"அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மனம் உருகி அஞ்சலி செலுத்திய சசிகலா,’"நான்காண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை அம்மாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். இனி அ.தி.மு.க.வையும் தொண்டர்களையும் தலைவரும் அம்மாவும் காப்பாற்றுவார்கள்'‘என்று கூறிவிட்டுச் சென்றார். எடப்பாடிக்கு எதிராக அதிரடியாகப் பேசுவார் என எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர் களுக்கு சசிகலாவின் பேச்சு ஏமாற்றத்தைத் தந்திருந்தது. ஆனாலும், அவரது வருகை அ.தி. மு.க.வில் சலசலப்பை உருவாக்கத் தவறவில்லை.
"சசிகலாவின் வருகைக்கு பதிலடி கொடுங்கள்' என ஜெயக்குமாருக்கு எடப்பாடி சலங்கை கட்டி விட்டதால், "சசிகலா ஒரு கொசு' என்றார் ஜெயக்குமார்.
மறுநாள் 17-ந் தேதி அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டுத் துவக்க விழா கொண்டாட்டத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்களும், ராமபுரத்தி லுள்ள எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவும் விமர்சையாக கொண்டாடினார
"அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மனம் உருகி அஞ்சலி செலுத்திய சசிகலா,’"நான்காண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை அம்மாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். இனி அ.தி.மு.க.வையும் தொண்டர்களையும் தலைவரும் அம்மாவும் காப்பாற்றுவார்கள்'‘என்று கூறிவிட்டுச் சென்றார். எடப்பாடிக்கு எதிராக அதிரடியாகப் பேசுவார் என எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர் களுக்கு சசிகலாவின் பேச்சு ஏமாற்றத்தைத் தந்திருந்தது. ஆனாலும், அவரது வருகை அ.தி. மு.க.வில் சலசலப்பை உருவாக்கத் தவறவில்லை.
"சசிகலாவின் வருகைக்கு பதிலடி கொடுங்கள்' என ஜெயக்குமாருக்கு எடப்பாடி சலங்கை கட்டி விட்டதால், "சசிகலா ஒரு கொசு' என்றார் ஜெயக்குமார்.
மறுநாள் 17-ந் தேதி அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டுத் துவக்க விழா கொண்டாட்டத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்களும், ராமபுரத்தி லுள்ள எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவும் விமர்சையாக கொண்டாடினார்கள். அத்துடன், தி.நகரிலுள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கொடி ஏற்றினார் சசிகலா. அதற்கான கல்வெட்டில், "பொன்விழா ஆண்டு துவக்க நாள்! கொடியேற்றியவர் திருமதி சசிகலா, கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து பொன்விழா மலரையும் வெளியிட்டுவிட்டுப் பேசிய சசிகலா,‘’"தலைவர் வழி வந்த அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாம். மற்றவர்களை தரக்குறைவாக நாம் பேச வேண்டாம். நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோது கூட கழகத்தை ஆட்சியில் அமர வைத்துவிட்டுத் தான் சென்றேன். நமக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். நமக்குள் ஏற்பட்ட பிளவுகள்தான் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது.
புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின் கழகம் பிளவுபட்டது. இதே வீட்டில் ஜானகி அம்மாள் என்னை அழைத்து கட்சி ஒண்ணு சேரணும்னு சொன்னாங்க. அம்மாவின் பெருமுயற்சியால் கழகம் ஒன்றுபட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதுபோல, கழக ஆட்சி மீண்டும் அமைய நாம் ஒன்றுபட வேண்டும்'' என்றார் சசிகலா.
இரண்டுநாள் நிகழ்வுகளிலும் சசிகலாவின் விசுவாசிகள் பெருமளவில் திரண்டிருந்தனர். அ.தி.மு.க.விலிருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அ.ம.மு.க.வினர்தான் வந்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்பதை அழுத்தமாக பதிவு செய்வதில் சசிகலா பின்வாங்கவில்லை. அதேசமயம், "தோட்டத்தில் பேசிய சசிகலாவின் பேச்சு, எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது போலவே இருந்தது' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தி.நகர் மற்றும் ராமாபுரம் நிகழ்வுகளின் ஏற்பாட்டாளரான அ.ம.மு.க.வின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் என்.வைத்தியநாதனிடம் இதுகுறித்து கேட்ட போது, "ஆட்சியை அ.தி.மு.க. இழந்ததற்கும், உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தற்கும் கட்சியின் இரட்டைத் தலைமைதான் காரணம். ஒற்றைத் தலைமையில் கட்சி ஒன்றாக வேண்டும்; அதுவும் சின்னம்மாவின் தலைமையில் ஒன்றாக வேண்டும் என்றுதான் தொண்டர்கள் விரும்புகின்றனர். அதனால்தான் சின்னம்மா தலைமையில் கட்சி ஒன்றாக வேண்டும். விரைவில் அது நடக்கும்''’என்கிறார்.
அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான பெங்களூர் புகழேந்தியிடம் நாம் பேசியபோது,’"அரசியலில் கடினமான காலகட்டத்தை அ.தி.மு.க. எதிர்கொள்கிறது. கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான தோல்வியால் அ.தி.மு.க.வின் அஸ்திவாரமே ஆடிப்போயிருப்பதற்கு காரணம், எடப்பாடியின் தலைமைதான். இதனால் மீண்டும் கழகம் உயிர் பெறுமா என ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எடப்பாடியின் தலைமையை பெரும்பான்மையான தொண்டர்கள் ஏற்காத நிலையில், சசிகலாவின் அரசியல் வருகை ஆரோக்கியமானது. ஏனெனில், அ.தி.மு.க.விற்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அந்த தலைமை சசிகலா தலைமையில் உருவாவதுதான் காலத்தின் கட்டாயம். திராவிட இயக்கங்களில் ஒரு இயக்கம் அழிந்து போனாலும் தமிழகத்தில் தேசிய கட்சி வேரூன்றுவதற்கு வழி வகுத்துவிடும். அது தி.மு.க.வுக்கும் ஆபத்துதான். அதற்காகவாவது அ.தி.மு.க. ஒன்றாக வேண்டும்''’ என்கிறார்.
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்களுக்கிடையே சசிகலாவின் அரசியலை கட்சியின் சீனியர்களான ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர் களிடம் சீரியசாக விவாதித்திருக்கிறார் எடப்பாடி. குறிப்பாக, கழகப் பொதுச்செயலாளர் என சசிகலா கல்வெட்டு பதித்ததை எடப்பாடியால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு பதிலடி தர சி.வி.சண்முகத்தையும் ஜெயக்குமாரையும் தூண்டிவிட்டுள்ளார் எடப்பாடி. இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி செயல்படுகிறார் சசிகலா. ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமையில் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. ஆயிரம் சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை எதுவும் செய்திட முடியாது''’என்கிறார் ஆவேசமாக.
இதற்கிடையே, சசிகலா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டால் அ.தி.மு.க. வலிமையடைந்து விடுமா? என்றால் அதற்கு உத்தரவாதம் கிடையாது என்கிற அரசியல் விமர்சகர்கள், "அ.தி.மு.க. பிளவு பட்டு ஜெ., ஜா என தேர்தலில் இரு அணிகளாகப் போட்டியிட்டு தனது வலிமையை நிரூபித்தார் ஜெயலலிதா. அதுபோன்று ஒரு தேர்தல் வெற்றி சசிகலாவுக்கு கிடைத்தால் மட்டுமே அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைத்துக்கொள்ள தற்போதைய தலைவர்கள் உடன்படுவர்' என்கின்றனர்.