Advertisment

சசி -ஓ.பி.எஸ்.சுக்கு டெல்லி ஆப்பு!

ops-amitsha-sasi

டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் அழைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரும் சசிகலாவும் சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். இப்பொழுது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை எடப்பாடி தயார் செய்துகொண்டிருக்கிறார். அந்த லிஸ்ட் சசிகலா கைக்குச் சென்றுவிட்டது. தொகுதிக்கு மூன்றுபேரை எடப்பாடி செலக்ட் செய்திருக்கிறார். அந்த மூன்று பேரிடமும் ஓ.பி.எஸ். தரப்பு ஆட்களை அனுப்பி பேசுகிறது. சாதாரணமாக நலம் விசாரிக்கும் அடிப்படை யில் தொடரும் அந்த உரையாடலில் "உங்களுக்கு சீட் கிடைக்கலைனா என்ன பண்ணுவீங்க?' என விரிகிறது. "சீட்டு கிடைக்கலைனா கவலைப் படாதீங்க. எடப்பாடி ஒரு தொகுதிக்கு 20 கோடி செலவு செய்றவங்களுக்குதான் சீட்' எனச் சொல்கிறார். நீங்க சுயேட்சையா போட்டி போடுங்க.. உங்களுக்கான செலவை நாங்க பாத்துக்கறோம், நாமினேஷன் போட்ட உடனேயே ‘லம்ப்பா ஒரு தொகை தரப்படும். நீங்க ரெண்டு வேல

டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் அழைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரும் சசிகலாவும் சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். இப்பொழுது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை எடப்பாடி தயார் செய்துகொண்டிருக்கிறார். அந்த லிஸ்ட் சசிகலா கைக்குச் சென்றுவிட்டது. தொகுதிக்கு மூன்றுபேரை எடப்பாடி செலக்ட் செய்திருக்கிறார். அந்த மூன்று பேரிடமும் ஓ.பி.எஸ். தரப்பு ஆட்களை அனுப்பி பேசுகிறது. சாதாரணமாக நலம் விசாரிக்கும் அடிப்படை யில் தொடரும் அந்த உரையாடலில் "உங்களுக்கு சீட் கிடைக்கலைனா என்ன பண்ணுவீங்க?' என விரிகிறது. "சீட்டு கிடைக்கலைனா கவலைப் படாதீங்க. எடப்பாடி ஒரு தொகுதிக்கு 20 கோடி செலவு செய்றவங்களுக்குதான் சீட்' எனச் சொல்கிறார். நீங்க சுயேட்சையா போட்டி போடுங்க.. உங்களுக்கான செலவை நாங்க பாத்துக்கறோம், நாமினேஷன் போட்ட உடனேயே ‘லம்ப்பா ஒரு தொகை தரப்படும். நீங்க ரெண்டு வேலை செய்யணும். ஒண்ணு உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கேட்டு நாங்க விண்ணப்பிப்போம். அதுல கையெழுத்து போடணும். ரெண்டா வது எடப்பாடி நிக்க வைக்குற வேட்பாளரை தோற்கடிக்க வைக்க எல்லா வேலையும் பாக்கணும். எங்ககிட்ட ஆயிரக்கணக்கான கோடி பணம் இருக்கு. இந்தத் தேர்தல்ல எடப்பாடி ஜெயிக்கக்கூடாது. அதுதான் எங்க அஸைன்மெண்ட்”என தேர்தலில் சீட்டுக் கேட்டு விண்ணப்பித்த அனைத்து அ.தி. மு.க.வினரிடமும் சசிகலா குரூப் ஓ.பி.எஸ். மூலம் நடத்தும் உரையாடல் பதிவாகி யுள்ளது. இதை அப்படியே ஆடியோ மற்றும் வீடியோ டேப்புக்களுடன் டெல்லிக்கு அனுப்பிவைத்து விட்டது எடப்பாடி தரப்பு. 

Advertisment

ops-amitsha-sasi1

“இந்தத் தேர்தலில் பணத்தை செலவு செய்து அ.தி.மு.க.வை தோற்கடிப்பதுடன், சசிகலா தரப்பிடம் ஒத்துவரும் நபர்களை வைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கு வதுதான் சசிகலாவின் திட்டம்.  தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுவிடுவார். அதற்குப்பிறகு அவரை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா, முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ். என்பதுதான் சசிகலாவின் திட்டம். தனக்கு செல்வாக்குள்ள நாற்பது தொகுதிகளில் நிச்சயம் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வை தோற்கடிப் பேன் என சசிகலா திட்டமிட்டு கலகம் செய்வதாக அமித்ஷாவிடம் சொல்லியுள்ளார் எடப்பாடி. மேலும்  ஜெ. காலத்திலேயே சசிகலாவும் நடராஜனும் அதிகாரத்திற்கு வர முயற்சி செய்தார்கள். ஜெயலலிதாவை ஒரு பொம்மையாகவே இருவரும் வைத்திருந்தாலும் இவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர ஜெயலலிதா விரும்பவில்லை. அதில் அவர் மிகத்தெளிவாக இருந்தார். அதனால் ‘ஜெ.’சிறைக்குப் போனதும் அவர்களது சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஜெ.வின் மறைவிற்குப் பிறகு அவரது வீட்டிற்கு எதிரே ஜெயலலிதா மாளிகை என பெரிய வீடுகட்டி சசிகலா வாழ்கிறார் என்றாலும் சசியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் யாரும் எட்டிகூடப் பார்ப்ப தில்லை. இதுதான் சசிகலாவின் நிலை”என்று அமித்ஷாவிடம் புலம்பியுள்ளார் எடப்பாடி. 

Advertisment

மேலும், முக்குலத்தோர் மத்தியில் சசிகலாவையும், ஓ.பி.எஸ்.ஸையும் மதிக் கிறார்கள். அவர்களுக்கென ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அதைப் பயன்படுத்தி அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிக்க இருவரும் சேர்ந்து முயற்சிசெய்கிறார்கள். ஏற்கெனவே அ..மலை கூட்டணிக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வில் தனது ஆதரவாளர்களை செயலிழக்க வைத்துள்ளார்.  இப்பொழுது அ..மலையும் இவர்களது கூட்டணியில் சேர்ந்துள்ளார். அ..மலை, ஓ.பி.எஸ்., சசிகலா மூவரும் அமைத்துள்ள கூட்டணி அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கும் கொடிய நோயைப்போல இம்மூவரின் செயல்பாடுகளும் அமைந்துள் ளது’என எடப்பாடி சொன்ன சொற்களைக் கேட்டு டெல்லி அதிர்ந்து போயிருக்கிறது. 

இதன் விளைவாக சசிகலாவை பழைய வழக்குகளில் சிறைக்கு அனுப்பலாம் என டெல்லி யோசித்துக் கொண்டிருக்கிறது. “ஓ.பி.எஸ்.ஸை டெல்லிக்கு கூப்பிட்டிருக்கும் அமித்ஷா, ஓ.பி.எஸ். மகன் மேல் உள்ள பழைய வழக்குகளை தூசிதட்டி எடுத்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்பு ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் சேர்க்க எடப்பாடி ‘ஓ.கே.’ சொல்லியிருந்தார். அவருக்கு அவைத்     தலைவர் பதவி, அவரது ஆதரவாளர்களுக்கு 10 சீட் என அனைத்தும் தயாராக இருந்தது. அதற்கு பா.ஜ.க.வும் ஓகே சொல்லியிருந்தது. ஆனால் சசிகலாவோ, ‘என்னை சேர்க்காமல் உன்னை மட்டும் சேர்ப்பதா’என எடப் பாடியின் அந்த முயற்சிக்கு தடை விதித்து விட்டார். இப்பொழுது ஓ.பி.எஸ்.ஸை சேர்த்துக்கொண்டு அ.தி.மு.க. கூட்டணியை கபளீகரம் செய்யத் தயாராகிவிட்டார் சசிகலா. 

சசிகலாவின் இந்த போர்க் கோலத்தை டெல்லி விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.ஸை கூப்பிட்டு "நீ தனியாக கட்சி ஆரம்பித்து நான்கு சீட்டுகள், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வேண்டும். இல்லை யென்றால் உன்னையும் உன் மகனையும் திகார் சிறைக்கு அனுப்பி விடு வோம்' என மிரட்டி யுள்ளது. எனவே, "சசிகலா மேல் வழக்கு கள் பாயும், ஓ.பி.எஸ். ஒடுக்கப்படுவார்'’என்கிறது டெல்லி வட்டாரங்கள். 

nkn110226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe