தூத்துக்குடி மாவட்டம் முதலூரை அடுத்த அடையல் கிராமத்தினை சேர்ந்த சசிகலா புஷ்பா 2010 ஆண்டுவாக்கில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வெகுவிரைவில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி அபரிதமானது. ஜெட் வேகத்தில் மாநில மகரளிரணியின் செயலாளர் ஆனார்.

Advertisment

2014-ஆம் ஆண்டு மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார். அப் பொழுது அவருக்கு டெல்லியில் உள்ள பாராளுமன்ற பகுதியில் நார்த் அவன்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது. பின்னாளில் அ.தி.மு.க. பொருளாளராக மாற ஆசைப்பட்டு அதற்கான மூவ்களை எடுத்த நிலையில் ஜெயலலிதாவால் கண்டிக்கப்பட்டார்.

Advertisment

sasikalapushpa

பின்னர் அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சசிகலா, 2020-ஆம் ஆண்டில் ராஜ்யசபா பதவி முடிந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில துணைத் தலைவரானார்.

"ராஜ்யசபா பதவி முடிந்தவுடன், டெல்லி பாராளுமன்ற பகுதியிலுள்ள வடக்கு அவென்யூ வீட்டை காலிசெய்து கொடுக்க வில்லை. சசிகலா புஷ்பாவின் உடல்நிலை சரியில்லாத பெற்றோர்களின் சிகிச்சைக்காக வீடு தேவைப்படுகின்றது. ஆதலால் அந்த வீட்டினை அவருக்கே ஒதுக்கவேண்டும் என கன்னியாகுமரியைச் சேர்ந்த எம்.பி. விஜய குமார் சிபாரிசு செய்ய, மூன்று மாதத்திற்கு ரூ1.5 லட்சம் வாடகையிலுள்ள அந்த வீட்டை பாராளுமன்ற வீட்டுவசதிக் குழு அனுமதித்தது. சிபாரிசு செய்தவரின் பதவியும் 2022 ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சசி கலா புஷ்பாவிற்கு மற்றுமொரு எம்பி.யின் சிபாரிசுக் கடிதம் தேவைப்பட்டது. தான் தான் தமிழ்நாட்டின் அடுத்த பா.ஜ.க. தலைவர் என பா.ஜ.க. எம்.பி.க்களை தாஜா செய்ய, ஒருவரும் சிபாரிசுக் கடிதம் கொடுக்கவில்லை.

sasikalapushpa

வேறுவழியில்லாமல் ஓ.பி.எஸ்.ஸை பிடித்து கடிதம் கேட்க, அவரும் புதிதாக தேர்வான ராமநாதபுரம் தர்மரை கை காட்டியிருக்கிறார். முதலில் சிபாரிசுக் கடிதம் கொடுத்த எம்.பி. தர்மருக்கு, அந்த வீட்டில் நடக்கும் கூத்துக்கள் தெரியவந்த நிலையில் அவரும் ரிவர்ஸாகி கடிதத்தைத் திரும்பப் பெற்றார்.

Advertisment

10-08-2022-க்குள் வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி, அதனை கதவிலும் ஒட்டியது பாராளு மன்ற வீட்டு வசதிக் குழு.

நம்மை என்ன செய்யப் போகின்றார்கள்.? என சசிகலா புஷ்பாவும் இருந்துவிட கடந்த 10-ஆம் தேதியன்று வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களை யும் வெளியேற்றி தெருவில் வைத்துவிட்டு வீட்டிற்கு சீல் வைத்தது. பொருட்கள் மட் டும் சாலையிலேயே இருந்த நிலையில், பா.ஜ.க.வும் கைகழுவ செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றார் சசிகலாபுஷ்பா'' என் கிறார் அதே வடக்கு அவென்யூ வில் வசிக்கும் எம்.பி. ஒருவர்.

இதுகுறித்து கருத்தறிய சசிகலா புஷ்பாவைத் தொடர்பு கொண்டோம்... பதிலில்லை!