"நான் படிச்ச படிப்புக்கு துப்புரவு வேலையைப் பார்க்க முடியுமா?''’
சமூக ஆர்வலர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சங்கரேஸ்வரன், சிவகாசி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளரான ஈஸ்வரி, அப்பணி மீதான வெறுப்பைத் தன்னிடம் இவ்வாறு வெளிப்படுத்தியதாக நம்மிடம் கூறினார்.
மேலும் அவர் "ஈஸ்வரியைப் போலவே முதுகலைப் பட்டதாரிகளான பாண்டியம்மாள், சாந்தி, மூவேந்திரன், கரிக்கோல்ராஜ், கார்த்தீஸ்வரி, விஜயலட்சுமி, சந்திரமோகன் ஆகியோரும் துப்புரவுப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துப்புரவுப் பணிகளைச் செய்யாமல், மாநகராட்சி நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு அழுக்குப்படாத ஒயிட் காலர் வேலை பார்க்கிறார்கள். இந்த 8 பேரும் அரசியல் பின்புலம் உள்ள வர்கள். இவர்களுக்கு மாற்றாக சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் கூறிய அந்த 8 பேரும் துப்புரவுப் பணியாளர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவ
"நான் படிச்ச படிப்புக்கு துப்புரவு வேலையைப் பார்க்க முடியுமா?''’
சமூக ஆர்வலர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சங்கரேஸ்வரன், சிவகாசி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளரான ஈஸ்வரி, அப்பணி மீதான வெறுப்பைத் தன்னிடம் இவ்வாறு வெளிப்படுத்தியதாக நம்மிடம் கூறினார்.
மேலும் அவர் "ஈஸ்வரியைப் போலவே முதுகலைப் பட்டதாரிகளான பாண்டியம்மாள், சாந்தி, மூவேந்திரன், கரிக்கோல்ராஜ், கார்த்தீஸ்வரி, விஜயலட்சுமி, சந்திரமோகன் ஆகியோரும் துப்புரவுப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துப்புரவுப் பணிகளைச் செய்யாமல், மாநகராட்சி நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு அழுக்குப்படாத ஒயிட் காலர் வேலை பார்க்கிறார்கள். இந்த 8 பேரும் அரசியல் பின்புலம் உள்ள வர்கள். இவர்களுக்கு மாற்றாக சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் கூறிய அந்த 8 பேரும் துப்புரவுப் பணியாளர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அலுவலகப் பணிகளைச் செய்து வருகின்றனர். 2019-ல் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்தப் பணிநியமன முறைகேடு இன்றுவரையிலும் தொடர்கிறது.
படிப்பறிவு இல்லாதவர்களுக்கு துப்புரவுப் பணி போன்ற வேலைகளே வாழ்வாதாரமாக உள்ளன. இவர் களுக்கான வேலை வாய்ப்பினை, டிப்ளமோ, இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தட்டிப்பறித்து விடுகின்றனர். இவர்கள் படித்த படிப்புக்கு சிவகாசி போன்ற ஊர்களில் தனியார் நிறுவனங்களில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே பெரிய விஷயம். துப்புரவுப் பணி என்றாலும் அரசாங்க வேலை. ரூ.25000 வரை சம்பளம் கிடைக்கிறது. ‘எப்படியாவது குறுக்கு வழியில் முதலில் இந்த வேலையில் சேர்ந்துவிடுவோம். பிறகு, தங்களது படிப்புக்கு ஏற்றாற்போல் அரசாங்கமே பதவி உயர்வு தந்துவிடும்.’ இந்த மனநிலையில்தான் தமிழ்நாடு முழுவதும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள், துப்புரவுப் பணியாளர் லேபிளில் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளி லும் அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்''’ என்றார். இந்த விவகாரத்தை 2019-லிருந்தே கையில் எடுத்த சங்கரேஸ்வரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற்று, முதலமைச்சரின் தனிப்பிரிவு, நகராட்சி நிர்வாக இயக்குநர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து மனுக்களை அனுப்பி வந்திருக்கிறார். கள ஆய்வு செய்ததாகவும், அந்த 8 பேருக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்... முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு சிவகாசி மாநகராட்சி தகவல் அனுப்பியிருக்கிறது.
சங்கரேஸ்வரனோ, "நான் அனுப்பிய ஒவ்வொரு மனு மீதும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகப் பொய்யான தகவல்களை சிவகாசி மாநகராட்சி அனுப்புகிறது'' என்றார் எரிச்சலுடன்.
சங்கரேஸ்வரன் குறிப்பிட்டிருந்த சில பெண் ஊழியர்களிடம் பேசினோம். "கடந்த ஏழு வருஷமா இல்லாத பிரச்சனை இப்ப வந்திருக்கு. ஒருத்தன் அனுப்புன பெட்டிஷன்ல மாட்டிக்கிட்டோம். சீக்கிரமே எங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய ப்ரமோஷன் கிடைச்சிரும். அதற்கான எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு அதிகாரி கிட்டயும் போயி, இவங்கள ஏன் இந்த வேலைல வச்சிருக்கீங்கன்னு பெட்டிசன் போட்டவன் கேட்டதுனால, இப்ப எல்லாரும் துப்புரவுத்துறைல வேலை பார்த்துட்டு இருக்கோம். எனக்கு உரக்கிடங்குல வேலை. இந்தப் பிரச்சனை எப்படி ஆரம்பிச்சதுன்னா.. சங்கர்ங்கிறவன் பூக்கடைல வச்சு எங்ககூட வேலை பார்க்கிற பெண் ஊழியரை அடிக்கடி கிண்டல் பண்ணுனான். நான் தட்டிக் கேட்டேன். ஒரு பொண்ணுகிட்ட இப்படியா அநாகரிகமா நடந்துக்கிறதுன்னு திட்டி னேன். அப்ப இருந்து எங்கள சுற்றிச் சுற்றி வந்தானுக. சங்கர் என்னைவிட வயசுல சின்னவன். நேரடியா என்னை மிரட்டுனான். என் வேலைய காப்பாத்திக்கிறதுக்காக, பத்தாயிரமோ, இருபதாயிரமோ தர்றேன்னு சொன்னேன். அவன், ஒரு லட்சம் வேணும்னு சொன்னான். என்னை மாதிரியே வேலைக்கு வந்த 13 பேர்கிட்ட தலைக்கு ஒரு லட்சம் வாங்கிக் கொடுன்னு கேட்டான். கொடுக்க லைன்னா கோர்ட்ல கேஸ் போடுவேன்னு சொன்னான். முடிஞ்சா கேஸ் போடுன்னு சொல்லிட் டோம். அவன் எதிர்பார்த்த 13 லட்ச ரூபாய் கிடைக்கல. எங்க மேல பெட்டிஷன் போட்டான். அவன் மேல கள்ளநோட்டு கேஸ் ஓடிட்டிருக்குன்னு அவன் சொந்தக்காரங்களே சொல்லுறாங்க. அவன் வேலையே, இந்தமாதிரி பெட்டிஷன் போட்டு பணம் பறிக்கிறதுதான். சிவகாசில இருந்து சங்கரன்கோயில் வரைக்கும் வி.ஏ.ஓ., தாசில்தார்னு ஒருத்தர விடமாட்டான். அவனுக்கு பேக்ரவுண்ட்ல கட்சி வேற இருக்கு. இந்த மாச வீட்டு வாடகை கொடுக்கிறதுக்கு ஏதாச்சும் ஒரு வி.ஏ.ஓ. மாட்டாமலா போயிருவான்னு கேசுவலா சொல்லுவானாம். அவன்கிட்ட நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்''’என்றார் பரிதாபமாக.
சங்கரேஸ்வரனைத் தொடர்புகொண்டு பெண் ஊழியர்களின் குமுறலைச் சொன்ன போது “"நான் பணத்துக்காக பெட்டிசன் போடல''’என்று மறுத்தார்.
சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். "சம் பந்தப்பட்ட பெண் ஊழியர்கள், அவங்களுக்கு எதுவும் பிரச்சனைன்னா என்கிட்ட புகார் கொடுக்கலாம். பணி நியமனத்துல என்ன நடந்துச்சுன்னு முழுமையா விசாரிக் கிறேன்''’என்றார்.
உள்ளாட்சி அமைப்புகள் பலவற்றிலும், துப்புரவுப் பணி நியமனங்களில் தில்லுமுல்லு நடப்பதும், பெண் ஊழியர்கள் மிரட்டப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.