ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அ.திமுகவின் "கிங் மேக்க ராக' கோலோட்சிய சசிகலா, தற்போது, அதே கட்சியில் தனக்கு பதவிவேண்டி அமித்ஷாவை சந்தித்த தகவல் அரசியல் வட்டா ரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழி சசிகலா தன் இல்லத்தில் ஆதரவாளர் களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் கள மிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்திவருவதாகவும், அதற்கான அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம், சசிகலா ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங் களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங் களை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
கடந்த 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, "நான் விரைவில் களத்தில் இறங்குவேன்
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அ.திமுகவின் "கிங் மேக்க ராக' கோலோட்சிய சசிகலா, தற்போது, அதே கட்சியில் தனக்கு பதவிவேண்டி அமித்ஷாவை சந்தித்த தகவல் அரசியல் வட்டா ரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழி சசிகலா தன் இல்லத்தில் ஆதரவாளர் களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் கள மிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்திவருவதாகவும், அதற்கான அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம், சசிகலா ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங் களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங் களை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
கடந்த 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, "நான் விரைவில் களத்தில் இறங்குவேன், அ.தி.மு.க.வைக் கைப்பற்றுவேன்' என தொடர்ச்சியாகப் பேசி வந்தார். இதற்காக பலமுறை அவர் மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றும் பெரியளவில் ஆதரவு இல்லை.
"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக சசிகலா அறிவித்ததிலிருந்தே அவருக்கும், அவரால் வளர்த்துவிடப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்துவிட் டன. பொருளாதார ரீதியாக சசிகலா உதவி செய்யவில்லை என்கிற கோபம் தினகரனுக்கு இருந்தது. அதேபோல, அ.தி.மு.க.வில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் கைவிட்டுப்போனதற்கு தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்தான் காரணம் என நினைத்தார் சசிகலா. தவிர, சசிகலா சிறையில் இருக்கும்போதே அவரது சகோதரர் வி.கே.திவாகரன் மூலமாக தினகரன் பற்றிய முரணான பல தகவல் கள் அவரின் காதுகளுக்குப் போயிருக்கிறது. அத னாலேயே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஆகாது.
இந்நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எப்படியும் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துவிடு வார் எடப்பாடி பழனிச்சாமி என்று நம்பினார் சசிகலா. ஆனால், அது நடக்காத நிலையில், தனது திட்டத்தை மாற்றிக்கொண்ட சசிகலா, தமிழகம் முழுவதும் சுமார் 30 தொகுதிகளில் வேட்பாளர் களைக் களமிறக்கவும் முயற்சி செய்து வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடாது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை கூட் டணிக்குள்ளும் சேர்த்துக் கொள்ளாது. தேவைப்பட் டால், ஆதரவு கொடுத்து அறிக்கைவிடச் சொல்வார்கள், அவ்வளவுதான்.
இது இப்படியிருக்க, கடந்த வாரம் அமித்ஷாவை அவர் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் டெல்லி சென்ற தகவல், திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெய்ஆனந்திற்கு மட்டும்தான் தெரியுமாம். அமித்ஷாவிடம் அவர், தனக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வழங்கிட வேண்டும் என்றும், அப்படி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்தால், தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்குவதாகவும கூறியிருக் கிறார் சசிகலா. இதனை கேட்ட அமித்ஷா, 'முதலில் வருகின்ற தேர்தலில் தே.ஜ. கூட்டணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற செய்தால், அடுத்த ஒரு வருடத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செய லாளராக உங்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதனை கேட்டு அப்செட் மூடிலிருந்த சசிகலாவுக்கு மாற்று ஆலோசனை கூறியிருக்கிறார் ஜெய்ஆனந்த். அதாவது, டி.டி.வி. தினகரனை நீங்கள் வளர்த்துவிட்டதற்குப் பதிலாக எங்களை ஆளாக்கியிருந்தாலா வது உங்களுக்கு உறுதுணையாக நின்றிருப்போம் எனக் கூறிய அவர், தே.ஜ. கூட்டணி தோற்றால் எடப்பாடியார் பலவீனப்பட்டுவிடுவார். அப்போது அ.தி.மு.க. குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வளர்ச்சியை நோக்கி செல்லும் த.வெ.க.வில் இணைவதே நமக்கு நல்லது என அறிவுறுத்தியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட சசசிகலா, தனக்கு 30 சீட் கேட்டு செங்கோட்டையன் மூலமாகவே காய் நகர்த்த, அவரோ, "அண்ணன் ஓ.பி.எஸ்.சையும் கூட்டிட்டு வந்தீங்கன்னா, நீங்க கேட்கிறது மாதிரி 30 சீட் தரச்சொல்லி தளபதிகிட்டே நானே பேசுறேன்மா'’எனக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய இந்த அரசியல் மறுவாழ்விற்காகவே சில சொத்துக்களை விற்றதில் 1000 கோடியை பணமாக கையில் வைத்துள்ள சசிகலா, ஒரு தொகுதிக்கு 10 கோடி வீதம் 30 தொகுதிகளுக்கு 300 கோடி செலவு செய்யவும் தயாராகிவிட்டார்.
ஏற்கனவே தே.ஜ. கூட்டணியில் இணையுமாறு அமித்ஷா ஆலோசனை கூறியும் அதை ஏற்காத ஓ.பி.எஸ்., தற்போது சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து த.வெ.க. பக்கம் செல்லவிருக்கும் தகவல் டெல்லிக்கு தெரிந்து, “"நான் சொல்றது மாதிரி செய்யலைனா, எல்லாம் போயிடும் பார்த்துக்குங்க'’என அமித்ஷா தரப்பிலிருந்து ஓ.பி.எஸ்.ஸுக்கு ‘அன்புக்கட்டளை’ வரவே, தற்போது "யூ டர்ன்' அடித்துவிட்டார் ஓ.பி.எஸ். எனவே, சசிகலாவின் திட்டத்திற்கு பிடிகொடுக்காமல் விலகிச் சென்றுவிட்ட ஓ.பி.எஸ்., இந்தமுறை தே.ஜ. கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் நிற்கலாம் அல்லது அந்தக் கூட்டணிக்காக வாக்கு கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், சசிகலாவோ தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். தனது தம்பி திவாகரன் இதுவரை அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியாததால், அவருடைய மகன் ஜெய்ஆனந்தை த.வெ.க.வில் இணைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் சசிகலா. தற்போதைய நிலவரம் இதுதான்” என விலாவாரியாகக் கூறி முடித்தனர் நம்மிடம்.
போகிற போக்கை பார்த்தால், தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளியானாலும் கூட அ.தி.மு.க.வில் அக்கப்போர் மட்டும் முடியாதுபோல!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us