"ஹலோ தலைவரே, உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்கணும் என்றெல்லாம் அமைச்சர்கள் தரப்பிலிருந்தே குரல்கள் எழுந்துக்கிட்டு இருக்கு.''”

"ஆமாம்பா, அவரோட நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தொடங்கி, அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை வெளியிடறாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அமைச்சரவையை அமைக்கும் போதே, உதயநிதி அமைச்சர் ஆவார்ங்கிற பேச்சு பரபரப்பா எழுந்துச்சு. தி.மு.க. இளைஞரணியினரும் அதில் தீவிர ஆர்வம் காட்டினாங்க. ஆனால், ஸ்டாலின் அவசரம் காட்டலை. அதோடு, உதயநிதி நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் சில கைவசம் இருந்ததால், அந்த வேலைகளும் இருந்தது. தனது சேப்பாக்கம் தொகுதியின் சந்து பொந்து விடாமல் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டார். படப்பிடிப்புகளிலும் தொடர்ந்து பங்கேற்றார். பட வேலைகள் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில், அவர் மாண்புமிகு ஆவார்னு மறுபடியும் டாக் எழுந்திருக்கு. இதற்கிடையே ஜனவரியில் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம்னு ஒரு தரப்பும், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கோட்டை விட்ட மேற்கு மண்ட லத்தில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர்-சேர்மன் பதவிகளைக் கைப்பற்றும் வியூகத்தை உதயநிதி வகுப்பதாகவும், பிரச்சாரத்தையும் முன்னெடுப் பாருன்னும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அமைச்சரவை மாற்றம் நடைபெற்று, அதில் உதயநிதி அமைச்சராவார்னும் இன்னொரு தரப்பும் சொல்லுது.''”

Advertisment

"மேயர் சீட்டுகளுக்கு தி.மு.க.விடம் அதன் கூட்டணிக் கட்சிகள் அடிப்போடுதே?''”

"பிப்ரவரியில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தங்களுக்கு இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளைக் கொடுக்கணும்னு தி.மு.க.விடம் அடிப்போடுகிறதாம் காங்கிரஸ். அறிவாலயமோ 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.தான் போட்டியிடப் போவுது. நகராட்சி களில் வேண்டுமானால் இடம் ஒதுக்குகிறோம் என்கிறதாம். காங்கிரஸ் விடாப்பிடியாக நெருக்க, தி.மு.க. தலைமையோ, எங்கள் மா.செ.க்களிடம் பேசி முடிவுசெய்து கொள்ளுங் கள்னு கறார் குரலில் சொல்லி விட்டதாம். இதற்கிடையே, சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 20 வார்டுகள் வேண்டும்னு, தாங்கள் விரும்பும் 32 வார்டுகள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தரப்பு தி.மு.க.விடம் கொடுத்திருக் கிறது.''”

"ம்...'' ”

Advertisment

"சேலம் காங்கிரஸ் தரப்பு 20 சீட் கேட்டதும், அடேங்கப்பான்னு அதிர்ச்சியை வெளியிட்ட தி.மு.க. தரப்பு, ஒரு வார்டில் ஜெயிக்கணும்னா 1 கோடி ரூபாய் செலவுசெய்ய வேண்டியிருக்கும். முதலில் உங்க கட்சியில் 1 கோடி ரூபாய் செலவு செய்ய ஆள் இருக்கான்னு சொல்லுங்க. அதுக்குப் பிறகு சீட் ஒதுக்கீடு பற்றிப் பேசலாம்னு கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டதாம். இந்த 1 கோடி டிமாண்டையே, மாநகராட்சிப் பகுதிகளில் சீட் கேட்கும் மற்ற தோழமைக் கட்சிகளிடமும் தி.மு.க. தரப்பு வைக்கப் போகுதாம்.''”

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்னு பா.ம.க. முடிவுக்கு வந்திருக்குதே?''”

"அ.தி.மு.க.வால் பா.ம.க.வுக்கு எந்த லாபமும் இல்லைன்னு தைலாபுரம் நினைக்குதாம். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்போம்னு டாக்டர் ராமதாஸ் விரைவில் அறிவிக்கப் போகிறாராம். இது தெரிந்து அ.தி.மு.க. தரப்பு, பா.ம.க. மீது ஏகக் கடுப்பில் இருக்குதாம். இதற்கிடையே பா.ஜ.க., தொகுதி உடன்பாடு குறித்து அ.தி.மு.க.வுடன் பேச ஆரம்பித்திருக்கிறது. அதேபோல் சசிகலாவை கட்சியில் இணைச்சிக்கணும்னு அ.தி.மு.கவிடம் அது வற்புறுத்துகிறதாம். அதனால் தான் இது குறித்து பா.ஜ.க. அண்ணாமலையே பகிரங்கமாகப் பேசுகிறார். இதை ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டாலும் எடப்பாடி, சசியின் என்ட்ரியை ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு பதில் ஜெயக்குமாரை விட்டு சசிகலாவை அட்டாக் பண்ணச் சொல்கிறாராம் எடப்பாடி.''”

dd

"கொடநாடு வழக்கு விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணி இளவரசியோட மகன் விவேக் சிக்கியிருக் காரே?''”

"கொடநாடு விவ காரத்தில் பல மரணங்கள் மர்மமா இருக்கிற நிலையில், எஸ்டேட் மேனேஜர் நடராஜன்கிட்டேதான் உண்மை ஒளிஞ்சிருக்குன்னு விசாரணை டீம் கண்டு பிடிச்சிருக்கு. அந்த உண்மைகளைக் கண்டுபிடிச் சாகணும்கிறதில் தீவிரமா இருக்கு. கொடநாட்டில் களவு போன பொருட்கள், அங்கே லாக்கரில் இருந்த டாக்குமெண்ட்டுகள் விவரங்களைக் கேட்டால் நடராஜன் மாற்றி மாற்றிப் பேசுறாராம். சசிகலா குடும்பத்தாரால்தான் நடராஜன் அங்கே மேனேஜர் ஆனார். அதனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஜெ.வின் நேரடிப்பார்வையில் வளர்ந்தவருமான விவேக்கிடம் விசாரணையை ஆரம்பிச்சிருக்காங்க. கொடநாடு மர்மத்தில் எடப்பாடி தரப்புக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களைத் திரட்டியிருக்கும் விசாரணை டீம், இப்ப சசிகலாவை குறி வச்சிருக்கு. ஆவணங்கள் சிக்கினால் அவரும் சிக்குவாராம்.''”

dd

"நீட்டுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் காட்டிய ஆவேசம், ஒன்றிய அரசை மிரள வச்சிருக்கே?''”

trbalu

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெற இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.மு.க உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்ற லோக்சபாவில் ஆவேசமாகப் போர்க்குரல் எழுப்பினாங்க. நீட்டைத் திணிக்காதேங்கிற பதாகைகளையும் தூக்கிப் பிடித்தபடி கோஷம் எழுப்பி, அவையையே அதிரவச்சாங்க. அவையில் கோபத்தோடு பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீட்டுக்கு விலக்களிக்கணும்னு தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இன்னும் ஒப்புதல் தரலை. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுன்னு பகிரங்கமாகக் குற்றம்சாட்டிப் பேச, அவரோட வேகத்தைப் பார்த்து ஆளும் பா.ஜ.க. தரப்பு கொஞ்சம் ஷாக் ஆயிடிச்சி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநரிடம் இருப்பதால், டெல்லியிலிருந்து அவருக்கு ஏதேனும் இன்ஸ்ட்ரக்ஷன் வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி தரப்பின் செல்வாக்கு அதிகாரிகள் மத்தியில் இன்னும் தொடருதாமே?''”

"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆட்சிக் காலத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாநகராட்சிகளிலும், உபகரணக் கொள்முதலுக்கான பெரும்பாலான காண்ட் ராக்ட்டுகளை சுகந்தன் என்பவர்தான் எடுத்து வந்தார். அப்போதைய அமைச்சர் வேலுமணியின் மகன் விகாஸ், வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக் ஆகியோரின் நெருக்கமான நண்பர். அவர்களின் வெளிநாட்டு சுற்றுலாச் செலவுகளை எல்லாம் சுகந்தன்தான் கவனிச்சிக்குவாராம். அப்படிப்பட்ட சுகந்தனுக்கே, இப்போதும் ஒப்பந்தங்கள் வழங்கப்படுதாம். அதேபோல், விவேக்கும் விகாஸும் இன்றும் அதிகாரிகளிடம் அதிக செல்வாக்கோடு இருக்கிறார்களாம்.''”

"கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில்தான் அதிக ஊழல் நடந்திருக்குன்னு அதிகாரிகள் தரப்பு சொல்லுதேப்பா?''”

dd

"உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆட்சியில் கொள்ளையடித்த அ.தி.மு.க. பவர் புள்ளிகள் எல்லோருமே, தங்கள் பணத்தை எல்லாம் சொத்துக்களாக மாற்றிய வகையில்., பத்திரப்பதிவுத்துறை அவர்களுக்கு உடந்தையா இருந்திருக்கு. அதெல்லாம் இப்ப நடத்தப்பட்ட ரெய்டுகளின் போது தெரியவந்திருக்கு. அதிலும் பலர் கில்லாடித்தனமா சொத்துக்களைப் பதிவுசெய்யும் போது ஊர் விபரங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி, ’நிக் நேம்களில் பதிவு செய்திருக்கிறார்களாம். இதை எல்லாம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலை மையில் ஒரு குழுவை வைத்து, அரசு துருவப் போகுது. கடந்த ஆட்சியில் அமைச் சர் சம்பத்தால் வன்னிய சமூக அதிகாரிகளும், இப்ப அமைச்சர் மூர்த்தியால் முக்குலத்து அதிகாரி களும் அந்தத் துறையில் செல்வாக்காக இருப்ப தால், இதை வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி தலைமை யிலேயே இதை விசாரிக்கணும்னு, பலரும் சொல்றாங்க.''”

"ஒரே ஒரு அதிகாரியால், ஒட்டுமொத்த நெடுஞ்சாலைத் துறையும் ஸ்தம்பிச்சி நிக்கிதுன்னு புகார் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, நெடுஞ்சாலைத் துறையின் பெருநகரப் பாலங்கள் வடிவமைப்புப் பிரிவில், தலைமைப் பொறியாளராக இருப்பவர் சுமதி. இவர் தமிழகம் முழுக்க நடக்கும் பாலங்களின் கட்டுமானம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். வருடத்துக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் இவருக்கு சம்பளம் கொடுக்கப்படுது. அப்படி இருந்தும், தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இவர் சரியாக வேலைக்கு வராமல் மட்டம் போடுகிறாராம். இதனால் பல வேலைகள் தடைபட்டுக் கிடக்குதாம். வெளியூர்களில் இருந்து வந்து பொறியாளர்கள் காத்திருந்தாலும், மாலை 4 மணிக்கு மேல் அலுவலகம் வந்து, தலைகாட்டி விட்டு, 5 நிமிசத்தில் ஜூட் விட்டு விடுகிறாராம். இது தொடர்பான புகார்கள், இப்ப கோட்டைக்குப் பறந்துக்கிட்டு இருக்குதாம்.''”

"தி.மு.க. அரசு, தமிழகக் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கப்போகுதே?''”

"இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுக்க ஏறத்தாழ 44 ஆயிரம் கோயில்கள் இருக்கு. இதுக்கெல்லாம் அறங்காவல் குழு உறுப்பினர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கு. இதற்குத் தகுதியான நபர்களை நியமிக்க இருப்பதால், தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்னு அறநிலையத்துறை அறிவிச்சிருக்கு. இதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சித் தரப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் இதற்காகப் பரபரப்பா விண்ணப்பிச்சிக்கிட்டு இருக்காங்க. இதனைக் கவனித்த பா.ஜ.க. தரப்பு, ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தது 50 பேராவது நம்ம ஆளுங்க விண்ணப்பிக்கணும்னு தங்கள் ஆட்களை உசுப்பிக்கிட்டு இருக்குது. குழு உறுப்பினர்கள் நியமனத்தின்போது பா.ஜ.க. குடைச்சல் கொடுத்து, அங்கங்கே முட்டல் மோதல்கள் வெடிக்கலாம்ங்கிற நிலை நிலவுது.''’

ff

"என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுவை முதல்வரான ரெங்கசாமி, வெளிநாட் டுக்குப் போக அனுமதிக்குக் காத்திருக்கிறாராமே?’''’

”"ஆமாங்க தலைவரே, தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லவேண்டிய நிலையில் இருக்கிறாராம் புதுவை முதல்வர் ரெங்கசாமி. இதற்காக, தனது பார்ட்னரான ஒன்றிய அரசிடம் அவர் அனுமதி கேட்டும், அங்குள்ள உள்துறை அமைச்சகம் அசைந்துகொடுக்க மறுக்கிறதாம். இதற்குக் காரணம், ரெங்கசாமி வெளிநாடு சென்று திரும்பும் வரை, பொறுப்பு முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த நமச்சிவாயத்தை ஏற்கணும்னு டெல்லி வலியுறுத்துகிறதாம். இதை ரெங்கசாமி ஏற்காததால்தான், அனுமதி விசயத்தில் அவரைத் தொங்கலில் விட்டிருக்கிறதாம் டெல்லி.''”

"ம்...''

"தென்மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அதிக லீடிங்கில் ஜெயித்தவருமான சீனியர் அமைச்ச ருக்கு, தனக்கு கொடுக்கப் பட்டுள்ள இலாகாவில் திருப்தியில்லாமல்தான் 6 மாதமா கோட்டைக்கு வந்துட்டுப் போறாராம். அப்செட்டாகவே இருக்கும் அவர், அரசு ஒதுக்கிய கிரீன் வேஸ் சாலை பங்களாவுக்கும் போகாமல் ஆர்.கே.சாலை யில் உள்ள ஒரு ஓட்டலில்தான் தங்கியிருக் கிறாராம்''.”