டெல்டாவை பாழடிக்கும் சரபங்கா! - எடப்பாடிமீது விவசாயிகள் கோபம்!

farmers

முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியை உள்ளடக்கிய சேலம் மாவட்டம் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள மேட்டூர் சரபங்கா திட்டத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமென விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

2020-ல் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பேசிய முதல்வர், ""மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், நீரேற்றத் திட்டத்தின் மூலம் சரபங்கா பகுதியிலுள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படும்'' என அறிவித்தார்.

farmers

""சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் வட்டங்கள் குடிநீருக்கு மழையை நம்பியே உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் கீழே சென்றுவிட்டது. ம

முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியை உள்ளடக்கிய சேலம் மாவட்டம் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள மேட்டூர் சரபங்கா திட்டத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமென விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

2020-ல் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பேசிய முதல்வர், ""மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், நீரேற்றத் திட்டத்தின் மூலம் சரபங்கா பகுதியிலுள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடப்படும்'' என அறிவித்தார்.

farmers

""சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் வட்டங்கள் குடிநீருக்கு மழையை நம்பியே உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் கீழே சென்றுவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை இப்பகுதிக்குத் திருப்பிவிடவேண்டும்'' என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து இத்திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது..

இரண்டு வருடமாகும் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு, தேர்தலை முன்னிட்டு அவசர அவசரமாக, பிப்ரவரி 26-அன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ 565 கோடி செலவில் உருவாகியுள்ள இத்திட்டத்தால் 31 ஏரிகள் நிரம்புவதோடு, 4238 "ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். 38 கிராமங்கள் குடிநீர் வசதிபெறும்' என தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம், டெல்டா பகுதி விவசாயிகள் இத்திட்டத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திட்டம் தொடங்கும்போது, "உபரி நீர் மட்டுமே சரபங்கா நீரேற்று திட்டத்தில் அனுப்பப்படும்' என்றனர். ஆனால் திட்டத் தொடக்க விழாவின்போது, மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டாத நிலையிலேயே நீரை பம்ப் செய்து சரபங்காவுக்கு அனுப்பினார்கள் என குற்றம்சாட்டுகிறன்றனர்.

farmers

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் நம்மிடம், ""இந்தத் திட்டமும், நீரைத் திறந்துவிடுதலும் அரசிதழில் இடம்பெற்று சட்டசபையில் விவாதித்தபிறகே நடைபெறவேண்டும். அப்போதுதான் அது சட்டபூர்வமாக நடைபெற்றதாக பொருள்கொள்ளப்படும். ஆனால் இப்போது எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் முதல்வரின் சொந்த ஆதாயத்துக்காக நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது'' என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், ""காவிரி நீர் காவேரி டெல்டா விவசாயிகளின் நலன்களுக்கானது. அதனை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் நலனுக்காகத் திறந்துவிடுவது 18 லட்சம் ஏக்கர் நிலத்தின் பாசனத்தைப் பாதிக்கும். தவிரவும் காவிரியை நம்பி 20 மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் குடிநீர்த்தேவையை நிறை வேற்றிக்கொள்கின்றனர். இதுபோல் அணைநிரம்பாத நிலையில் நீரேற்றினால் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விவசாயமும் குடிநீர்த் தேவையும் பாதிக்கப்படும்'' என்கிறார்.

மேலும் விவசாய சங்கங்கள் இந்த அத்துமீறலை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல முடிவுசெய்துள்ளன.

""குடிமராமத்து என்ற பெயரில் ஏற்கனவே டெண்டர் விட்டு, அரசுப் பணத்தை ஆளுந்தரப்பு காண்ட்ராக்டர்கள் மூலம் கொள்ளையடிச்சாங்க. பெரியளவில் எதுவும் நிறைவேறலை. டெல்டா மாவட்டத்துக்கு முதல்வர் விசிட் அடித்தபோது, அவசர அவசரமாக கொஞ்ச வேலைகளை முடிச்சாங்க. மத்ததெல்லாம் வெறும் கணக்குத்தான். அதேபோல இப்ப, சரபங்கா திட்டம் என்கிற பெயரில கடைசிநேர கமிஷனுக்காக என்னென்னமோ பண்றாரு எடப்பாடி. விவசாயின்னு சொல்லிக்கிட்டே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாழாக்குற முதல்வரை இப்பத்தான் பாக்குறோம்'' என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து முதல்வர் ஆதாயம் தேடப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

-க.சுப்பிரமணியன்

nkn100321
இதையும் படியுங்கள்
Subscribe