"ஹலோ தலைவரே, ஜெ.வின் தோழியான சசிகலா, மறுபடியும் அ.தி.மு.க.வின் லகானைப் பிடிக்கத் தயாராயிட்டார்.''””

"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் போறாரா?''””

Advertisment

auditor-gurumurthy

"ஆமாங்க தலைவரே, நீங்க குறிப்பிட்ட மாதிரி அ.தி.மு.க.வே இப்ப குழம்பிய குட்டையாத் தான் இருக்கு. இந்த நிலையில் மறுபடியும் எப்படியாவது அ.தி.மு.க.வின் லகானைப் பிடிச்சிடணும் என்கிற முடிவுக்கு சசிகலா வந்துட்டாராம். ஜெ..வின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் தான் போட்ட கணக்கெல்லாம் தவிடுபொடியாகிய நிலையில், சசிகலா இப்போது புதிய பயணத்தை மேற்கொள்ளத் தயாராயிட்டார். ஓ.பி.எஸ்.ஸை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அவர் மகள் கவிதா மூலம் அவருக்கு தினமும் சசிகலா வேப்பிலை அடித்துவந்தார். ஆனால் ஓ.பி.எஸ்.ஸோ சசிகலா வுடன் நட்பில் இருப்பதுபோல் காட்டிக்கொண் டாலும் அவர் முழுக்க முழுக்க பா.ஜ.க.வை மட்டும்தான் நம்புகிறார்னு சசிகலா தெரிஞ்சிக்கிட்டாராம். ஓ.பி.எஸ்.ஸை இப்ப ரிமோட்ல இயக்குறது பா.ஜ.க.வின் தீவிர அபிமானியும் ஆடிட்டருமான "துக்ளக்'’ குருமூர்த்திதான்னு சசிகலா நினைக்கிறார்.''””

"ஆமாம்பா, அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்குப் போயிருந்த ஓ.பி.எஸ். அவருடன் 40 நிமிடங்களுக்கும் மேல் தனியாகப் பேசியிருக்காரே?''””

Advertisment

ops

"ஆமாங்க தலைவரே, இதெல்லாம் சசிகலாவை கடுப்பாக்கி இருக்கு. ஓ.பி.எஸ்.சுக்கு இப்ப அரசியல் குரு, ஆடிட்டர் குருமூர்த்திதான்னு அவரைச் சார்ந்தவர்களே சொல்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா பெரிதும் நம்பிய தினகரனும், அவரிடம் முடிந்தவரை கறந்துகொண்டு, அவரை நட்டாற்றில் விட்டுவிட்டதாகவும் அவர் வருந்துகிறாராம். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸையும் இனி நம்பக்கூடாதுங்கிற முடிவுக்கு வந்துவிட்ட சசிகலா, அவருக்கும் பாடம் புகட்டுவதற்காக, எடப்பாடியுடன் கை குலுக்கும் முடிவிற்கு வந்துவிட்டாராம். எடப்பாடி யுடன் இருந்து அரசியலில் சதுரங்கம் ஆடுவதுதான் அவர் வியூகமாம். அதனால் அவர், எடப்பாடியின் மகன் மிதுன் மூலம் பல விசயங்களையும் பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் இப் போது எடப்பாடி யின் கை ஓங்கியிருப்ப தால், அவரைத் தன் கையில் வைத்துக் கொண்டு, அரசியலில் கோலோச்சலாம் என்று சசி நினைக்கிறா ராம். அதற்கான மூவ் களை இப்போது தீவிர மாக நடத்திக்கொண்டிருக்கிறார் சசி.''””

"சசியின் அதிகார ஆட்டத்துக்கு எடப்பாடி இடம்கொடுப்பாரா?''””

"சசிகலா தன் பக்கம் இருப்பதாகத் தூதுவிட்டதில் இருந்தே எடப்பாடி விழிபிதுங்கிப் போய் நிற்கிறார். மறுபடியும் தானாகப் போய்த் தன் சிண்டை சசிகலா கையில் கொடுப்ப தான்னு பலவாறாக யோசிக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க.வும் தங்களுக்கு அமித்ஷா மூலம் கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் கட்சி சீனியர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க. தரப்பில், அ.தி.மு.க.வுடன் இனி தேர்தல் கூட்டு வேண்டாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இப்படி ஒரு சூறாவளியைக் கட்சியில் கிளப்பி விட்ட அண்ணாமலை, அந்தக் கருத்தை கட்சியின் தலைமையிடம் பலர் மூலமும் எதிரொலிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போன் றோர், அ.தி.மு.க.வுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தால், நாம் கேட்கும் சீட்டைத் தராமல் 5-ல் இருந்து, 7 சீட் வரைதான் கொடுப்பார்கள். அதனால் அ.தி.மு.க.வை கைகழுவ வேண்டும் என்று சொல்லிவருகிறார்கள். அண்மையில் அமித்ஷாவை முருகன் சந்தித்தபோதுகூட இதைச் சொல்ல, உடனே அமித்ஷா, அண்ணாமலை இப்படி சொல்லச் சொன்னாரான்னு, புன்னகையுடன் கேட்டாராம்.''””

Advertisment

eps-sasi

"எடப்பாடியின் குழப்பம் இப்ப பகிரங்கமாவே வெளிப்படுதே?''””

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மா.செ.க்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த எடப்பாடி, அதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கத் திட்டமிட்டார். அதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடக்கும் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் சீனியர்கள், அந்தக் கூட்டத்துக்கான தயாரிப்பில் இறங்கிய நிலையில், மா.செ.க்கள் கூட்டத்தை திடீரென்று ரத்துசெய்த எடப்பாடி, அதேநாளில் அ.தி.மு.க. வின் செயற்குழு கூட்டம் நடக்கும் என்று 3ஆம் தேதி அறிவித்தார். ஆனால், அந்த கூட்டத்தையும் அதே வேகத்தில் எடப்பாடி மறுநாளே ரத்து செய்துவிட்டார். அவரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்ட ர.ர.க்கள், எடப்பாடிக்கு என்ன ஆச்சு என்று திகைத்துப் போயிருக்கிறார்கள்.''””

"ஒரு கட்சியின் செயற்குழு என்பது மிக முக்கியமானது. அதை எதற்காக எடப்பாடி ரத்து செய்தாராம்?''””

dinakaran"அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிறகுதான் முறைப்படி ஆணையமும் அதை அங்கீகரிக்கும். அதனால்தான் மா.செ.க்கள் கூட்டத்தை எடப்பாடி, செயற்குழு கூட்டமாக மாற்றினார். கட்சி விதியின்படி, செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை 7 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண் டும். ஆனால், 7ஆம் தேதி செயற்குழு என்று 3ஆம் தேதி எடப்பாடி அறிவித்தார். இதனைக் கணக்கிட்டால் விதிகளின் படி 7 நாள் இடைவெளி இல்லை. இதையறிந்த ஓ.பி.எஸ். தரப்பு, கட்சி தொடர் பான வழக்கின் விசாரணை நடக்க இருக் கும் 20ஆம் தேதி, நீதிமன்றத் தில் இந்த விதிமீறலைப் பற்றி முறையிடத் திட்டமிட்டது. இந்தத் தகவல் எடப்பாடி காதுக்குப் போக... திகைத்துப்போன அவர் அவசர கதியில், கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.''””

"அ.தி.மு.க. செயற்குழுவை எடப்பாடி எப்போது கூட்டப்போறாராம்?''””

"அதுபற்றி விசாரிச்சேங்க தலைவரே, இதற்கிடையே எடப்பாடியின் நடவடிக்கைகளைக் கவனித்த, ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவரான அந்த கேரள நம்பூதிரி, செயற்குழுவை ஏன் தேய்பிறையில் கூட்ட முயற்சி செஞ்சீங்க? அப்படிக் கூட்டியிருந்தால் உங்களுக்கு மோசமான பலன்களே ஏற்பட்டிருக்கும்னு எச்சரிச்சாராம். இதுவும் எடப்பாடியை மிரளவச்சிருக்கு. இந்த நிலையில் வருகிற 16-ந் தேதி அவசர பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி முடிவெடுத்திருக்கிறாராம். அதேசமயம் ஓ.பி.எஸ். தரப்பினரோ, பொதுச்செயலாளர் ஆன குஷிதான் எடப்பாடியை தலைகால் புரியாமல் ஆட வைக்கிறது. அதனால்தான் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் நடந்துகொள்கிறார். கட்சியின் விதிகளுக்கு முரணாக அவர் எதைச் செய்தாலும் அம்பலப்படுத்துவோம்” என்கிறார்கள் கூலாக.''””

"மக்களைச் சந்தித்து அ.தி.மு.க.வினரை ஒன்றுதிரட்டுவேன்னு ஓ.பி.எஸ். சொன்னாரே?''””

"இது பற்றி அவங்க தரப்பில் விசாரிச்சப்ப, பிரமாண்டமான ஒரு மாநாட்டை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல்வாரத்தில் திருச்சியில் நடத்துவதற்கான முயற்சியில் ஓ.பி.எஸ். இருக்கார்னு சொல்றாங்க. அதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போகிறாராம். அந்த மாநாட்டில் சசிகலா, தினகரன் ஆகியோரை யும் அழைக்கலாமா என்று ஆலோசித்திருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், ஓ.பி.எஸ்.ஸின் முக்கிய ஆதரவாளர்களோ, ’ நமக்கும் எடப்பாடிக்குமான யுத்தம் இது. இதில் தினகரன், சசிகலாவை அழைத்தால் சாதி ரீதியாக ஒன்று சேர்கிறார்கள் என எடப்பாடி கொளுத்திப் போடுவார். கட்சி தொண்டர்களிடமும் இது தேவையற்ற சலசலப்பை உருவாக்கும். சசிகலா, தினகரனைத் தவிர்க்கலாம்னு சொல்லியிருக்காங்க. அப்பவும் ஓ.பி.எஸ். அதுபத்தி பிறகு யோசிப்போம்னு சொல்லியிருக்காராம்.''””

"சரிப்பா, டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த முறைகேடு, சட்டமன்றம் வரை எதிரொலிச் சிருக்கே?''”””

rr"ஆமாங்க தலைவரே, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், குறிப்பிட்ட தனியார் மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இந்தத் தேர்வில் முறை கேடு நடந்ததாக கடந்தவாரம் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது குறித்து விசாரணை நடக்கிறது என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவையில் அறிவித்து, நிலைமையின் தகிப்பைத் தணித்தார். இதற்கிடையே, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். தென்மாவட்டத்தில் இயங்கும் ஒரு தனியார் மையத்தின் பின்னணியில், தமிழக அரசிற்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையின் உயரதிகாரியாக உள்ள ஒரு பெண்மணியின் கணவர் இருப்பதாக, கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் வெறும் அயிரைகளோடு நின்றுவிடாமல் திமிங்கலங் களையும் மடக்கவேண்டும் என்கிறார்கள் பலரும்.''””

"விசாரணைக் கைதிகளிடம் கொடூரமாக நடந்த குற்றச்சாட்டில் சிக்கிய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கைக் காப்பாற்றும் முயற்சி நடக்குதேப்பா?''””

"ஆமாங்க தலைவரே, விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியும், கருங்கல்லை வாயில் விட்டு ஆட்டியும், சைக்கோ போல் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நெல்லை ஏ.எஸ்.பி.யான பல்பீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடக்கும் நிலையில், அவரைக் காப்பாற்றும் வகையில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் முயற்சித்து வருகிறார்களாம். அதற்கேற்ப, ஏ.எஸ்.பி.க்கு ஆதரவான பல்வேறு சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள், பொதுவெளியில் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் உள்துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக குற்றம் சுமத்தும் வகையில், பல்வீர்சிங் விவகாரம் உள்பட கடந்த 6 மாதங்களில் நடந்த குற்றச்சம்பவங்களை அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சுட்டிக்காட்டும் வியூகத்தில் இருக்கின்றன.''” ”

"முதல்வரும் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறாரே?''””

"ஆமாங்க தலைவரே, இங்கே சட்டம் ஒழுங்குக்கு எதிரான சம்பவங்கள் குறித்த ஆவணங்களை அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சேகரித்து வருகின்றன. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், ’அந்த ஏ.எஸ்.பி. விவகாரத்தில் காம்ப்ரமைஸ் கூடாது; உண்மையாகவே அவர் விசயத்தில் சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதனையடுத்து உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி, முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பல்பீர்சிங்கிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பல்வீர்சிங்கிற்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் உள்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.''””

rang

"பா.ம.க. பிரமுகரை தி.மு.க. அரசு உருக வைத் திருக்கிறதே?''””

"பா.ம.க.வை வளர்த்தெடுத்த அக் கட்சியின் சீனியர்களில் முக்கியமானவர் சென்னை சைதாப்பேட் டையைச் சேர்ந்த மா.சு. வேலுமணி. பா.ம.க. வுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு, அக்கட்சி நடத்திய இட ஒதுக்கீடுப் போராட்டத்தில் பங்கேற்று, அதில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் பொருளுதவி செய்திருக்கிறார். டாக்டர் ராம தாசின் நம்பிக் கைக்கு உரியவரான அவர், இப்போது வெகுவாக நொடித்துப்போன நிலையில், வேலுமணி இருதய நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதற்கான மருத்துவக் கட்டணங்கள் அதிக அளவில் ஆக, அரசுக் காப்பீடு இதற்கு பொருந்தாது என்று சம்மந்தப்பட்டவர்கள் கைவிரித்துவிட்டார்கள். இது தலைமைச் செயலாளர் இறையன்புவின் கவனத்துக்குப் போக, வேலுமணிக்கு காப்பீட்டுப் பலன்களை அவர் உடனடியாகக் கிடைக்கச் செய்திருக்கிறார். இப்போது அவர் குடும்பம் தமிழ்நாடு அரசுக்கும், தலைமைச் செயலாளருக்கும் நன்றி சொல்லி உருகிக்கொண்டிருக்கிறது.''””

"நானும் ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் அவற்றைத் திறந்து வைக்க பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வரும் மோடியைச் சந்திக்க ஓ.பி.எஸ். ஒரு பக்கம் முயற்சியில் இருக்க, எடப்பாடியும் அவரைப் பார்த்து அவரிடம் நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்பாயின்மெண்ட் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர்களில் யாரை? எப்படி? மோடி சந்திக்கப்போகிறார் என்பதுதான், இப்போது அரசியல் அரங்கில் இருக்கும் பெரும் எதிர்பார்ப்பு.''