"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு படுகொலையான தந்தை ஜெயராஜ் -மகன் பென்னிக்ஸ் வழக்கில் கைதாகி சிறையிலுள்ள A2 முதல் A9 வரை உள்ள குற்றவாளிகள் என்னை சிறையிலேயே கொலை செய்யப் பார்க்கின்றார்கள்'' என சிறையிலிருந்து, நீதிபதிக்கு கடிதம் எழுதினார் முதன்மைக் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது "எனக்கு மன்னிப்பு கொடுங்கள்... அப்ரூவராகி அனைத்து உண்மைகளையும் கூறுகிறேன்'' என மீண்டும் நீதிபதிக்கு லேட்டஸ்டாக கடிதம் எழுத, அடுத்து என்ன? என்ற கேள்விகள் வழக்கில் எழுந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியன்று சாத்தான்குளம் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட  ஜெயராஜ், பென்னிக்ஸ் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழக்க, "நக்கீரனின்' ஆவணங்களால் வழக்கு சி.பி.ஐ.க்கு சென்றது. சி.பி.ஐ.யால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதன்மைக் குற்றவாளியாகவும், அடுத்தடுத்த குற்றவாளிகளாக எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸார்கள் முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரும் அடையாளம் காண்பிக்கப்பட்டனர். இதில் முதலில் 10ஆவது குற்றவாளியாக சேர்க்கப் பட்ட SSI பால்துரை, 2020 ஆகஸ்ட் மாதம் கொரோனாவில் இறந்துவிட்டார். 

படுகொலைகள் நடந்து 95 நாட்கள் கடந்த நிலையில் 25-09-2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கிற்கான குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தது சி.பி.ஐ. தொடர்ந்து 21-12-2020 மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ்  நீதிமன்றம் விசாரணையை துவக்கி, சாட்சிகளை இன்றும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பக்கம் கொண்ட அந்த மனுவில் அனுப்புநர்: மதுரை மத்திய சிறையில் விசாரணைக்கைதியாக (கைதி எண்: 1413) இருக்கும் சண்முகம் மகன் ஸ்ரீதர் என்றும், பெறுநர் முகவரியில் கூடுதல் எஸ்.பி., சி.பி.ஐ, நியூடெல்லி என்றும், கடிதத்தின் பொருளாக RC Nos 050 2020 S 0008/ 050 2020 S 0009 Respondent Vs Complaintant Petition Humbly Submitted By the Accused No 1 U#S 306 & 307 Cr.Pc. குறிப்பிடப்பட்டிருந்தது.

santhakulam1

ன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எழுதிய அந்தக் கடிதத்தில், "பணிந்து சமர்ப்பித்தலின்படி மேற்படி வழக்கில் கண்ட எதிரிகளான ஆ2 முதல் ஆ9 வரை வரையிலானவர்கள் இந்த குற்ற வழக்கில் கண்ட சம்பவத்தில் ஈடு பட்டுள்ள விபரங்களை ஈழ்ண்.ஞல்.சர் 188/2022ல் கண்ட மனு பிரகாரம் கணம் நீதிமன்றத்திற்கு மனு மூலம் தெரியப்படுத்தியுள்ளேன். மேற்படி மனுவின் தொடர்ச்சியாக இந்த மனுவை மிகவும் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். 

Advertisment

மேற்படி வழக்கில் உண்மையான குற்றவாளி களுக்கு அதிகபட்ச தண்டனைகள் பெற்றுத் தர வேண்டுமென்ற காரணத்தினாலும், நீதிக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலும், இறந்தவர்களின் குடும்பத்தி னர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற காரணத்தினாலும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையான சங்கதிகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டுமென்ற காரணத்தினாலும், காவல் துறைக்கு எந்தவித களங்கமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலும் அரசாங்கத்திற்கு எப்பொழுதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும், நான் மேற்படி வழக்கில் ஆடடதஞயஊத ஆக மாறி அரசுத் தரப்புக்கு ஆதரவாக அரசுத் தரப்பு சாட்சியாக கனம் நீதிமன்றதிதில் சாட்சியமளிக்க விரும்புகிறேன். 

இந்த வழக்கில் நடந்த சங்கதிகள் (Full And True Disclosure Of Fact) எனக்கு தெரிந்த முழுவதையும், முழுமையாகவும், உண்மையாகவும், உள்ளபடியாகவும் எதிரிகள் ஆ2 முதல் ஆ10 வரையுள்ள எதிரிகளுக்கு எதிராக கனம் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக சாட்சியம் அளிக்க விரும்புகிறேன். மேலும் மேற்படி இந்த வழக்கில் எனக்கு மன்னிப்பு வழங்கி, விடுதலை வழங்கும் பட்சத்தில் மாண்புமிகு கனம் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு APPROVER ஆக மாறி அரசு தரப்பிற்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க விரும்புகிறேன். 

எனவே மாண்புமிகு கனம் நீதிமன்றம் என்னுடைய இந்த மனுவை ஏற்றுக்கொண்டு என்னை இந்த வழக்கில் APPROVER ஆக ஏற்றுக்கொண்டு அரசு தரப்புக்கு ஆதரவாக, அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்க ஆவண செய்தும், மேலும் மேற்படி வழக்கில் எனக்கு மன்னிப்பு  (Tender Of Pardon) வழங்கியும், என்னை மேற்படி இந்த வழக்கிலிருந்து விடுவித்து, விடுதலை செய்து நீதி வழங்குமாறும் மிகவும் பணிவுடன் இந்த மனு மூலம் பிரார்த்தித்து கேட்டுக்கொள்கிறேன்.

எஸ். ஸ்ரீதர் A1

31/05/2025

santhakulam2

துகுறித்து பேசிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞரான பாஸ்கர் மதுரமோ, "விரைவில் தீர்ப்பு வரக்கூடிய வழக்கு. தீர்ப்பு தனக்குப் பாதக மாக அமைந்துவிடக் கூடும் என்பதின் அடிப்படை யில் இருக்கின்றது இக்கடிதம். இதனைப் பொறுத்த வரை இந்த வழக்கை காலதாமதப்படுத்தும் நோக்குடனும், வழக்கை திருப்பவும் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் குற்றவாளி அப்ரூவர் ஆனால் மன்னிப்பு கொடுக்காது நீதிமன்றம். குற்றம் செய்து அதற்கு மன்னிப்புக் கேட்டால் நியாயமா? கொலை வழக்கில் குற்றவாளி யாக சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருக்கும் பொழுது இன்னொரு குற்றவாளி அப்பு, தான் அப்ரூவர் ஆக வேண்டினான். இருப்பினும் அவனை நீதிமன்றம் மன்னிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த மனு குறித்து சி.பி.ஐ. வலுவான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுகின்றேன்'' என்கிறார்.