Advertisment

சசிகலாவின் அரசியல் கட்சி! பா.ஜ.க.வின் பொம்மலாட்டம்!

sasi


புதிய கட்சியை சசிகலா தொடங்கி யிருப்பதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருப்பதாக தமிழக அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, எடப்பாடியை வீழ்த்தவேண்டும் என்கிற ஒற்றை அஜெண்டாவில் குதித்திருக்கிறார் சசிகலா. இதற்காக சசிகலாவுக்கு பல்வேறு ஆலோசனைக ளை வழங்கிவருகிறார்கள் அவரது சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள். 

Advertisment

இதுகுறித்து விசாரித்தபோது... "முக்குலத் தோர் சமூகத்தை ஓரணியில் திரட்ட வேண்டும். அதற்கு வெறும் அறிக்கையெல்லாம் உதவாது. மாறாக, நீங்கள் அரசியல் கட்ச


புதிய கட்சியை சசிகலா தொடங்கி யிருப்பதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருப்பதாக தமிழக அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, எடப்பாடியை வீழ்த்தவேண்டும் என்கிற ஒற்றை அஜெண்டாவில் குதித்திருக்கிறார் சசிகலா. இதற்காக சசிகலாவுக்கு பல்வேறு ஆலோசனைக ளை வழங்கிவருகிறார்கள் அவரது சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள். 

Advertisment

இதுகுறித்து விசாரித்தபோது... "முக்குலத் தோர் சமூகத்தை ஓரணியில் திரட்ட வேண்டும். அதற்கு வெறும் அறிக்கையெல்லாம் உதவாது. மாறாக, நீங்கள் அரசியல் கட்சியைத் தொடங்கி முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவைப்பெறும் வகையில் நம்பிக்கையை ஏற் படுத்தவேண்டும். இது நடந் தால் மட்டுமே அ.தி.மு.க.வுக் கும், தி.மு.க.வுக்கும் செல்லும் முக்குலத்தோர் வாக்குகளை தடுக்க முடியும். அப்படி தடுத்தால்தான் அ.தி.மு.க. உங்களுக்குக் கிடைக்கும். எடப்பாடியை வீழ்த்த முடியும்  என சசிகலாவுக்கு அட்வைஸ் செய்யப்பட்டது. இதன் பின்னணியில்தான் அரசியல் கட்சியைத் தொடங்கி யிருக்கிறார் சசிகலா''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள்.  

Advertisment

இதற்கிடையே, "சசிகலாவை மையப்படுத்தி பா.ஜ.க. டெல்லி தலைமையும், தனது அரசியல் சித்துவிளையாட்டைத் துவக்கி யிருக்கிறது' என்கிறார்கள் மாநில உளவுத் துறையினர். 

இதுகுறித்து அத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உரு வாகவேண்டும் என்கிற அஜெண்டாவை கையில் வைத்திருக்கிறது பா.ஜ.க. டெல்லி தலைமை. அதா வது, பெரும்பான்மை பலம் தி.மு.க.வுக்கு கிடைத்து, ஆட்சி அமைத்தால் அமைத்துக்கொள்ளட்டும். அது வேறு விசயம். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கக்கூடாது என்பதுதான் மோடி மற்றும் அமித்சா கூட்டணியின் ஒற்றை அஜெண்டா.

குறிப்பாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் எனச்சொல்லி வருகிறது பா.ஜ.க. அப்படி ஒருவேளை அமைந்தால் அது எடப்பாடி தலைமையில் இருக்காது. எஸ்.பி.வேலுமணியை முதல்வராக்கி, அவரது தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை நிறுவி, அதனை தங்கள் தலைமையில் இயக்குவதே திட்டம். அதற்கு அ.தி.மு.க. கூட்டணி வலிமை பெறவேண்டும். அதற்கு, தென் மாவட் டங்களில் தி.மு.க.வுக்கு செல்லும் முக்குலத்தோர் வாக்குகளை தடுத்து, அவற்றை ஒருமுகப்படுத்த வேண்டும். முக்குலத்தோர் வாக்குகளை ஒருமுகப்படுத்த தினகரனால் மட்டுமே முடியாது. அந்த சமூகத்தினர் சசிகலாவை தங்களின் தலைவராக பார்க்கிறார்கள் என ஒரு ரிப்போர்ட்டை அமித்ஷாவுக்கு மத்திய உளவுத்துறை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது. 

அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் "சசிகலா தலைமையில் ஒரு கட்சி ஆரம்பித்து அக்கட்சியை தேர்தல் களத்தில் இறக்கினால் தங்களின் திட்டம் நிறைவேறும் எனக் கணக் கிட்டனர். இந்த பின்னணி யில் ஆரம்பிக்கப்பட்டது தான் சசிகலாவின் புதிய கட்சி'” என்கிறார்கள் உளவுத் துறையினர். 

ஆக, சசிகலாவை வைத்து தனது அரசியல் பொம்மலாட்டத்தை துவக்கி யிருக்கிறது பா.ஜ.க! 

nkn040326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe