""ஹலோ தலைவரே, முதல்வரான பிறகும் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்ளிங் போய் ஃபிட்னெஸ்ஸை நிரூபிச்சிருக்காரே?''’’
""ஆமாம்பா, ஜூலை 3-ந் தேதி அவர் ஆஸ்பிடலில் அட்மிட்னு தகவல் வந்தது. அப்புறம் பார்த்தால், ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் ரெகுலர் செக்கப்னு தெரிந்து, கட்சியினர் நிம்மதியடைந்த நிலையில், ஜூலை 4-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவளத்திலிருந்து மாமல்லபுரம் வரை சைக்ளிங் போய் தன் ஃபிட்னெஸ்ஸை சுயபரிசோதனை செஞ்சிக்கிட்டாரு.''
""பதவியேற்றதிலிருந்தே ஓய்வில்லை. சரியானபடி உறக்கமும் இல்லை. அதனால, அவர் நன்றாக ஓய்வெடுக்கணும்னு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணியிருக்காங்க தலைவரே. அவரோ பட்ஜெட் தயாரிப்புத் தொடர்பான ஒவ்வொரு துறைவாரியா ஆலோசனை நடத்துறாரு.''’’
""ஜெ’ மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனின் செயல்பாடும், முதல்வர் ஸ்டாலினின் முடிவுக்குக் காத்திருக்குதே?''
""முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் மூலம் பிரேக் பிடித்து வைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனைத் துரிதப்படுத்தணும்னு, ஜெ.’அண்ணன் மகள் தீபா தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறது. 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்ற உத்தரவை, நாங்கள் ஏன் பிறப்பிக்கக்கூடாதுனு ஹைகோர்ட் கேள்வி எழுப்பியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி அரசு போட்ட வழக்கை, வெக்கேட் பண்ணுவதற்கான முதல்வரின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது காவல் துறை.''’’
""ஜெ’ சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான அம்சங்களும் முதல்வரின் கண்ணசைவுக் குக் காத்திருக்கிறதே?''’’
""நீதிபதி குன்ஹாவின் தீர

""நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில், வருமானத்துக்கு அதிகமா இருந்த ஜெ.வின் நகைகள், கொடநாடு பங்களா வரை உள்பட பலவற்றையும் கைப்பற்றி, அரசுக் கருவூலத்தில் சேர்க்கவேண்டும். 96-ல் அந்த வழக்கு தொடுக்கப்பட்டபோது ஜெ.வின் சொத்து மதிப்பு 66.6 கோடி. இப்போது அதன் மதிப்பு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி. இந்த விவகாரத்திலும், முதல்வரின் சிக்னல் கிடைக்குமா என்று கவனித்துக் கொண்டிருக்கிறது காவல்துறை.''’’
""இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பரப்பன அக்ரகாரம் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த சசிகலா, தன் கட்சி நிர்வாகிகளிடம் பேசுறப்ப அதிரடி செய்திகளை அள்ளிவிடுறாரே?''’’
""ஆமாங்க தலைவரே... தன்கிட்டே எம்.ஜி.ஆரே ஆலோசனை கேட்டிருக்காருன்னும், அவரை சந்தித்தபோதும், அவர்கூட பயணித்தபோதும், தான் சொல்லும் ஆலோசனைகளை எம்.ஜி.ஆர். கேட்டுக்குவார்னும் சசிகலா சொன்னது அ.தி.மு.க தலைமையை மட்டுமல்ல, நீண்டகாலத் தொண்டர்களையும் அதிரவச்சிருக்கு. சசிகலா தரப்பினரோ, நம்ம நக்கீரனில் வலம்புரிஜான் எழுதிய "வணக்கம்' தொடரில் சசிகலா பற்றிக் குறிப்பிட்டிருப் பதை சுட்டிக்காட்டுறாங்க. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவை பார்த்ததாக வலம்புரிஜான் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயலலிதா சார்பில் கட்சி நிர்வாகிகளிடம் தூது போனவர் நடராஜனின் மனைவி சசிகலாங்கிறதையும், எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்தவர் சசிகலான்னும் வலம்புரிஜான் எழுதியிருக்காரு. அதைத்தான் இப்ப ஆதாரமா முன்வைக்கிறாங்க.''’’
""சீனியர் அ.தி.மு.க.வினர் இதுபற்றி வரிந்துகட்டிப் பேச ஆரம்பிச்சிருக்காங்களே?''’’
""சசிகலா எதிர்பார்க்கிறதும் இதைத்தான். எடப்பாடிக்கோ ஓ.பி.எஸ்.ஸூக்கோ எம்.ஜி.ஆருடன் நெருக்கம் கிடையாது. அவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான். ஆனால், ஜெயலலிதா அ.தி.மு.க.வில் சேர்ந்து, கடலூர் மாநாட்டில் பங்கேற்றபோதே அங்கே கலெக்டரா இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., பி.ஆர்.ஓ.வான நடராஜன் மூலம் சசிகலா அறிமுகமானதையும், ஜெயலலிதாவுக்கு பாதுகாவலரா சசியை ஜெ. நியமிச்சாருங்கிற விவரத்தையும் சசி தரப்பு முன்னெடுக்குது.''’’
""தமிழக பா.ஜ.க.வினர் மீது டெல்லி கடும் அதிருப்தியில் இருக்குதாமே?''’’
""சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றிருக்காங்க. இதற்காக எல்.முருகன் ஏற்கனவே நேரம் கேட்டும், எதிர்பார்த்த வெற்றி இல்லாததாலும், தொடர் புகார்களாலும் பா.ஜ.க தலைமை கடும் கோபத்தில் இருந்தது. பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி நடந்துக்கணும்னு டெல்லி வழிகாட்டணும்னு கட்சியின் அகில இந்தியத் தலைவரான ஜே.பி. நட்டா மூலம் ஒரு பிட்டைப் போட, அதன் பிறகே, வரச்சொல்லி இருக்கார் மோடி. எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவின் 4 எம்.எல்.ஏ.க்களும் . மோடியை அவரது இல்லத்தில் சந்திச்சாங்க. 32 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் சம்பிரதாயமா, வாழ்த்துக்களைத் தெரிவிச்ச மோடி, தமிழக பா.ஜ.க. பற்றி எனக்கு வர்ற ரிப்போர்ட் சரியா இல்லை. தேர்தல்ல சரியா வேலை பார்க்காததோடு, இங்கிருந்து அனுப்பிய தேர்தல் நிதியிலும் கைவச்சி, கட்சியைப் படுதோல்வியில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கீங்கன்னு கடுமையாக டோஸ் விட்டுட்டு, நட்டாவை பார்க்கச் சொல்லியிருக்காரு.''’’
""ம்...''’’
""மோடிகிட்ட விடைபெறும்போது, தி.மு.க ஆட்சியில் மத்திய அரசை ஒன்றிய அரசுன்னு சொல்வதையும், கவர்னர் உரையில் ’ஜெய்ஹிந்த்’ விடுபட்டதையும், தடுப்பூசி பற்றாக்குறைக்கு பா.ஜ.க. அரசுதான் காரணம்னு பழி போடுவதாகவும், பெரிய புகார் பட்டியலையே மோடியிடம் வாசிச்சாங்க. மற்ற புகார்களுக்கு பதில் சொல்லாத மோடி, டெல்லி அனுப்பும் தடுப்பூசிகளை, பல மாநிலங்கள் வீணாக்குதுன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லியிருக்கார்.''’’
""ஜே.பி. நட்டாவை சந்திச்சபோது என்ன நடந்ததாம்?''’’
""நட்டாவுடனான சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளரான சுதாகர் ரெட்டியும் இருந்திருக்காரு. தேர்தலுக்காக தமிழகத்துக்கு கொடுக்கப்பட்ட 500 கோடியில் ஏகப்பட்ட கரப்ஷன் நடந்திருக்குன் னும், தேர்தலில் அக்கறையான உழைப்பை யாரும் காட்டலைன்னும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக் காரு நட்டா. அ.தி.மு.க.விடம் 60 சீட்டுகள் வாங்கச் சொன்னீங் களே, வாங்கிய 20 சீட்டில் பாதிக்குப் பாதி இடத்தைக் கூட உங்களால் பிடிக்கமுடியலையேன் னும் காட்டத்தைக் காட்டியிருக்காரு. கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. சரியா எங்களுக்கு ஒத்துழைப்பு தரலைன்னு முருகன் சொன்னதில் நட்டா சமாதானமாகலை. தி.மு.க ஆட்சியை விமர்சிக்கும்போது ஆதாரத்தோடு பேசுங்க. ஏனோ தானோன்னு செயல்பட வேண்டாம்னும் நட்டா சொல்லியிருக்காரு. பிறகு சுதாகர் ரெட்டியிடம் ஆலோசித்த நட்டா, தமிழக பா.ஜ.க. பற்றி வரும் புகார்கள் குறித்து வருத்தப்பட்டிருக்கார். அதனால், தமிழக பா.ஜ.க.வில் விரைவில் பல மாற்றங்கள் நடக்கலாம்னு கமலாலய வட்டாரம் சொல்லுது.''’’
""என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.''’’
""தலைவரே. சென்னைவாசியாக இருந்த திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான இனிகோ இருதயராஜூக்கு லோக்கல் அரசியல் எளிதா பிடிபடலையாம். திருச்சியின் அரசியல் ஜாம்பவானான சீனியர் அமைச்சர் கே.என்.நேரு, யாராக இருந்தாலும் உரிமையிலும் ஒருமையிலும் பேசக்கூடியவர். அது இனிகோவுக்கும் தெரியும். ஆனா அமைச்சர் கூட இருக்கிறவங்களும் அதே பாணியில் பேசுவதை வருத்தத்தோடு குறிப்பிட்டி ருக்காரு. திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான முகாம் விசிட், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு விளம்பரம் இப்படிப் பலவற்றிலும் திருச்சி கலெக்டர் தனக்கு ஒத்துழைக்கலைங்கிற அதிருப்தியையும் இனிகோ வெளிப்படுத்தியிருக்காரு.''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன்... அண்மையில் மனிதவள மேலாண்மைத் துறையின் துணைச் செயலாளரான ஸ்டீபன், தனக்குப் பிடிக்காத அதிகாரி களைப் பழி வாங்கிவருவது பற்றி நாம் பேசிக்கிட்டோம். இந்த செய்தி வெளி யானவுடனேயே, ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசு, அந்த அதி காரியை அதிரடியாக உள்துறைக்கு டிரான்ஸ்பர் செய்தது. தனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்துவிட்டதை அறிந்த ஸ்டீபன், அந்த நேரத்திலும் அவரது அத்துமீறலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த தலைமைச் செயலகத்தின் செக்ஷன் அலுவலர்களான சண்முகநாதன், சுசித்ரா, சந்திரசேனா, ராஜா, சிவகுருநாதன், குருமூர்த்தி ஆகிய ஆறுபேரையும், கிண்டியில் உள்ள லோக் ஆயுக்தாவுக்கு டிரான்ஸ்பர் செய்துட்டார். இதற்கான விதி எதையும் அவர் பின்பற்றவில்லை. இவர்களின் ஒர்க்கிங் பேட்டர்ன் வேறு, லோக் ஆயுக்தாவின் ஒர்க்கிங் பேட்டர்ன் வேறு என்பதால், டிரன்ஸ்பர் செய்யப்பட்ட அந்த 6 பேரும் செய்வதறியாது திகைத் துப்போயிருக்கிறார்கள்னு அதிகாரிகள் மட்டத்தில் சொல்றாங்க.''