வாக்குப்பதிவிற்கு சிலநாட்களே இருக்கின்ற நிலையில் சசிகலாவின் எதிர்பாராத கோவில்பட்டி விசிட், அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தனது தஞ்சாவூர் சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின், மார்ச் 29-ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து கிளம்பிய சசிகலா, ராமேஸ்வரத்துக்கு சென்று, எதிரிகளின் கோபத்தைத் தணித்து அவர்களைச் சாந்தமடையச் செய்வதற்கான ருத்ரபாராயண ஜப பூஜையில் கலந்துகொண்டார். பின்னர், திருப்புல்லானியின் ஆதி ஜெகன்னாத பெருமாள் ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக்கொண்ட சசிகலா, அங்கிருந்து நேராகக் கோவில்பட்டிக்கு வந்துவிட்டார்.

sasi

அ.தி.மு.க.வின் அமைச்சர் கடம்பூராஜு, தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். வேட்பாளர் சீனிவாசன், அ.ம.மு.க.வின் டி.டி.வி. தினகரன் என்ற முக்கோண முற்றுகையிலிருக்கிறது கோவில்பட்டி குருஷேத்திரம். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் பூசல்கள் இருந்தபோதும் தினகரனின் வெற்றிக்காக மெனக்கெட்டி ருக்கிறார் சசிகலா. அவரின் வருகையறிந்த அ.ம.மு.க.வினர், தென் மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜாவின் தலைமையில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளித்தனர். பிறகு செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனாத சுவாமி ஆலயத்தில் வழிபாட்டை முடித்தபின்னர், தினகரன் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டுமென்று மாணிக்கராஜாவிடம் கட்டளையிட்டுவிட்டு மதுரைக்குக் கிளம்பி யிருக்கிறார் சசிகலா.

கயத்தாறு யூனியனின் 60 ஆயிரம் தேவர் சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து மாணிக்கராஜா காய் நகர்த்துகிறார். அ.தி.மு.க. அமைச்சரும், சி.பி.எம். வேட்பாளரும் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே தினகரனின் சமூகத்தைச் சேர்ந்த முக் குலத்தோர் வாக்குகளில் 75 சதத்தை மாணிக்கராஜா வளைத்திருக் கிறார். கூடுதலாகப் பிற தரப்பினரின் 30-40 ஆயிரம் வாக்குகளோடு வெற்றியை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறார்.

Advertisment

அதற்கேற்ப திட்டங்குளம், கோவில்பட்டி நகரம், புறநகர்ப் பகுதிகளிலுள்ள முக்கியப் புள்ளிகள், நாட்டாமைகளைச் சந்தித்த ராஜா, வாக்குக்கு இவ்வளவு என்ற திட்டத்தின் அடிப்படையில் கரன்சியை இறக்குகிறாராம். இந்த வாக்கு கள் குக்கர் பக்கம் சேர்ந்து விட்டால் வாக்கு எண்ணிக் கைக்குப் பின்பு தனிக்கவனிப்பு உண்டு என்ற வாக்குறுதியையும் தந்திருக்கிறாராம்.

கோவில்பட்டியில் தினகரனின் வெற்றியின்மூலம் தனக்கான அரசியலில் செல்வாக்கை உணர்த்துவதே சசிகலாவின் திட்டமாக உள்ளது.

Advertisment