சாத்தூரில், ஆளும்கட்சி நிர்வாகிகள் இருவர், அத்தொகுதியின் எம்.எல்.ஏ., ராஜவர்மன் குறித்து ஆஹா... ஓஹோ...’ என்றார்கள்.
""அதுக்காக இப்படியா? தொகுதி விசிட்ல, பத்து பதினஞ்சு பேரு நாங்கள்லாம் ஃப்ரண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு எம்.எல்.ஏ. கிட்ட ""அண்ணே.. ஊருக்குள்ள.. அதுவும் வீட்டுக்குள்ளயே இருந்து ரொம்ப போரடிச் சிருச்சு.. இந்த ஊரைவிட்டு தள்ளிப்போயி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தா... முடியல''’ என்று இதையே ஒரு கோரிக்கையாக வைக்க, உடனே எம்.எல்.ஏ. ""அதுக்கென்ன... நீங்க என் தொகுதி மக்களாச்சே... பக்கத்து ஊருல எனக்கு பம்புசெட் தோட்டம் இருக்கு. கறி விருந்தே வைக்கிறேன். நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. ஆனா ஒண்ணு... இந்த கொரோனா... சமூக இடைவெளி... எல்லாத்தையும் ஸ்ட்ரிக்டா கடைப்பிடிக்கணும். அப்புறம் உங்கள்ல யாருக்கும் கொரோனா இல்லாம இருக்கணும். இது ரொம்ப முக்கியம்''னு சொல்லிவேன் பிடிச்சு அனுப்பி வச்சிருக் காரு. இதெல்லாம் ரொம்ப ஓவர்ல...''’என்றும் சிரித்தனர்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ராஜவர்மன், சாத்தூர் எம்.எல்.ஏ. ஆகி, ஒரு வருடம்தான் ஆகிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், இதே தொகுதியில் தனக்கு சீட் கிடைத்து, மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். அதனால்தான், கொரோனா காலக்கட்டத்தில், தொகுதி மக்கள் மீது இத்தனை பாசம் காட்டி வருகிறார்.
உண்மையிலேயே எம்.எல்.ஏ. நல்லவரா?’ என்ற கேள்விக்கு, ‘நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பு இல்ல...’ என, நாயகன் திரைப்படத்தில் கமல் பேசும் வசனம், ராஜவர்மனுக்கு பொருந்திப் போவதாகச் சொல் லும் அக்கட்சியினரிடம் "எம்.எல்.ஏ. ஆன பிறகு அப்படி யென்ன நல்லது பண்ணிவிட்டார்?' என்று கேட்டோம். கொரோனா பிரச்சனைல... கடந்த 93 நாள்ல, 81 நாள், காலுல சக்கரத்த கட்டிட்டு தொகுதி முழுக்க சுத்திக் கிட்டேதான் இருக்காரு. ஒரு ஏரியா விடாம, எல்லாருக்கும், தன்னோட சொந்தப் பணத்துல, 1500 ரூபாய் பெறுமான நிவாரணத் தொகுப்பு கிடைக்கிற மாதிரி பண்ணிருக்காரு. தமிழ்நாட்டுல எந்த எம்.எல்.ஏ.வும் இவரு அளவுக்கு இல்ல'' என்றனர்.
“""நீங்க ஓட்டு போடுங்க. நான் நல்லது செய்யலைன்னா... என் சட்டைய பிடிங்க. நான் மற்ற எம்.எல்.ஏ.க்கள் மாதிரி கிடையாது. அதிகாரிகள், காலைக் கையைப் பிடித்தாவது, தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணு வேன்.''’என்று வாக்குறுதி அளித்து எம்.எல்.ஏ. ஆனவர், ராஜவர்மன்.
தான் எம்.எல்.ஏ. ஆவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், தற்போது ராஜவர்மனுக்கு பிணக்கு. அமைச்சருடனான பனிப் போரை, தொடர்ந்தபடியே உள்ளார். அதனால், விருதுநகர் மாவட்டத்தில், ஜாதி ரீதியாக ஆளும்கட்சி பிளவு பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
சாத்தூரில் நல்லது கெட்டதுகளில் டாண் என்று ஆஜராகிவிடும் ராஜவர்மனை, "தொகுதியின் செல்லப் பிள்ளை' என்கிறார்கள், அவரது விசுவாசிகள்.
- ராம்கி