சசியின் ஸ்லீப்பர் செல்கள்! -மாநகராட்சி -நகராட்சி தேர்தலுக்கு ரெடி!

sasi

.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வியூகத்துடன், நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலை மையப்படுத்தி சில வியூகங்களை வகுத்து வருகின்றன சசிகலாவின் உள்வட்டாரங்கள்.

"அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கட்சியில் சேர்க்கும் எண்ணமும் கிடையாது'' என்று அழுத்தமாக சொல்லி வருகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதேசமயம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமோ, "சசிகலாவை சேர்ப்பது பற்றி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்' என்கிறார். இந்த இருவரின் கருத்துகளுக்கு கட்சியில் ஆதரவும் எதிர்ப்பும் ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றன.

sasi

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் பல ஆண்டு காலமாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவில், ஜெ. பயன்படுத்திய காரில், அ.தி.மு.க. கொடியுடன், அ.தி.மு.க பிரமுகர் என்ற அனுமதி யுடன் கலந்து கொண்டார் சசிகலா. அவருக்கு முக்குலத்தோர் சமூகம் கொடுத்த வரவேற்பும் முக்கியத்துவமும் அ.தி.மு.க. தலைவர்களுக்கு சற்று கிறுகிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிகளில் முக்குலத்தோர் சமூகத் துக்கு கணிசமான இடம் உண்டு என்பதால்தான்.

முக்குலத்தோர், தலித், கொங்கு வேளாளர் ஆகிய 3 சமூகம்தான் அ.தி.மு.க.வின் அடிப்படை வாக்கு வங்கி. அந்த வகையில், அ.தி.மு.க.வில் உள்ள முக்குலத்தோர் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் எடப்பாடிக்கு எதிராக வாள் சுழற்றி னால் எடப்பாடிக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க.வுக்கே அது சரிவை ஏற்படுத்தும் என்கிற நிலையில், அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராக ஒரு அலை தற்சமயம் வீசத் துவங்கி யுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க.வி

இது குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ”ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்த சமயத்தில் எடப் பாடியின் சசிகலா எதிர்ப்புக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக, கட்சியிலிருந்து முக்குலத்தோர் சமூகத்தினர் கூட சசிகலாவை எதிர்த்தனர். ஆனால், அந்த சூழல் இப்போது இல்லை. எடப்பாடியும் அவருக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய மூவரும் மட்டும்தான் சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார்கள். இந்த மூவரும் கூட தங்கள் நிலைப்பாட்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள்.

எடப்பாடியின் வலது கரமாகவும் கொங்கு வேளாளர் சமூகத்தின் முக்கியஸ்தர் களாகவும் இருந்த மாஜி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி கூட சசிகலா எதிர்ப்பில் தற்போது உறுதியாக இல்லை. சசிகலாவுடன் மறைமுக உறவை வளர்த்துக்கொண்டுதான் வருகின்றனர். சசிகலாவை கட்சியின் சேர்த்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் தயக்கம்? என்றெல்லாம் எடப்பாடியிடமே நேரடியாக இவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், தங்கள் சமூகத்தை முன்னிறுத்தி அவர்களை அடக்கி வைத்திருக்கிறார் எடப்பாடி.

இப்படிப்பட்ட சூழலில்தான், கட்சி ஒன்றுபடாவிட்டால் நாம் காணாமல் போய்விடுவோம்; இனி வரும் ஒவ்வொரு தேர்தலும் நமக்கு முக்கியமானவை. அதில் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டால் கட்சியும் கரைந்து போய்விடும் என சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான மறைமுக முயற்சியாக மாஜிக்களிடமும் சீனியர்களிடமும் பேசி வருகிறார் ஓ.பி.எஸ். அவரின் எதார்த்தமான பேச்சு, கட்சி நிர்வாகிகளை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ss

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் ஆகியவை ஓ.பி.எஸ்.சிடம் இருக்கிறது. சசிகலா தலைமையை ஏற்றால் இதனை இழக்க வேண்டியது வரும். அதனால் சசிகலாவை அவர் ஆதரிக்கமாட்டார் என அரசியல் விமர்சகர்கள் சிலர் எடப்பாடியிடம் சொல்லி வருகிறார்கள். அதனை நம்பினார் எடப்பாடி.

ஆனால், ஓ.பி.எஸ்.சோ, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் எனக்கென்ன மரியாதை யும் முக்கியத்துவமும் கிடைத் திருக்கிறது? கட்சி அறிக்கையில் கையெழுத்துப் போடுகிற ரப்பர் ஸ்டாம்பாகத்தானே நானிருக் கிறேன்? இதில் தேர்தல் சமயத்தில் சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் நினைத்ததை சாதித்துவிட முடிகிறதா?

sasi

எடப்பாடி தலைமையில் இரண்டாவது இடத்தில் இருப் பதற்கு, சசிகலா தலைமையில் இரண்டாவது இடத்தில் இருந்துவிட்டுப் போகிறேன். எந்த மரியாதையும் இல்லாத இடத் தில் எடப்பாடியின் அரசியலுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? என்றெல்லாம் தன்னை சந்திப்பவர் களிடம் மனம்வெதும்பி பேசி வருகிறார்.

இந்த நிலையில்தான், தேவர் ஜெயந்தி நிகழ்வுக்காக மதுரையில் தங்கியிருந்த சசிகலாவிடம், ஓ.பி.எஸ்., செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன் போன்ற பலரும் ஃபோனில் பேசியிருக்கிறார்கள். மேலும், தனது மகளின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த ஓ.பி.எஸ்.சின் சகோதரர் ஓ.பி.ராஜாவிடம், அ.தி.மு.க.வி லுள்ள முக்குலத்தோர்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டத் தினை கொடுத்திருக்கிறார் தினகரன். மேற்கண்ட இந்த விசயங்களெல்லாம் தெரிந்து தற்போது அப்-செட் மூடில் இருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க.வில் எடப் பாடிக்கு ஆதரவான சங்கிலிகளை வெளியில் இருந்தபடி உடைத்துக் கொண்டிருக்கிறார் சசிகலா''‘என்று நம்மிடம் மனம் திறக்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர்.

இதற்கிடையே, கட்சியை தன் வசப்படுத்த சில ரகசிய வியூகங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறார் சசிகலா. இது குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான தரப்பில் நாம் விசாரித்த போது, "எடப்பாடியின் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கும் கொட நாடு கொலை, கொள்ளை விவகாரத்தால் அ.தி.மு.க.வின் இமேஜ், பொதுமக்களிடம் சரிந்தபடி இருக்கிறது. அவரது தலைமையில் இன்னொரு தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா? என்கிற சந்தேகம் கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளிடம் இருக்கிறது. இதனால் எடப்பாடிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீவிரம் காட்டுகிறார் சசிகலா. குறிப்பாக, அவர்களை தொடர்புகொண்டு உருக்கமாகப் பேசுகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை அவர்கள் சந்தித்த சமயத்தில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுபடுத்தி சசிகலா பேசும்போது மாஜிக்களே உருகி விடுகிறார்கள்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை டிசம்பருக்குள் நடத்த தி.மு.க. அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த தேர்தலில் செம்மலை, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் மேயர் வேட்பாளர்களாக அ.தி.மு.க.வில் களமிறங்க நினைக்கின்றனர். அதேபோல, நகராட்சித் தலைவர்களாக போட்டியிட எடப்பாடியின் அதிரு ப்தியாளர்கள் பலரும் சீட்டுகளை பெற்றுவிடத் துடிக்கின்றனர்.

vee

தேர்தல் நடக்கும்போது 10 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளைத் தேர்ந்தெடுத்து அதில் களமிறங்கும் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களை ஜெயிக்க வைக்க அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும் வியூகத்தை அமைத்திருக்கிறார் சசிகலா. அவர்களின் வெற்றிக்காக பட்ஜெட்டும் போடப்பட்டுள்ளது. சசிகலா தேர்ந்தெடுக்கும் வி.ஐ.பி.க்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார் சசிகலா.

மாநகர மேயர்களும் நகராட்சித் தலைவர்களும் இப்போதைய சட்டத்தின்படி மறைமுக வாக்களிப்பில் தேர்ந்தெடுக்கப்பட விருக்கிறார்கள். இதனை மாற்றியமைக்க தி.மு.க. ஆலோசிப்பதாகவும் தெரிகிறது. அதனால், மேயர்களும் நகராட்சி தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அ.தி.மு.க.வில் போட்டியிடும் முக்கிய வி.ஐ.பி.க்களை ஆதரித்து அவர்களை வெற்றிபெற வைக்க வியூகம் வகுத்துள்ளார் சசிகலா. அந்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வை தன்வசப்படுத்துவதே சசிகலாவின் இலக்கு. சசிகலா ஆதரிக்கும் வேட்பாளர்களை எதிர்த்து அ.ம.மு.க. தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள். இது ஒருபுறமிருக்க, சசிகலாவுக்காக எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்துவருகிறார்கள் எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசுகளில் ஒரு பிரிவினர்.

இதற்கிடையே, 4 வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் நடத்தும் கட்டாயத்தில் இருக்கிறது அ.தி.மு.க. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்பு அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டால் பொதுக்குழுவை தனக்கு சாதகமாக குரலெழுப்பும் கூட்டமாக மாற்றும் திட்டத்தையும் போட்டு வைத்திருக்கிறார் சசிகலா. பொதுக்குழுவில் சசிகலா கலகம் வெடிக்கும்.

ஆக, அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி "ப்ளான்-ஏ', பொதுக்குழுவை மையப்படுத்தி "ப்ளான்-பி' என இரண்டு வியூகங்களை சசிகலாவின் முகாம் அலுவலகம் வகுத்துள்ளது'' என்று சசிகலாவின் திட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது அவர்களது தரப்பு.

nkn031121
இதையும் படியுங்கள்
Subscribe