Advertisment

சங்கே முழங்கு! -ஒன்றிய அரசுக்கு எதிராகத் திரண்ட தொழிலாளர்கள்!

aa

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட் டத்தின் ஒரு முக்கிய எழுச்சிப் போராட்டமான வெள்ளை யனே வெளியேறு இயக்கம் கண்ட நாள் ஆகஸ்ட் 9-ம் தேதி. அதே ஆகஸ்ட் 9-ம் தேதி அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் இணைந்தன. தேசம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை முதல் மாலை வரை தொழிற்சங்கங்களின் பெருந்திரள் அமர்வாக வீறுகொண்டு எழுந்தார்கள்.

Advertisment

அந்நிகழ்வில் எழுச்சியுரை யாற்றிய தொழிற்சங்கவாதிகள் பலரும் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத, ஜனநாயக வி

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட் டத்தின் ஒரு முக்கிய எழுச்சிப் போராட்டமான வெள்ளை யனே வெளியேறு இயக்கம் கண்ட நாள் ஆகஸ்ட் 9-ம் தேதி. அதே ஆகஸ்ட் 9-ம் தேதி அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் இணைந்தன. தேசம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை முதல் மாலை வரை தொழிற்சங்கங்களின் பெருந்திரள் அமர்வாக வீறுகொண்டு எழுந்தார்கள்.

Advertisment

அந்நிகழ்வில் எழுச்சியுரை யாற்றிய தொழிற்சங்கவாதிகள் பலரும் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத, ஜனநாயக விரோத, இனவாத ஒன்றிய பா.ஜ.க.வின் சர்வாதிகார அரசைக் கண்டித்து பேருரை யாற்றினார்கள்.

நாட்டின் வளர்ச்சி மற் றும் பொருளாதார முன்னேற் றத்திற்கு தடையாக பொதுத் துறைகளை கார்ப்பரேட்டு களுக்கு தாரைவார்த்தல், மாநில அரசுகளின் உள்ளாட்சி நிர் வாகத் துறைகளில் மூக்கை நுழைக்கும் ஒன்றிய அரசின் காண்ட்ராக்ட் முறைகளைக் கைவிடக்கோரியும், மக்களை பிளவுபடுத்தும் மத வெறி, இனவெறி அரசியல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அடாவடி நட வடிக்கைகளைக் கண்டித்த எதிர்ப் புக்குரலாகவே ‘தொழிலாளர் போராட்டம்’அமைந்தது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு எடுத் துள்ள நடவடிக்கையை முழு மனதோடு வரவேற்றதோடு, அதன் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ள தொழி லாளர்களை காலிப் பணியிடங் கள் உள்ள டாஸ்மாக் கடைகள் அல்லது மற்ற அரசுத் துறைகளில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Advertisment

aa

ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் அவர்களது உழைப்பை சுரண்டி வருகின்றன. கேரள மாநிலம் போன்று ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையா மல் இருக்க தமிழக அரசு இதற்கான ஒரு ‘செயலி’ உருவாக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதோடு ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களை தடை செய்திட கோரிக்கை வைத்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி யாளர் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்குதல், ஒப்பந்த முறை ஓட்டுநர்கள் நியமனம், ஓய்வு பெற்ற ஓட்டுநர் நடத்துனர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதை கைவிடுதல், ஓட்டுதல் திறன் மேம்பட்ட பயிற்சி பெற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி எட்டு ஆண்டு களாக நிறுத்தி வைத்துள்ளதை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் மோடியின் மத்திய பா.ஜ.க. அரசு அதன் ஆக்டோபஸ் கரங்களை பல சந்து பொந்து வழிகளிலும் நுழைக்க முயற்சிக்கும் தந் திரங்களை முறியடிப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூடலாகவே இப்பெருந்திரள் கூட்டம் பெரும் மக்கள் மாநாடாக நடந்து முடிந்தது.

-சுந்தர் சிவலிங்கம்

nkn160823
இதையும் படியுங்கள்
Subscribe