Advertisment

சசி தூதுவர் விஜயசாந்தி! பா.ஜ.க. டீல்! கவர்னர் பதவி கேட்கும் மாஜி!

vv

அ.தி.மு.க.வில் நுழைய முடியாமல் தவிக்கும் சசிகலாவிடம் நம்பிக்கையான பேரத்தைத் துவக்கி யிருக்கிறது பா.ஜ.க. இதற்காக கடந்த வாரம் சசிகலாவை ரகசியமாகச் சந்தித் திருக்கிறார் நடிகை விஜயசாந்தி.

Advertisment

டெல்லியின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் நுழைய முடியாது என உணர்ந்த சசிகலா, டெல்லியின் ஆதரவுக்காக தவமிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்த நடிகை விஜயசாந்தியிடம் பா.ஜ.க. தலைமையை பற்றிய தனது மனக் குமுறல்களைக் கொட்டியிருந்த சசி, ’அமித்ஷாவை சந்திக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருந்தார்.

Advertisment

bb

அப்போது, ‘"நம்பிக்கையுடன் இருங்கள். அமித்ஷாஜியிடம் நான் பேசுகிறேன். நல்லது நடக்கும்''’என்பதை மட்டும் சொல்லிவிட்டு டெல்லிக்குப் பறந்தார் விஜயசாந்தி. ஆனால், அவரிடமிருந்து பாசிட்டிவான எந்த பதிலும் சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த வார

அ.தி.மு.க.வில் நுழைய முடியாமல் தவிக்கும் சசிகலாவிடம் நம்பிக்கையான பேரத்தைத் துவக்கி யிருக்கிறது பா.ஜ.க. இதற்காக கடந்த வாரம் சசிகலாவை ரகசியமாகச் சந்தித் திருக்கிறார் நடிகை விஜயசாந்தி.

Advertisment

டெல்லியின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் நுழைய முடியாது என உணர்ந்த சசிகலா, டெல்லியின் ஆதரவுக்காக தவமிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்த நடிகை விஜயசாந்தியிடம் பா.ஜ.க. தலைமையை பற்றிய தனது மனக் குமுறல்களைக் கொட்டியிருந்த சசி, ’அமித்ஷாவை சந்திக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருந்தார்.

Advertisment

bb

அப்போது, ‘"நம்பிக்கையுடன் இருங்கள். அமித்ஷாஜியிடம் நான் பேசுகிறேன். நல்லது நடக்கும்''’என்பதை மட்டும் சொல்லிவிட்டு டெல்லிக்குப் பறந்தார் விஜயசாந்தி. ஆனால், அவரிடமிருந்து பாசிட்டிவான எந்த பதிலும் சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த வாரம் சென்னையில் சசிகலாவை சந்தித்துள்ளார் விஜயசாந்தி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா தரப்பு,”டெல்லியை தொடர்பு கொள்ள சின்னம்மாவுக்கு இருந்த சோர்ஸ்களெல்லாம் அவருக்கு உதவ முடியாமல் இருக்கின்றன. இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு உதவ முன்வந்தார் விஜயசாந்தி. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, "உங்களை சந்திக்க அவர் (சசிகலா) 20 நிமிடம் நேரம் கேட்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கிறார். அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள்'’ என கேட்டுள்ளார் விஜயசாந்தி.

ஆனால், அமித்ஷாவோ, "என்னிடம் சொல்ல நினைப்பதை உங்கள் (விஜயசாந்தி) மூலமாகவே அவர் (சசிகலா) சொல்லட்டுமே! எதற்கு சந்திப்பெல்லாம்? தேவையற்ற செய்தி கள் பரவும்' என சொல்லி அப்பாயிண்ட் மெண்ட் கொடுப்பதை தவிர்த்தார். இதனால் அப்செட்டானார் சின்னம்மா. மேலும், டெல்லிக்கு செல்ல முடியும்கிறதையே மறந்துபோனார்.

இருப்பினும் சின்னம்மாவின் தொடர்பில் இருந்து வரும் விஜயசாந்தி, அவருக்காக பா.ஜ.க. தலைமையிடம் முயற்சிகளை எடுத்தபடி இருந்தார். இந்த நிலையில்தான், ஒரு வாரத்திற்கு முன்பு சின்னம்மாவை மீண்டும் சந்திக்க வந்தார் விஜயசாந்தி. அந்த சந்திப்பில், சசிகலாவுக்கு உதவ பா.ஜ.க. பாசிட்டிவ் சிக்னல் தந்திருப்பதாக கூறிய விஜயசாந்தி, பா.ஜ.க.வின் சில எதிர்பார்ப்புகளை தெரிவித்திருக்கிறார். அதற்கு சின்னம்மாவோ, ’எல்லாம்தான் முடக்கப்பட்டு கிடக்கிறதே. நான் எப்படி எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்? தினசரி செலவினங்களை சமாளிக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கேன்'' என சொல்லிவிட்டார்.

ஆனால், விஜயசாந்தியோ, "நீங்க நினைப் பது நடக்க வேண்டுமானால் டெல்லியின் எதிர்பார்ப்புகளுக்கு ஓ.கே. சொன்னால் மட்டுமே சாத்தியமாகும். அதனால் இதில் நீங்கள்தான் இனி முடிவெடுக்க வேண்டும்' என சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். கடந்த சில நாட்களாக இதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா''’என்று சந்திப்பில் நடந்ததை விவரிக்கின்றனர்.

இந்த சந்திப்பு ஒருபுறமிருக்க, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பா.ஜ.க. தலைவரை சந்தித்த சம்பவம் ஒன்றும் அ.தி.மு.க. அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

vv

கடலூர் மாவட்ட அ.தி.மு.க.வில் கோலோச்சிய சம்பத், சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அமைதியாக இருந்தார். மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க. வன்னியர் தலைவர்களே தன்னை தோற்கடித்து விட்டதாக நொந்துபோனார். இதனால் கட்சி நிகழ்வுகளில் அவ்வளவாக ஆர்வமில்லாதவராக இருந்தார் சம்பத்.

இந்த நிலையில்தான் வடதமிழகத்தில் வன்னியர் சமூக ஆதரவுடன் வளரத் துடிக்கும் பா.ஜ.க., வன்னியர் தலைவர்களை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் செயல் திட்டத்தை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் பா.ஜ.க. தலைமைக்கு நெருக்கமான ’வாழும்கலை’ ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ஒரு ஆன்மீக நிகழ்ச்சிக்கு எம்.சி.சம்பத் உள்ளிட்ட வன்னியர் சமூக வி.வி.ஐ.பி.க்கள் சிலர் சென்று வந்தனர். அந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.விற்கான அரசியலை வன்னியர் வி.வி.ஐ.பி.க்களிடம் விவரித்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.

இதனையடுத்து சமீபத்தில் டெல்லிக்கு சென்ற எம்.சி.சம்பத், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கோலோச்சும் ஒரு முந்திரி வியாபார தொழிலதிபர்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

நட்டா -சம்பத் சந்திப்பில், பா.ஜ.க.வில் இணையச் சொல்லி சம்பத்திடம் கேட்கப் பட்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வுக்கு நான் வந்தால் தனக்கான பொசிஷன் என்ன என்பதை சம்பத் கேட்டதாக சொல்லப் படுகிறது. குறிப்பாக, பாண்டிச்சேரி கவர்னர் பதவி கொடுக்க முடியுமா? என்று சம்பத் கோரிக்கை வைத்ததாகவும், அதைக் கேட்டு நட்டா அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றும் அ.தி.மு.க. தரப்பில் சொல்கின்றனர்.

nkn280522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe