ன்னை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் சசிகலா, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்து தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களுக்கு சென்று வந்தார். மீண்டும் தஞ்சாவூர் வந்து அருளானந்தம் நகரில் உள்ள வீட்டில் தங்கினார்.

sasi

தீபாவளியையொட்டி தனது ஆதரவாளர் களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால், அ.தி.மு.க நிர்வாகிகள் பழைய விசுவாசத்துடன் வருவார்கள் என மீடியாக்கள் அங்கே காத்திருந் தன. அ.ம.மு.க.வில் உள்ள நிர்வாகிகள் இளைஞர் கள் வந்து சென்றனர். அவர்களுடன் சில அ.தி.மு.க. தொண்டர்களும் வந்துள்ளனர். தொடக்கநாளில் ஒவ்வொரு நபருடன் தனித்தனியாக படங்கள் எடுத்துக்கொண்டவர், பிறகு குழு குழுவாக படங்களை எடுத்துக்கொண்டு அவர்களிடம், "அ.தி.மு.க. நம்முடையது, கட்சியை வளர்ப்போம்...' என்ற ரீதியிலேயே பேசி அனுப்பியிருக்கிறார். சந்தித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முக்குலத்தோர் சமூகத்தினர்.

"ஒவ்வொரு பகுதியிலும் அ.தி.மு.க. எப்படி இருக்கிறது? யாரெல்லாம் நமக்கு எதிராக இருக் கிறார்கள்' என்ற பட்டியலையும் வாங்கியிருக்கிறார். மீடியாக்களின் கவனம் படாத, அதிகாலை நேரத் திலும் இரவு நேரத்திலும் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாஜிக்கள் வந்து சென்றதாக கூறப்படு கிறது. யாரெல்லாம் சசிகலாவை சந்திக்க வேண் டும் என்பதை அவரது உதவியாளர் கார்த்திக் முடிவு செய்து அனுப்பி வைத்திருந்தார். தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆதரவாளர்களை சந்தித்த பிறகு, ஏழாம் தேதி காலை 9:00 மணிக்கு அங்கி ருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

Advertisment

4 நாட்களில் தனது தம்பி திவாகரனை சசிகலா சந்திக்கவில்லை. டி.டி.வி. தினகரன் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு திவாகரனுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் நீடிக்கும் நிலையில்... திவாகரன் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருக்கும்படி உறவுகளிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா.

"விரைவில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ மான பொதுச்செயலாளர் சசிகலாதான் என்பதை ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் வெளிப் படுத்துவார்கள்' என்றும் அவர் கூறியிருக் கிறாராம்.

இந்த நிலையில்... விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன் 6-ஆம் தேதி சசிகலாவை சந்தித்து சுமார் அரைமணி நேரம் பேசிவிட்டு வெளியே வந்தார். "விவசாய வேளாண் பணிகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைக் காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நன்றி கூறினேன்' என்றார். சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பது, அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment