தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!  செவிசாய்க்குமா அரசு

cleaningstaff

 

சென்னை மாநகாரட்சியின்கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை தனியார்மயப்படுத்தும் தீர்மானத்தை கைவிடச்சொல்லியும், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்த பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப் படுத்தச் சொல்லியும், தூய்மைப் பணியாளர்கள் ஐந்து நாட்களுக்காக உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

 கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. அரசு சட்ட மன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சென்னையி லுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்குத் தாரைவார்த்தது. அதனை எதிர்த்து எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், அப்போதைய எதிர்க்கட்சி தலைவ ராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். 

அதே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 115 மற்றும் 152 என்ற இரண்டு அரசாணையைக் கொண்டுவந்து ஏற்கனவே சென்னை, கோவை மாவட்டங்களை மட்டுமே தூய்மைப் பணியாளர் களை தனியார்மயமாக்கிய நிலையில், சென்னையில் 5, 6 மண்டலங்களையும் அடுத்தகட்டமாக

 

சென்னை மாநகாரட்சியின்கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை தனியார்மயப்படுத்தும் தீர்மானத்தை கைவிடச்சொல்லியும், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்த பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப் படுத்தச் சொல்லியும், தூய்மைப் பணியாளர்கள் ஐந்து நாட்களுக்காக உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

 கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. அரசு சட்ட மன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சென்னையி லுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்குத் தாரைவார்த்தது. அதனை எதிர்த்து எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், அப்போதைய எதிர்க்கட்சி தலைவ ராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். 

அதே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 115 மற்றும் 152 என்ற இரண்டு அரசாணையைக் கொண்டுவந்து ஏற்கனவே சென்னை, கோவை மாவட்டங்களை மட்டுமே தூய்மைப் பணியாளர் களை தனியார்மயமாக்கிய நிலையில், சென்னையில் 5, 6 மண்டலங்களையும் அடுத்தகட்டமாக 4 மற்றும் 8 இரு மண்டலத்தையும் தனியார்மயமாக்கும் பணியில் மாநகராட்சி மும்முரம் காட்டிவருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் தனியார் மய மாக்குவதால், பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 2 லட்சம் தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தரக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. 

இதுபோன்று பல பிரச்சனைகளுக்கும் எல்.டி.யூ.சி. தொழிற்சங்கம் அரசையும், நீதிமன் றத்தை நாடி போராடிவருகிறது. ஏற்கனவே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவிருந்த மண்டலங்களையும் போராடி தடுத்துநிறுத்தி யுள்ளனர். மேலும், அடிப்படை ஊதியமாக மாதம் 19,598 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் தீர்ப்புபெற்றுள்ளது. தற்போதுவரை மாநகராட்சி யின்கீழ் இயங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ள மற்ற மண்டலங்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, 15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இவர்கள் வழங்கும் 15,000-லும் பி.எஃப் பிடித்தம் போக 12 ஆயிரம் மட்டுமே தருவதாகச் சொல்லப்படுகிறது. பி.எஃப் எடுப்பது      போல கணக்குக் காட்டி இந்த தனியார் நிறுவனமே அந்தத் தொகையை எடுத்துக் கொள்கிறதாம். மேல் விவரங்களைக் கேட் டால், அவர்களை வேலையில் இருக் கணுமா… வேண்டாமா… என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார் களாம்.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செய்த தவறை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக்காட்டி, தனியார் நிறுவனத் திடம் தூய்மைப் பணி களைக் கொடுப்பதை தடுத்துநிறுத்துவோம் என்றது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தூய்மைப் பணிகளை தனியார்மயப்படுத்த தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். 

மாறாக, அ.தி.மு.க. என்ன செய்ததோ, அதையே செய்துவருகிறார்கள். எனில் இரு கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு? எனவே இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்று சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள எல்.டி.யூ.சி. அலுவலகத்தின் முன்பாக ஜூலை 25-ஆம் தேதி முதல் பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங் முன்புறத்தில் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தின்போது 27.07.2025 தேதி அன்று இரவு மகாலட்சுமி என்பவரின் உடல்நிலை பாதிக்கப்பட, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகா லட்சுமி, குட்டியம்மா, ஜோதி, வசந்தி, அஷ்ரப்பேகம் ஆகியோரிடம் கேட்டபோது, "நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரு கிறோம். கொரோனா காலகட்டத்திலும், மழையிலும் வெயி லிலும் எங்கள் பணி நிற்பதில்லை. ஆனால் நாங்கள் எந்த வளர்ச்சி யும் அடையாமலே இருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 10 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நபர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொல்லப்பட்டது. அதை நம்பித்தான் நாங்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். அதை இதுநாள்வரை செய்யவில்லை,  மாறாக நாங்கள் பணிபுரியும் 5, 6 மண்டலங்களை தனியார் நிறுவனங் களிடம் ஒப்படைக்கத் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள். எங்கள் கோரிக் கைகளை நிறை வேற்றும்வரை போராட்டத்தைக் கைவிடமாட் டோம்''’என்றனர். 

இந்த நிலையில் தொழிலாளர் அரசு செகரெட்டரி வீரராகவன் ஒரு ஜி.ஓ. வெளியிட்டு, அதில் இவர்கள் பிரச்சனை தொழிலாளர் தீர்வாணையத்திற்கு அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடி அவர்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரியவருகிறது. 

-சே

________________________________________
பலியான தூய்மை பணியாளர்!

சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த முறை தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், சேலையூர் -வேளச் சேரி சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, அதிவேகமாக வந்த கார் ராணி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராணி, ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனில்லாமல் ஆகஸ்ட் 1ஆம் தேதி உயிரிழந்தார். ராணி, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தூய்மை பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், தாம்பரம் மாநக ராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கார் ஓட்டுநர் யோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.                       

 -கீரன்

nkn060825
இதையும் படியுங்கள்
Subscribe