Advertisment

சாத்தான்குளம் கொடூரம்! நீதிபதி சாட்சியம்! அன்றே சொன்ன நக்கீரன்!

ss

"வழக்கில் ஜெயிக்க வேண்டாம். இப்போதைக்கு ஜாமீன் கிடைத்தாலே போது மானது' என சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் கைதானவர்கள் போராடிவருகின்றனர். அதற்காக, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யத் துவங்கியுள்ளனர்.

Advertisment

"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் ஜெயராஜும், பென்னிக்ஸும் உயிரிழக்கவில்லை. கோவில் பட்டி கிளைச் சிறைச்சாலை காவலர்கள் தாக்கியதாலே இருவரும் இறந்துள்ளனர்'' என தன்னுடைய தரப்பு வாதத்தை குற்றஞ் சாட்டப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் துவக்க, "இல்லையில்லை... சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கியதே இறப்பிற்குக் காரணம்'' என குறுக்குவிசாரணையின்போது பட்டவர்த்தனமாக உடைத்துள்ளார் நீதிபதி பாரதிதாசன். இதை அன்றே வெளிப்படுத்தி வழக்கிற்கு உதவியது "நக்கீரன்'.

Advertisment

sa

கொரோனா காலத்தில் நிபந்தனையை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் 19-6-2020 அன்று விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸார் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து கைது நடவடிக் கைக்குப் பிறகு கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் இருவரும் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மாவட்ட எஸ்.பி., கலெக்டர், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், "மூச்சுத் திணறலால்' இறந்தனர் என மூடிமறைத்தனர். நக்கீரனோ, "இருவரையும் சிறைச்சாலைக்கு கொண்டு வந்த நிலையில் மருத்துவர் பரிசோதித்து உடம்பிலுள்ள காயங்கள் குறித்த "மருத்துவரின் சிறைக் குறிப்பை' வெளியிட்டு, தாக்கப்பட்டதாலேயே இறந்தனர்' என்றது. அதன்பின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி சி.பி.ஐ. விசாரணை

"வழக்கில் ஜெயிக்க வேண்டாம். இப்போதைக்கு ஜாமீன் கிடைத்தாலே போது மானது' என சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் கைதானவர்கள் போராடிவருகின்றனர். அதற்காக, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யத் துவங்கியுள்ளனர்.

Advertisment

"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் ஜெயராஜும், பென்னிக்ஸும் உயிரிழக்கவில்லை. கோவில் பட்டி கிளைச் சிறைச்சாலை காவலர்கள் தாக்கியதாலே இருவரும் இறந்துள்ளனர்'' என தன்னுடைய தரப்பு வாதத்தை குற்றஞ் சாட்டப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் துவக்க, "இல்லையில்லை... சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கியதே இறப்பிற்குக் காரணம்'' என குறுக்குவிசாரணையின்போது பட்டவர்த்தனமாக உடைத்துள்ளார் நீதிபதி பாரதிதாசன். இதை அன்றே வெளிப்படுத்தி வழக்கிற்கு உதவியது "நக்கீரன்'.

Advertisment

sa

கொரோனா காலத்தில் நிபந்தனையை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் 19-6-2020 அன்று விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸார் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து கைது நடவடிக் கைக்குப் பிறகு கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் இருவரும் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மாவட்ட எஸ்.பி., கலெக்டர், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், "மூச்சுத் திணறலால்' இறந்தனர் என மூடிமறைத்தனர். நக்கீரனோ, "இருவரையும் சிறைச்சாலைக்கு கொண்டு வந்த நிலையில் மருத்துவர் பரிசோதித்து உடம்பிலுள்ள காயங்கள் குறித்த "மருத்துவரின் சிறைக் குறிப்பை' வெளியிட்டு, தாக்கப்பட்டதாலேயே இறந்தனர்' என்றது. அதன்பின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி சி.பி.ஐ. விசாரணையாக மாறி கொலைக்குற்றவாளிகளாக ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயிலு முத்து, பால்துரை (இறப்பு) ஆகியோரை குற்றஞ்சாட்டி 2427 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. வழக்கு மதுரை முதன்மை கூடுதல் நீதிமன்றத் தில் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தரப்போ, "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் ஜெயராஜும், பென்னிக்ஸும் இறக்கவில்லை. கோவில்பட்டி கிளை சிறைச்சாலை யிலுள்ள காவலர்கள் தாக்கியதால் இறந்தனர். இதில் ஒருதலைப்பட்சமாக கோவில்பட்டியின் அப்போதைய நீதிபதி பாரதிதாசன் நடந்துள்ளார். அவரை குறுக்குவிசாரணை செய்யவேண்டும்'' என நீதிபதி தமிழரசியிடம் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த 03-01-2024 மற்றும் 04-01-2024 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார் நீதிபதி பாரதிதாசன்.

அதில், "நான் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு 23-06-2020ஆம் தேதி திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குச் சென்றேன். இரண்டு சடலங்களுக்கும் பிரேத விசாரணை நான்தான் நடத்தியுள்ளேன். பிரேத விசாரணையின்போது நான் சம்பவம் குறித்து கண்கண்ட தாவீதை விசாரித்தேன். அவரைத் தவிர வேறு சாட்சிகள் யாரையும் விசா ரிக்கவில்லை. சாட்சிகள் பொன்சேகர், வினோத் குமார் ஆகியோரை அன்றையதினம் விசாரித்தேன். இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடம்பிலிருந்த காயங்கள் குறித்து முதன்முதலில் ஆவணப்படுத்தினேன். 23-06-2020ஆம் தேதி நான் மேற்சொன்ன சிறைச்சாலைக்குச் சென்றபோது சிறைக்கண்காணிப்பாளர் சங்கர் என்பவரை விசாரித்துள்ளேன். பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகி யோரை சிறையில் அனுமதித்தது மேற்சொன்ன சிறைக்கண்காணிப்பாளர் சங்கர்தான். சிறையில் அனு மதிக்கப்படும்போது அவர்களை உடல் முழு வதும் பரிசோதித்து, காயம் இருந்தால் அதற்கான பதிவேட்டில் குறிப்பிடப்படவேண்டும்.

ss

சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் எந்த சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளார் என்றால்... பேரூரணி, மாவட்ட சிறைக்கண்காணிப்பாளருக்கு வாரண்ட் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். பேரூரணி சிறைச்சாலையில் நான் யாரையும் விசாரிக்கவில்லை. அவருடைய வாக்குமூலத்தில், அவர்கள் இருவரையும் பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் பேரூரணி மாவட்ட சிறையில், கைதிகளின் எண்ணிக்கை அதிகபட்சம். எட்டிவிட்டதாலும், கொரோனா தொற்று காரண மாக கைதிகளை தனிமைப்படுத்த வேண்டியிருந்த தாலும், அவர்களை கோவில்பட்டி கிளைச்சிறை யில் அனுமதித்ததாகக் கூறியுள்ளார்.

எனக்கு கொப்புளம் என்றால் தெரியும். காயம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் என்றும் தெரியும். சிறைக்கண்காணிப்பளார் சங்கர் என்பவரிடம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் அடைக்கப்படும்போது அவர்களது உடல் களில் என்னென்ன காயங்கள் இருந்தது என்று நான் விசாரித்தேன். அவருடைய வாக்குமூலத்தில் 22-06-2020ஆம் தேதி பணிக்கு வந்து பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரைப் பார்த்தபோது, அவர்கள் இருவருக்கும் பிட்டத்தில் கொப்புளங்கள் காணப்பட்டதால், அவர்களை பரிசோதிக்க மருத்துவமனை மருத்துவரை தொலைபேசி வாயிலாக அழைத்தேன் என்றும் கூறியுள்ளார். அதைத்தவிர அவர்கள் இருவரது உடல்களிலும் வேறு எந்த காயங்களும் பார்த்ததாக சங்கர் அவரது வாக்குமூலத்தில் கூறவில்லை என்றால் சரியல்ல, கூறியுள்ளார். சிறை ஆவணங்களும் பின்னிட்டு வேறு நபர்களை வைத்து தயாரித்துக் கொள்ளப்பட்டது என்றால் சரியல்ல'' என்றார்.

தொடர்ந்து நடந்த குறுக்கு விசாரணையில், "திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதவிசாரணை முடித்த பிறகு, பிரேதங்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. ஜெயராஜின் பிரேதப் பரிசோதனை இரவு 10.15 மணிக்கு துவங்கி இரவு 11.25 மணிக்கு முடிக்கப்பட்டது. பென்னிக்ஸின் பிரேத பரிசோதனை இரவு 8.45 மணிக்கு துவங்கி இரவு 10.10 மணிக்கு முடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கும்போது நான் தனிப்பட்ட முறையில் எனக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை 20-07-2020ஆம் தேதியன்று கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 1-ல் வைத்து விசாரித்தேன்.

போலீஸார் ரேவதியை விசாரிப்பதற்காக அழைப்பாணை எதுவும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் எனது அருகிலேயே இருந்ததால் தனி யாக எதுவும் அழைப்பாணை கொடுக்கப்பட வில்லை. இந்த வழக்கில் என்னால் விசாரிக்கப்பட்ட நபர்கள் அனைவருக்கும் நான் சத்தியப்பிரமாணம் செய்த பிறகுதான் வாக்குமூலம் பதிவுசெய்தேன். அந்த வாக்குமூலங்களில், வாக்குமூலம் அளித்தவர் களின் கையொப்பம் பெறப்பட்டது. ஆனால் காவ லர் அழகுமாரிச்செல்வம் மட்டும் கையொப்பமிட மறுத்துவிட்டார். சம்பவ சமயத்தில் ரேவதி காவல்நிலையத்தில் இருந்திருக்கின்றார் என்பது எனக்கு அவருடைய வாக்குமூலத்தைப் பதிவுசெய்வ தற்கு முன்பே தெரியவந்தது என்பது உண்மை.

சம்பவங்கள் நடந்தது, இரத்தக்கறை இருந்தது என்பதை எல்லாம் காட்டினார்கள் என்றால் சரி தான். நான் அது சம்பந்தமாக பார்வை மகஜர், மாதிரி வரைபடம் தயார் செய்தேனா என்றால் இல்லை. அவர்கள் காண்பித்த இடங்களைக் குறித்தும் அந்த கறைகளைக் குறித்தும் நான் என்னுடைய அறிக் கைகளில் எழுதுவதற்கு குறிப்புகள் எடுத்துக்கொண் டேன். அந்த குறிப்புகளின்படி அவர்கள் எங்கிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் பார்த்தார்கள் என்ற விபரங்கள் தெரியவந்தது, அந்த குறிப்புகள் மற்றும் அது சம்பந்தமான தடயங்கள் குறித்த ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்துள்ளேன் என்றார். இதன்மூலம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனின் கூற்றை தவிடுபொடியாக்கியுள்ளார் நீதிபதி பாரதிதாசன்.

_________

இறுதிச்சுற்று!

ss

இந்தியாவையே உலுக்கிய பில்கிஸ்பானு பாலியல் வழக்கில் 11 குற்றவாளிகளை விடு தலை செய்தது செல் லாது என்று திங்கள் கிழமை (08-01-2024) பரபரப்பு தீர்ப்பை வழங்கியது உச்சநீதி மன்றம்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, பில்கிஸ்பானு என்ற பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேர், சிறை யில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த சுதந்திர தினத்தின்போது, முன்கூட்டியே இவர்களை விடுதலை செய்தது குஜராத் பா.ஜ.க. அரசு. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல்புயான் ஆகியோர், குஜராத் அரசுக்கு சரமாரியாக கேள்வி கள் எழுப்பினர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், 8-ந் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "பில்கிஸ்பானு வழக்கில் 11 குற்றவாளி களை விடுதலை செய்தது செல்லாது. தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை'' என்றனர். இந்த தீர்ப்பு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இளையர்

nkn100124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe