேட் வியாபாரி எஸ்.வி.எஸ்.குமாரிடம் ரூ.30 லட்சம் ஏமாற்றியதாகவும் வழக்கு உள்ளது. அப்படிப்பட்டவர், பொதுமக்கள் முகத்தில் எப்படி முழிப்பதெனத் தெரியாமல், வரப்பே இல்லாத வயலில் மண்வெட்டி, தோளில் புத்தம் புதிய துண்டு, விவசாயியின் தலையில் பட்டன் மைக் பொருத்தி இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மக்கள் ரொம்பவே விழிப்பாக உள்ளனர்''’என பதிவிட்டிருந்தார்.

nkn140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe