ளும் பா.ஜ.க.வுக்கும் சசிகலாவுக்கும் இடையேயான யுத்தம் இன்னும் ஓய்ந்துவிட வில்லை. மறுபடியும் சசிகலாவை சிறைக்கு அனுப்ப பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதைத் தடுக்க சசிகலா போராடுகிறார் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

சசிகலாவுக்கு எதிரான இந்த வழக்கு மிகவும் சீரியஸானது. அதனால்தான் சசிகலா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு ஒருவாரம் முன்பே வழக்கறிஞர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத் தார். எப்படியாவது நான் நீதிமன்றத்திற்கு வருவதை தடுத்துவிடுங்கள் என்கிற சசிகலாவின் கட்டளையை வழக்கறிஞர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

sasi

Advertisment

அதற்கொரு சுவையான பின்னணிக் காரணமும் இருக்கிறது. நீதிபதி லட்சுமி நாராயண பட். இவர் ஜெ.வுக்கும் சசிக்கும் நான்கு ஆண்டுகள் தண்டனை கொடுத்த குன்ஹாவின் நெருங்கிய நண்ப ராக நீதித்துறையில் பயிற்சி பெற்றவர். இவரிடம் சசிகலாவின் வழக்கறிஞர்கள், சசிகலா நீதிமன்றத் தில் ஆஜராகாமல் முன்ஜாமீன் கொடுங்கள் என கேட்க... சசிகலாவுக்கென தனி சலுகைகள் காட்ட முடியாது. இது ஊழல் தடுப்புச் சட்ட 13(1) சி, 12 (2) அடிப்படையில் சிறையில் சலுகைகள் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு. இது மிகவும் சீரியஸானது என குன்ஹாவின் ஸ்டைலில் பதிலளித்தார்.

நீதிபதியின் இந்த அதிரடி, சசிகலாவை அதிர வைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் முன்பு பக்தி சிரத்தையோடு ஆஜராவதைப் போல் மார்ச் 11-ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்றத்துக்கு வெளியே போடப்பட்ட பெஞ்ச்சில் சசியும் இளவரசியும் அமர்ந்தார்கள். இருவருக்கும் சுமார் 6 லட்ச ரூபாய் கட்டி முன்ஜாமீன் பெற நீதிபதி அனுமதி அளித்த உத்தரவு வந்தது. சசிகலாவுக்காக கர்நாடக மாநில அ.தி.மு.க. பிரமுகர்கள் 6 லட்ச ரூபாய் கட்ட பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தார் சசிகலா என சசிகலாவின் நீதிமன்ற ஆஜர் காட்சி களைச் சொல்கிறார்கள் கோர்ட் ஊழியர்கள்.

கோர்ட்டிலிருந்து வெளியே வந்த சசிகலா, அந்த பதட்டத்தைத் தீர்க்க பெங்களூருவைச் சுற்றியிருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு சென்னைக்குச் சென்றார். சசிகலாவின் பதட்டத்திற்கு இன்னொரு காரண மும் இருக்கிறது. அது அரசியல் ரீதியிலானது.

sasi

Advertisment

எப்படியாவது சசிக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். இந்த வழக்கை காரணம் காட்டி அரசியல் ரீதியாக செக் வைக்கலாம் என பா.ஜ.க. நினைக்கிறது என சசிகலா சந்தேகப்படுகிறார். சிறையில் இருக்கும்போது அங்கு சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா, சசிகலா சிறையில் தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஆடைகளை அணியாமல் சுடிதார் போட்டுக் கொண்டு இளவரசியுடன் சிறைக்கு வெளியே செல்லும் வீடியோ காட்சிகளை வெளி யிட்டார். அப்பொழுது சிறைத்துறைக்கு பொறுப் பாளரான டி.ஜி.பி. சத்யநாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. அவரது உத்தர வின் அடிப்படையில் சிறை சூப்பிரெண்டெண்ட் ஆக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, சிறைக்காவலர்கள் சுரேஷ், கஜராஜ் ஆகியோர் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்தனர்.

நான்கு வருடங்கள் சிறையில்... 5 தனி ரூம்கள், டி.வி. வசதி, சமையல் செய்ய தனி கிச்சன் மற்றும் சமையல்காரர் உதவியுடன் சசிகலாவும் இளவரசி யும் கடந்து வந்தார்கள் என ரூபா கொடுத்த ரிப் போர்ட்டை கர்நாடக ஊழல் கட்டுப்பாட்டுத்துறை மதிக்கவே இல்லை. ரூபாவை சிறைத்துறையிலிருந்து டிரான்ஸ்பர் செய்தார்கள்.

டி.ஜி.பி. சத்யநாராயணாவுக்கு ஓள்வு கொடுத்தார்கள். அவர், சசிகலா ஹைதராபாத்தில் வாங்கிக் கொடுத்த பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ரூபா ஆர்.டி.ஐ. மூலம் எனது ரிப்போர்ட் என்ன ஆனது என கேட்டார். அது ஆதாரமில்லை என முடித்து வைக்கப்பட்டது. டென்ஷனான ரூபா, பா.ஜ.க.வை தொடர்புகொண்டு இது என்ன நியாயம் என கேட்டார். ரூபா பா.ஜ.க. ஆதர வாளர். பா.ஜ.க. ரியாக்ட் செய்வதற்குள் எடப்பாடி களத்தில் குதித்தார். ஜெ.வின் நெருங்கிய நண்பரான கீதா மூலம் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில் பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசை பின்னியெடுக்க, சசிகலா மீது பிடி இறுகுகிறது என்கிறார்கள் கர்நாடக அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

eps

இந்த வழக்கில் டி.ஜி.பி.யான சத்யநாராயணா மீது வழக்குத் தொடர கர்நாடக அரசு அனுமதி தரவில்லை. அத்துடன் இதில் தாக்கல் செய்யப் பட்ட குற்றப்பத்திரிகையும் தெளிவாக இல்லை என்பதெல்லாம் சசிகலா வுக்கு சாதகமான அம்சங் கள் என்கிறார்கள் சசிகலா வின் வழக்கறிஞர்கள். அதையெல்லாம் மீறி கோகுல்ராஜ் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தபடி குற்றம் நடந்ததற்கான ஒரே முக்கிய ஆதாரமான, சசிகலா சாதாரண உடையில் வெளியே போய் விட்டு சிறைக்குள் நுழையும் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்தே சசிக்கு தண்டனையை குன்ஹா பாணியில் நீதிபதி லட்சுமி நாராயணபட் அளிக்கலாம் என்கிறார்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள்.

இப்படி ஒருபக்கம் கர்நாடக வழக்கை வைத்து பா.ஜ.க., எடப்பாடி ஆகியோர் விளை யாடினாலும் சசி தனது அரசியல் அசைவுகளை விடவில்லை.

அ.தி.மு.க.வில் கிளைக் கழகத் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டார் எடப்பாடி. அடுத்தது ஒன்றிய, நகர மாவட்ட கழகத் தேர்தல்கள். அது முடிந்ததும் நேராக பொதுக்குழுதான். பொதுக் குழுவில் தென்மாவட்ட அமைச்சர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பிரச்சினை களைக் கிளப்பி, அ.தி.மு.க.வில் இணைய திட்டமிட்டிருந்தார் சசிகலா. அதற்காக பணத்தை செலவு செய்ய இப்பொழுதே நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார். ஓ.பி.எஸ். ஒத்துழைப்போடு நடைபெறும் இந்த ஆபரேஷனில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவிலிருக்கிறார் சசி கலா என்பதை தெரிந்து கொண்ட எடப்பாடி, கட் சித் தேர்தலைச் தள்ளிப் போடுகிறார். எங்களுக்கு கட்சித் தேர்தல் வேண் டும் என்கிற அ.தி.மு.க. வினர் நிர்பந்தமும், கட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்கிற தேர்தல் கமிஷன் நிர்பந்த மும் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.