மிழகத்தில் கனிம வள கொள்ளைகள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் கடந்த வாரம் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவத்தைச் செய்தவர் முக்கிய பிரமுகருக்கு நெருக்கமான கரிகாலன் என்பவர்.

Advertisment

தமிழக, கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, கோவையின் பொள்ளாச்சி, கர்நாடகாவின் எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி பகுதிகளில் இயற்கை வளமான மணல் மற்றும் எம் சேண்ட், கருங்கல் ஜல்லிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

Advertisment

இந்த மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்காத மலைப் பகுதிகளே இல்லை. தாமிரபரணி, வைகை, சிறுவாணி ஆற்றுப்பகுதிகளில் இயற்கை வளக்கொள்ளையை எதிர்த்து போராடாத மக்கள் பிரிவினரே இல்லை. நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் பல இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.

kk

போராடும் மக்கள் மீது தமிழகப் போலீசார் கண்மூடித்தனமாக வழக்குகள் போடுகின்றனர். போராடும் அவர்கள் மீது ஒரு மிகப்பெரிய ரவுடி கும்பல் தாக்குதல்கள் நடத்துகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறையில் எந்த நியாயமும் கிடைப்பதில்லை. தீண்டாமைக் கொடுமையை விட மிகப்பெரிய கொடுமையாக இந்த இயற்கை வளக் கொள்ளையும், அதை எதிர்த்த போராட் டங்களும் இந்த மாவட்டங்களில் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த இயற்கை வளங்களை சுரண்டுபவர்கள் ஒரு பைசாகூட அரசுக்கு வரியாகச் செலுத்துவதில்லை. இயற்கை வளங்களை அழியாமல் தடுப்பதற்கு அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அடியாட்கள் துணையுடன் நடக்கும் இந்தக் கொள்ளை மூலமாக தினமும் நாலாயிரம் லாரிகள் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் பறக்கின்றன. இந்த பல சக்கரங்களைப் பொருத்திய ராட்சச லாரிகள் அங்கிருக்கக்கூடிய இரு மாநில செக்போஸ்ட்டுகள் எதையும் கண்டுகொள்வதில்லை. இரவு பகல் எனப் பாராமல் லாரிகள் பறக்கின்றன.

ஒரு லோடு இயற்கை வளத்தை கேரளாவிற்கோ கர்நாடகாவிற்கோ கொண்டு சென்றால் அங்கு அது அறுப தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த இயற்கை வளம் இலவசமாக வே அள்ளப்படுகின்றது. அதைக் கொண்டுபோகும் லாரிகளின் வாடகை, டீசல் மற்றும் செக்போஸ்ட் செலவுகள் மட்டும்தான். நாலாயிரம் லாரிகள் கேர ளாவிற்கோ கர்நாடகா விற்கோ அணிவகுப்பதால் ஆகக்கூடிய செலவு ஒரு கோடி ரூபாய். அந்த சரக்குகளை அங்கு இறக்கினால் கிடைப்பது இரண்டு கோடி ரூபாய். தினமும் லாபம் மட்டும் ஒரு கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கு 365 கோடி ரூபாய் லாபம் குவிகிறது.

இப்படி ஒரு வரு டத்தில் வெளி மாநில வியாபாரம் மூலம் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் முக்கிய பிரமுக ருக்குச் செல்கிறது என்கி றார்கள் கோட்டை வட்டா ரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விவரங்கள் எப்படி வெளியாகிறது என்றால் இதே வியாபாரத்தை முக்கிய பிரமுகர் ஒருவருக்கு 25 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து ஒருவர் செய்துவந்தார்.

மணல் தொழிலில் நல்ல சரக்கு கொடுப்பவர் எனப் பெயரெடுத்த அந்த நபர் நந்தகுமார். நந்த குமாரிடமிருந்து வெளி மாநிலங்களுக்கு இயற்கை வளங்களைக் கொண்டு செல்லும் ஒப்பந்தத்தை இந்த கரிகாலன் அடியாட்கள் மூலமாக நந்த குமாரை மிரட்டிப் பறித்து விட்டார். கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் இயற்கைவளத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்தி ருக்கிறது. மேற்படி நந்தகுமார் முக்கிய பிரமுகரிடம் அட்வான்சாகக் கொடுத்த 25 கோடி ரூபாயும் திரும்பக் கிடைக்கவில்லை. நீதி கேட்டு கண்ணகிபோல் கோட்டை வட்டாரங்களில் சுற்றி வருகிறார் நந்தகுமார். அவரைப் பார்க்கக்கூட முக்கிய பிரமுகர் இசையவில்லை என்கிறார்கள் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இது தவிர ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் கரிகாலன்தான் தேவையான இயற்கை வளங்களை சப்ளை செய்கிறார். தினமும் பதினைந்தாயிரம் லாரிகள் தமிழ்நாட்டில் உள்ள மலைகளை, ஆற்றுப் படுகைகளை குடைந்தெடுத்து, அவற்றை காசு பணமாக மாற்றிக்கொண்டிருக் கின்றனர். இவை எவற்றிற்கும் அளவே இல்லை. அரசாங்கம் இதைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. இவையனைத்தும் இலவசமாகவே எடுக்கப்படு கின்றன. நெடுஞ்சாலைத்துறைப் பணிகளுக்கு எடுக்கப்படும் சாதாரண மண் கூட கரிகாலன் வகையறாக்களின் கண்ட்ரோலில்தான் வருகிறது.

இவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். 2023ஆம் ஆண்டு மே மாதம் கரிகாலனின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் ஒரு நிலத் தகராறில் ரவி என்கிற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அடித்தே கொன்றதாக ஒரு புகார் காவல் துறையில் பதிவாகியுள்ளது. இது வரை அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல ஒட்டுமொத்த சட்டத்தையும் கையில் எடுத்துக்கொண்டு கரிகாலன் கும்பல் அட்டகாசம் செய்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. அதையெல்லாம் இன்றுவரை முக்கிய பிரமுகர் பேரைச் சொல்லியே கரிகாலன் சமாளித்துவருகிறார்.

Advertisment

____________

இறுதிச் சுற்று

fr

பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களை திங்கள்கிழமை (21-08-2023) துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டா-ன். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், முதலமைச்சரின் அலுவலக நுழைவாயில் அருகில், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில், "முதலமைச்சரின் பசுமை ஃபெல்லோஷிப்' திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்-யன் -ட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டா-ன். இதனைத்தொடர்ந்து, கலைஞரின் நூற்றாண்டினை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

-இளையர்