காங்கிரஸுக்கு சரிதா நாயர்! கம்யூனிஸ்டுக்கு பார் டான்ஸர்! -கேரள ஆளும்கட்சி படும்பாடு!

kk

கேரளத்தில் "சோலார் பேனல்' சரிதா நாயர் காங்கிரஸின் கௌரவத்துக்கு இழுக்குச் சேர்த்தார். தற்சமயம் பீகாரைச் சேர்ந்த பார் டான்ஸர் ஒருவர் கம்யூனிஸ்டுக்கு கொடுங்கனவாய் மாறிவருகிறார். பார் டான்ஸருக்கும் கேரள கம்யூனிஸ்டு கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்கி றீர்களா?

ss

கேரளாவில் ஆளும் சி.பி.எம். பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து துவண்டுகிடக்கும் நிலையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பால கிருஷ்ணன் மகன் பினோய் கொடியேறி பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக கேரள சி.பி.எம். மாநிலச் செயலாளராக இருந்துவருகிறார் கொடியேறி பாலகிருஷ்ணன். அந்தக் கட்சியில் முதல்வரைவிட மாநிலச் செயலாளர் பதவிதான் பவர்புல்லானது. கொடியேறி பாலகிருஷ்ணன் அகில இந்தியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட்பீரோ பிருந்தாகாரத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இவருடைய மூத்த

கேரளத்தில் "சோலார் பேனல்' சரிதா நாயர் காங்கிரஸின் கௌரவத்துக்கு இழுக்குச் சேர்த்தார். தற்சமயம் பீகாரைச் சேர்ந்த பார் டான்ஸர் ஒருவர் கம்யூனிஸ்டுக்கு கொடுங்கனவாய் மாறிவருகிறார். பார் டான்ஸருக்கும் கேரள கம்யூனிஸ்டு கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்கி றீர்களா?

ss

கேரளாவில் ஆளும் சி.பி.எம். பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து துவண்டுகிடக்கும் நிலையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பால கிருஷ்ணன் மகன் பினோய் கொடியேறி பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக கேரள சி.பி.எம். மாநிலச் செயலாளராக இருந்துவருகிறார் கொடியேறி பாலகிருஷ்ணன். அந்தக் கட்சியில் முதல்வரைவிட மாநிலச் செயலாளர் பதவிதான் பவர்புல்லானது. கொடியேறி பாலகிருஷ்ணன் அகில இந்தியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட்பீரோ பிருந்தாகாரத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இவருடைய மூத்த மகன் பினோய் கொடியேறி (37) துபாயில் 13 ஆண்டுகளாக தொழில் நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் பல நிறுவனங்களில் பங்குதாரராகவும் உள்ளார்

இந்த நிலையில்தான் பீகாரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர், "பினோய் கொடியேறி நான் துபாயில் பார் டான்ஸராக இருக்கும்போது எனக்கு அறிமுகமானார். என்னைத்ss திருமணம் செய்வதாகக் கூறி பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் மூலம் எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு தற்போது 8 வயதாகிறது. ஊரறிய திருமணம் செய்துகொள்வதாக காலம் கடத்திவந்த அவர் தற்போது விட்டு விலகிவிடும்படி மிரட்டுகிறார்'’’ என மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது கேரள கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகாரைத் தொடர்ந்து பினோய் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் ஒரு மோசடி வழக்கில் 2 மாதம் துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் துபாயில் ஹசன் அப்துல்லா நிறுவனத்திடமிருந்து 12 கோடி ருபாய் மோசடி செய்ததை அந்த நிறுவனம் சீதாராம் யெச்சூரி வரை கொண்டுசென்றது. உடனே அந்த பணத்தைத் திரும்பத் தருவதாக கொடியேறி பாலகிருஷ்ணன் உறுதியளித்தும் அந்த பணத்தைக் கொடுக்க வில்லையாம். மேலும் கிரிமினல் வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளதாம்.

இந்நிலையில் பாலியல் புகார்கொடுத்திருக்கும் அந்த பெண், பினோய்க்கும் தனக்கும் இருந்த தொடர்பை ஆதாரத்துடன் விவரித்தார். “""பாரில் டான்ஸராக இருக்கும்போது 2009-ல் நண்பர் ஒருவர் என்னிடம் பினோய் கொடியேறியை அறிமுகப் படுத்தினார். அதன்பிறகு அவர் வரும்போதெல்லாம் என்மீது பண மழை பொழிவார். வலிந்து என்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்திய பினோய், என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

அவர் கேட்டுக்கொண்டதால் பார் டான்ஸர் வேலையை விட்டேன். 2009 அக். 18-ல் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய பெயரையும் இந்துப் பெயராக மாற்றினேன். 2010 ஜூலை 25-ல் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. மும்பை அந்தேரியா வெஸ்ட் ஓஷிவாரா மீரா டவரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைத்தார்.

2009-ல் இருந்து 2018 வரை என்னுடன் தொடர்பிலிருந்த பினோய் கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தார். இந்தக் குழந்தை அவருடையது இல்லை என்கிறார். இது அவருடைய குழந்தையென்று நிரூபிக்க தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

kkபினோய் மீதுள்ள புகார் குறித்து கேரளா பா.ஜ.க.வினரிடம் பேசியபோது, ""நெருப்பு இல்லாமல் புகையாது. பினோய்க்கு பாரில் டான்ஸ் ஆடும் பெண்ணிடம் மட்டுமல்ல... இன்னும் பல பெண்களிடமும் தொடர்புண்டு. ஏற்கனவே துபாயில் கலை நிகழ்ச்சிக்கு செல்லும் மலையாள நடிகைகள் சிலரை விருந்துக்கு அழைத்து பாலியல்ரீதியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டு அவர்மீது வந்தபோது அரசியல் பலத்தால் அந்த நடிகைகளை மிரட்டியிருக்கிறார். பினோய் தற்போது கேரள அரசின் பாதுகாப்போடு சொகுசாக இருக்கிறார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.

உம்மன்சாண்டியின் மகன் சாண்டி உம்மன் மீது சரிதாநாயர் பாலியல் புகார்கூறிய போது அப்போது கம்யூனிஸ்ட்டுகள் வாய் திறக்கவேயில்லை. "இது பரஸ்பர விட்டுக்கொடுத்தல்'' என்றனர். இது குறித்து சி.பி.எம். செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் நாம் கேட்ட போது... ""மும்பை போலீசார் முன் பினோய் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக உள்ளார். இது பொய்ப் புகார். பணம் பறிக்க அந்தப் பெண் நடத்தும் நாடகம். இதுசம்பந்தமாக கண்ணூர் மாவட்ட எஸ்.பி.யிடம் பினோய் புகார் கொடுத்திருக்கிறார்''’என்றார்.

கட்சித் தலைவரின் மகன்மீது காவல் நிலையத்தில் பதிவாகியிருக்கும் பாலியல் புகார் காம்ரேடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

-மணிகண்டன்

nkn020719
இதையும் படியுங்கள்
Subscribe