அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம், 27ஆம் தேதி கன்னியாகுமரி இரவிபுதூரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, “"ஜெய லலிதா இறப்பதற்கு காரணமே சசிகலாதான். ஊழலுக்கு காரணமான சசிகலா பல லட்சம் கோடி சொத்துக்களை சேர்த்துவிட்டு இப் போது அம்மாவின் பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அம்மாவின் வீட்டில் வேலைக்காரியாக இருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறாரென்றால் எவ்வளவு பணம் இருக்கும் பாருங்கள்''’என்று பேசியது சசிகலா தரப்பினரை கொதிப்படைய வைத்தது.

Advertisment

இந்நிலையில், தளவாய்சுந்தரம் பேசிய ஒருமணி நேரத்தில் சசிகலாவுக்கு நெருங்கிய ஆதரவாளராகக் கூறப் படும் மதுரையைச் சேர்ந்த ஒரு நபர், தளவாய்சுந்தரத்தை போனில் தொடர்பு கொண்டு திட்டிய தோடு, தளவாய் சுந்தரத்தை மன்னிப்பும் கேட்கவைத்த ஆடியோ லீக்காகி அ.தி.மு.க. வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

Advertisment

தனக்கு சரியெனப் பட்டதை செய்யக்கூடிய துணிச்சலானவர் தளவாய்சுந்தரம் என்று பெயரெடுத்த நிலையில், மன்னிப்புக்கேட்ட இந்த ஆடியோ விவகாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள் ளது. அந்த ஆடியோ உரையாடல் இதோ....

தளவாய்: “சசிகலாவை பற்றி நான் பேசியதை மட்டும் தான் கேட்கிறீங்க’.

அந்த நபர்: “தமிழ்நாட்டுல சின்னம்மாவை பற்றி யார் பேசினாலும் கேட்பேன்”

தளவாய்: “முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசனும் பேசியிருக்காங்களே?”.

அந்த நபர்: “அவனுங்க சின்னம்மாகிட்ட நாய் போல் வந்து கிடந்து பதவியை வாங்கிட்டு போனவங்க’.

Advertisment

தளவாய்: “ஓ.பி.எஸ். நேற்றும் பேசினார்.

அந்த நபர்: “அந்த களவாணிப் பையன் பேசினான், பேசல... நீ பேசலாமா?”

தளவாய்: “இனி நான் பேச மாட்டேன்னு சொல்லியாச்சி இல்லையா? என் மீது நம்பிக்கை இல்லையா?”

அந்த நபர்: “நீ இனிமேல் சின்னம்மா பற்றியோ அந்த குடும்பத்தை பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற சொல்லிட்டேன்”

தளவாய்: “சரி, அதை ஞாபகத்துல வச்சிருக்கேன்”

அந்த நபர்: “இதுக்கு நீ எப்ப மறுப்பு தெரிவிப்பாய்?”

தளவாய்: “நான் மறுப்பு தெரிவிச்சாலும் 

நான் பேசினதை எந்த பத்திரிகை யிலும் எழுத மாட்டாங்க”

அந்த நபர்: “இருந்தாலும் நீ மறுப்பு தெரிவிச்சே ஆகணும். சின்னம்மா இல்லையின்னா நீ யாரு? அந்த குடும்பம் இல்லையின்னா நீ யாரு? சொல்லு. சின்னம்மாவை பற்றி பேசினதிலிருந்து ஒவ்வொருத்தனும் கொந்தளிச்சிட்டிருக்கான்,… சொல்லிட்டேன்.”

தளவாய்: “சாரி தலைவரே, சாரி தலைவரே. கேளுங்க. இனிமேல் இந்த மாதிரி நான் பேசமாட்டேன். அதுக்கு இடமே இல்லை.

அந்த நபர்: “இதுதான் உனக்கு முதலும் கடைசியும்! உன் மனசுல நீ பேசியது தப்புன்னு ஒத்துக்கிட்டேன்னு சொல்லு, விட்டுடுறேன்”

தளவாய்: “சாரி ஒத்துக்கிட்டேன்... முதலும் கடைசியுமா இத எடுத்துர்றேன்.”

அந்த நபர்: “உனக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை. மனசாட்சிப்படி சொல்லு, நீ யாரை வச்சி பதவிக்கு வந்த?” 

தளவாய்: “என்னை விடு, நான் இனி நூற்றுக்கு நூறு சொல்லுறேன்,…அப்படி பேச மாட்டேன்.. மன்னிப்பு கேட்டுக்கறேன்.” 

அந்த நபர்: “தளவாய் அண்ணே, உன்னை உருவாக்கினது சின்னம்மா குடும்பம். ஓ.பி.எஸ். சின்னம்மாவுக்கு செய்த துரோகத்தினாலதான் அவர் அனுபவிக்கிறார். நீயும் சீக்கிரத்துக்குள்ளே அவனைப்போல் அனுபவிச்சிராத.”

தளவாய்: “அ.தி.மு.க.வில் இனிமேல் சசிகலா பற்றி யாராவது பேசினால் நானே முந்திக்கிட்டு யார் பேசினா, என்ன பேசினான்னு போன்போட்டு உங்ககிட்ட சொல்லுறேன்.”  

அந்த நபர்: “சொல்லணும்… நீ சொல்லணும். அப்பதான் நீ சோறு தின்னுறேன்னு அர்த்தம். சின்னம்மாவால் பதவிக்கு வந்தவங்க நீங்க. தென் மாவட்டத்துல சின்னம்மா இல்லாம பதவிக்கு வந்தோம்னு சொல்லுங்க பார்ப்போம். இனிமேல் இந்த மாதிரி வார்த்தை வந்திச்சின்னா நீங்க இனி எந்த மேடையும் ஏறமாட்டீங்க.”

இப்படி தளவாய்சுந்தரத்துக்கு எச்சரிக்கை விடுப்பதோடு முடியும் அந்த உரையாடல் ஆடியோ 4.13 நிமிடம் ஓடுகிறது. இந்த ஆடியோ வை கேட்ட தளவாய்சுந்தரத்தின் ஆதரவாளர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். மேலும், அ.தி.மு.க.வில் கெத்தாக இருப்பதோடு, குமரி மாவட்ட அரசியலில் கோலோச்சிக்கொண்டிருக்கும் தளவாய் சுந்தரத்தை சசிகலாவின் ஆதரவாளர் மிரட்டி, அவரை நடுநடுங்க வைக்கிறார் என்றால் இதில் ஏதோ ஒரு சமாச்சாரம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்கின்ற னர் விவரமறிந்த அ.தி.மு.க. புள்ளிகள்.

இதுகுறித்து தளவாய்சுந்தரத்திடம் நாம் பேச முயன்றபோது அவர் போன் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசும்போது... "தளவாய் அண்ணனுக்கு இப்ப ரெண்டு நாளாக மிரட்டல் தொனியில் பேசும் போன்கள் தான் வருது. அவர் தெரியாத எந்த எண்ணையும் எடுக்கல. அதனால தான் உங்க போனையும் அட்டன்ட் செய்திருக்கமாட்டார்''’என்றார். 

தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ஆடியோ வெளியாகி தளவாய் சுந்தரத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


____________
எழுத்தாளர் பொன்னீலனுக்கு கனவு இல்லம்!

thalavai-box

சாகித்ய அகா டமி விருதாளர்களுக்கு "கனவு இல்லம்' வழங்கும் திட்டப்படி, குமரி மாவட்டத்தை சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் பொன்னீல னுக்கு தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னீலன் எழுதிய "புதிய தரிசனங்கள்' என்ற நாவலுக்கு, 1994-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. விருதுபெற்று 

30 வருடங்களுக்குப் பிறகு எழுத்தாளரை பெருமைப்படுத்தும் வகையில் தி.மு.க. அரசு தற்போது வீடு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முழு முயற்சியையும் நக்கீரன் சார்பில் முன்நின்று செய்தோம்.

இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தின் நெருக் கடி, பாதிப்புக்களை அந்நாவலில் பதிவு செய்திருந்தார் பொன்னீலன். எமர்ஜென்ஸி கொடுமையின் சாட்சியாக, ஓராண்டுக்கு மேல் சிறையில் கடும் சித்ரவதைகளை அனுபவித்தவர் தற்போதைய தமிழக முதல்வர். அப்படிப்பட்ட தமிழக முதல்வரின் கரத்தால், கடந்த 4ஆம் தேதி காலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து எழுத்தாளர் பொன்னீலனுக்கு கனவு இல்லம் வழங்கும் அரசாணை வழங்கப்பட்டது. இதற்காக, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் முனைப்புடன் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.         

-ஜீவா